||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீமந் நாதமுனிகள்
(ஸ்ரீரங்க நாத முனி)
நாதமுனிகள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுத்தவர். நம்மாழ்வாரின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் பின்பு வாழ்ந்தவர். குடந்தையில் 'ஆரா அமுதே' என்ற நம்மாழ்வார் பாசுரத்தை சிலர் சேவிக்கக் கேட்டு 'குருகூர் சடகோபன்' என அதன் இறுதி வரியில் இருந்த பதத்தைக் கொண்டு மற்ற பாடல்களைத் தேடி திருக்குருகூருக்கு வந்து மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை 12,000 முறை நம்மாழ்வார் இருந்த புளியமரத்தின் முன் நின்று ஓத, நம்மாழ்வார் அவர்முன் தோன்றி தான் இயற்றிய பிரபந்தங்கள் அனைத்தையும் நாதமுனிகளுக்கு அளித்ததாகத் தொன்மம் கூறுகிறது. இதனால் நம்மாழ்வார் நாதமுனியின் ஆசார்யராகவே கருதப்படுகிறார்.
- மாதம் - ஆனி
- திரு நக்ஷத்திரம் - அநுஷம்
- அவதார ஸ்தலம் - காட்டு மன்னார் கோவில் (வீர நாராயணபுரம்)
- ஸிஷ்யர்கள் - உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், பிள்ளை கருணாகர தாஸர், நம்பி கருணாகர தாஸர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான், வானமாமலை தெய்வ நாயக ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான், கீழை அகத்தாழ்வான், மேலை அகத்தாழ்வான்
- ஆசார்யன் - நம்மாழ்வார்
- அருளிச் செய்தவை - நியாய தத்வம், யோக ரஹஸ்யம், புருஷ நிர்ணயம், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன், கண்ணிநுண் சிறுத்தாம்பு தனியன்கள், திருவாய்மொழி தனியன்
-----
தனியன்
நம: அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட
ஜ்ஞாந வைராக்ய ராஸயே|
நாதாய முனயே அகாத
பகவத் பக்தி ஸிந்தவே||
-----
வாழி திருநாமம்
1. ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே|
ஆளவந்தார்க்கு உபதேசம் அருளி வைத்தான் வாழியே|
பானு தெற்கில் கண்டவன் சொல் பல உரைத்தான் வாழியே|
பராங்குசனார் சொல் ப்ரபந்தம் பரிந்து கற்றான் வாழியே|
கானமுறத் தாளத்தில் கண்டு இசைத்தான் வாழியே|
கருணையினால் உபதேசக் கதி அளித்தான் வாழியே|
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே|
நலம் திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே||
2. சேமம் கொள் வீர நாராயண புரத்தான் வாழியே|
செல்வ முற்றும் ஆனி தனில் அனிடத்தான் வாழியே|
தேமருவு தென்குருகூர் நகர் அமர்ந்தான் வாழியே|
தேசு மிகு சடகோபன் சரண் அடைந்தான் வாழியே|
நாம் உய்ய நாலாயிரத்தின் பொருள் அளித்தான் வாழியே|
நன்றாக தாளத்தில் இசைத்து உரைத்தான் வாழியே|
சீர் முகுத்த யோகமுடைச் செல்வனார் வாழியே|
திருப்பொலிந்த நாதமுனி திருவடிகள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment