||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ மணக்கால் நம்பி
(ஸ்ரீராம மிச்ரர்)
மணக்கால் நம்பி, உய்யக்கொண்டாரின் சிஷ்யர். நாதமுனிகள் தன் மகன் ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது சிஷ்யன் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசார்யரின், விருப்பப்படி ஈசுரமுனியின் மகனுக்கு 'யமுனைத் துறைவன்' என்று பெயர் சூட்டினார்.
- மாதம் - மாசி
- திரு நக்ஷத்திரம் - மகம்
- அவதார ஸ்தலம் - மணக்கால் (ஸ்ரீரங்கம் அருகே காவிரி நதிக்கரையில் இருக்கும் கிராமம்)
- ஆசார்யன் - உய்யக் கொண்டார்
- ஸிஷ்யர்கள் - ஆளவந்தார், திருவரங்கப் பெருமாள் அரையர் (ஆளவந்தாருடைய திருக்குமாரர்), தெய்வதுக்கரசு நம்பி, பிள்ளை அரசு நம்பி, சிறு புள்ளூருடையார் பிள்ளை, திருமாலிருஞ்சோலை தாஸர், வங்கிபுரத்து ஆச்சி
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - பெருமாள் திருமொழி தனியன்
----
தனியன்
1. அயத்நதோ யாமுநம் ஆத்ம தாஸம்
அலர்க்க பத்ரார்ப்பண நிஷ்க்ரயேண|
ய: க்ரீதவான் ஆஸ்தித யௌவ ராஜ்யம்
நமாமிதம் ராம மேய ஸத்வம்||
2. கும்ப மாஸே மகோத போதம்
ராம மிஸ்ரம் உபாஸ்மஹே|
புண்டரீகாக்ஷ பாதாப்ஜ
ஸமாஸ்ரயண சாலினம்||
----
வாழி திருநாமம்
1. தேசம் உய்யக் கொண்டவர் தாள் சென்னி வைப்போன் வாழியே|
தென் அரங்கர் சீர் அருளைச் சேர்ந்து இருப்போன் வாழியே|
தாசரதி திருநாமம் தழைக்க வந்தோன் வாழியே|
தமிழ் நாதமுனி உகப்பைத் தாபித்தான் வாழியே|
நேசமுடன் ஆரியனை நியமித்தான் வாழியே|
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே|
மாசி மகம் தனில் விளங்க வந்து உதித்தான் வாழியே|
மால் மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே||
2. உய்யக்கொண்டார் அடியை உகந்து அடைந்தோன் வாழியே|
ஒப்பில் மணக்கால் பதியில் உதித்து அருளோன் வாழியே|
துய்ய கும்ப மக நாளில் தோன்றல் உற்றோன் வாழியே|
துயரில் குணக் குழுவாகிச் சகம் புகழ்ந்தோன் வாழியே|
ஐயமற ஆளவந்தார்க்கு அருள் புரிந்தோன் வாழியே|
அவர்ப் பணிய அரங்கன் அடி நிதி கொடுத்தான் வாழியே|
செய்ய தமிழ் மாலைகளைச் சிந்திப்போன் வாழியே|
சீர் மணக்கால் நம்பிகள் தம் சேவடிகள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment