About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

3. ஸ்ரீ ஸேனை முதலியார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ ஸேனை முதலியார்
(விஷ்வக்ஸேநர்)


சேனை முதலியார் பெரிய பெருமாளின் படைத் தலைவர். பரமபதத்தில் இருந்து லீலா விபூதியில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் (படைத்தல், காத்தல், அழித்தல்) தொழில்களை மேற்பார்வையிடும் சேனாபதியாக இருக்கிறார். அவரே முன்றாவது ஆசார்யர்.

  • மாதம் - ஐப்பசி
  • திரு நக்ஷத்திரம் - பூராடம்
  • ஆசார்யன் - பெரிய பிராட்டியார்
  • அருளிச் செய்தவை - விஷ்வக்ஸேன ஸம்ஹிதை

-----
தனியன்
ஸ்ரீரங்க சந்த்ர மஸம் இந்திரயா விஹர்தும்
விந்யஸ்ய விஸ்வசித சிந்நய நாதிகாரம்|
யோ நிர்வஹத்ய நிஸமங்குளி முத்ரயைவ
ஸேநாந்யம் அந்ய விமுகாஸ் தமஸி² ஸ²ரியாம||
-----
வாழித் திருநாமம்
1. ஓங்கு துலாப் பூராடத்து உதித்த செல்வன் வாழியே|
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே|
ஈங்கு உலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே|
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்தும் அவன் வாழியே|
பாங்குடன் முப்பத்து மூவர் பணியும் அவன் வாழியே|
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே|
தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே|
ஸேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே||

2. இப்புவியில் அரங்கேசர் சேனையர் கோன் வாழியே|
இந்திரற்கும் அரன் அயற்கும் நியமிப்போம் வாழியே|
 ஐப்பசியில் பூராடத்து அவதரித்தான் வாழியே|
அழகாரும் சூத்ரவதியாள் அன்பன் வாழியே|
எப்புவியும் விதிகளின் முன் ஏத்தும் அவன் வாழியே|
எழிற் குறுகை நகர் முனிவர்க்கு அருள் புரிந்தான் வாழியே|
அற்புதமார் திருமகளார் அடி முடியோன் வாழியே|
அலங்காரச் சேனையர் கோன் அடி இணைகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment