||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ நம்பிள்ளை
(வாத்ஸ்ய வரதாசார்யர், கலிவைரி தாஸர்)
நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த இவரே பிற்காலத்தில் நம்பிள்ளை என்று பிரஸித்தர் ஆனார் . இவர் திருக்கலிக்கன்றி தாஸர், கலிவைரி தாஸர் , லோகாசார்யர், சூக்தி மஹார்ணவர், ஜகதாசார்யர் மற்றும் உலகாசிரியர் என்ற திருநாமங்களாலும் போற்றி வணங்கப்படுகிறார்.
நம்பிள்ளை தனித்துவம் பொருந்திய பல ஆத்ம குணங்களோடு கூடியவராய் அளவிலடங்கா பெருமைகளுக்குறைவிடமாய் எழுந்தருளி இருந்தார். தமிழ் மற்றும் வடமொழிகளில் மிகவும் தேர்ந்தவராய் நம்பிள்ளை விளங்கினார்.
இவருக்கு சென்னை திருவல்லிக்கேணியில் "கோமுட்டி பங்களா" என்று பொதுவாக அழைக்கப்படும் ஸ்ரீ பண்டாரம் கமிட்டியின் முன்புறம் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
- மாதம் - கார்த்திகை
- திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
- அவதார ஸ்தலம் - நம்பூர்
- ஆசார்யன் - நஞ்சீயர்
- ஸிஷ்யர்கள் - வடக்குத் திருவீதிப் பிள்ளை , பெரியவாச்சான் பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் , ஈயுண்ணி மாதவப் பெருமாள், நடுவில் திருவீதிப் பிள்ளை பட்டர் மற்றும் பலர்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - திருவாய்மொழி 36000 படி ஈடு வியாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வியாக்யானம், திருவந்தாதி வ்யாக்யானங்கள், திருவிருத்தம் வியாக்யானம்
-----
தனியன்
1. வேதாந்த வேத்ய அம்ருத வாரி ராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமர்க்யம்|
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலி வைரி தாஸம்||
2. வ்ருச்சிகே கிருத்திகா ஜாதம்
கலி வரி குரும் பஜே|
வேதாந்தி முனி பாதாப்ஜ
ஸ்ரீ தம் ஸூக்தி மஹார்ணவம்||
-----
வாழி திருநாமம்
1. தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே|
திருவரையில் பட்டாடை சேர் மருங்கும் வாழியே|
தாம மணி வட மார்வும் புரி நூலும் வாழியே|
தாமரைக் கை இணை அழகும் தடம் புயமும் வாழியே|
பாமருவும் தமிழ் வேதம் பயில் பவளம் வாழியே|
பாடியத்தின் பொருள் தன்னைப் பகர் நாவும் வாழியே|
நாமநுதல் மதி முகமும் திருமுடியும் வாழியே|
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே||
2. காதலுடன் நஞ்சீயர் கழல் தொழுவோன் வாழியே|
கார்த்திகைக் கார்த்திகை உதித்த கலிகன்றி வாழியே|
போதமுடன் ஆழ்வார் சொல் பொருள் உரைப்போன் வாழியே|
பூதூரான் பாடியத்தைப் புகழும் அவன் வாழியே|
மாதகவால் எவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே|
மதிள் அரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே|
நாதமுனி ஆளவந்தார் நலம் புகழ்வோன் வாழியே|
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment