||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ நஞ்சீயர்
(வேதாந்தி)
இவருடைய பெற்றோர்கள் ஸ்ரீமாதவர் என்ற திருநாமத்தை இவருக்குச் சூட்டினார்கள். சிறிய வயதில் மிகப் பிரபலமான அத்வைத பண்டிதராக ஆனார். இறுதியில் பட்டர் இவருக்கு நஞ்சீயர் என்ற திருநாமத்தைச் சூட்டினார். இவருக்கு நிகமாந்த யோகி மற்றும் வேதாந்தி என்ற திருநாமங்களும் உண்டு.
மாதவாசார்யர் மிகப் பெரிய அத்வைத பண்டிதர். இவர் திருநாராயண புரத்தில் வாழ்ந்து வந்தார். எம்பெருமானார் இவரை திருத்திப்பணிகொண்டு நமது ஸம்பிரதாயத்திற்க்கு அழைத்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். எம்பெருமானார் மாதவாசார்யரை திருத்திப் பணிகொள்வதற்காக பட்டரை நியமித்தார். அத்வைதியாக இருந்த நஞ்சீயர் பராசர பட்டரால் வைணவ மரபுக்கு அழைத்து வரப்பட்டவர்.
பட்டர் ஒரு நாள் பகலெல்லாம் வழியில் நடந்து, களைப்பால் நஞ்சீயருடைய மடியில் தலையைச் சாய்த்து உறங்கினார். நஞ்சீயரும் இரவு முழுவதும் அசையாமல் இருந்தார். இதிலிருந்து அவருடைய குருபக்தியை நாம் அறிய முடிகிறது. நஞ்சீயர் இந்த பூவுலகத்திலே 100 ஆண்டு காலம் வாழ்ந்து பரமபதத்தை அடைந்தார்.
- மாதம் - பங்குனி
- திரு நக்ஷத்திரம் - உத்திரம்
- அவதார ஸ்தலம் - திருநாராயண புரம்
- ஆசார்யன் - பராசர பட்டர்
- ஸிஷ்யர்கள் - நம்பிள்ளை, ஸ்ரீ ஸேனாதிபதி ஜீயர் மற்றும் பலர்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - திருவாய்மொழி 9000 படி வ்யாக்யானம், கண்ணிநுண் சிறுத்தாம்பு வ்யாக்யானம், திருப்பாவை வ்யாக்யானம், திருவந்தாதிகளுக்கு வ்யாக்யானம், சரணாகதி கத்ய வ்யாக்யானம், திருப்பல்லாண்டு வ்யாக்யானம், நூற்றெட்டு (108) என்ற ரஹஸ்ய த்ரய விவரண க்ரந்தம் – இவற்றுள் பல தற்பொழுது இல்லை
-----
தனியன்
நமோ வேதாந்த வேத்யாய
ஜகந் மங்கள ஹேதவே|
யஸ்ய வாகம் ருதஸார
பூரிதம் புவந த்ரயம்||
-----
வாழி திருநாமம்
தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே|
சீமா தவன் என்னும் செல்வனார் வாழியே|
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே|
பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தான் வாழியே|
ஒண்டொடியாள் கலவி தன்னை ஒழித்திட்டான் வாழியே|
ஒன்பதினாயிரப் பொருளை ஓதும் அவன் வாழியே|
எண் திசையும் சீர் பட்டர் இணை அடியோன் வாழியே|
எழில் பெருகும் நஞ்சீயர் இனிது ஊழி வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment