||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)
திவ்ய தேசத்து எம்பெருமான் திருநாமத்தையே இவருக்கு வைத்தார்கள். இவருக்கு பத்மாக்ஷர் என்ற திருநாமமும் உண்டு, ஆனால் உய்யக்கொண்டார் என்ற திருநாமமே இன்றளவும் ப்ரசித்தியாக உள்ளது.
உய்யக்கொண்டாரும், குருகைக் காவலப்பனும் நாதமுனிகளுடைய முக்கியமான அந்தரங்க ஸிஷ்யர்களாக இருந்தார்கள். நாதமுனிகளுக்குப் பிறகு, உய்யக்கொண்டார் தர்ஸன ப்ரவர்த்தகராக (நம் ஸம்ப்ரதாயத்தைப் பாதுகாத்துப் பரப்புபவர்) ஆனார். அவருடய ஸிஷ்யர்களுக்கு அருளி செயல் மற்றும் சகல அர்த்த விசேஷங்களையும் சொல்லிக் கொடுத்தார். அவர் பரமபதத்துக்கு செல்வதற்கு முன், மணக்கால் நம்பி (ப்ரதான அந்தரங்க ஸிஷ்யர்) அடுத்த தர்ஸன ப்ரவர்தகர் யார் என்று கேட்க, அவர் மணக்கால் நம்பியையே ஸம்ப்ரதாயத்தை வளர்க்குமாறு கூறினார். யமுனைத்துறைவரை அடுத்த தர்ஸன ப்ரவர்த்தகராக உருவாக்குமாறு கட்டளையிட்டார்.
- மாதம் - சித்திரை
- திரு நக்ஷத்திரம் - க்ருத்திகை
- அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
- ஆசார்யன் - நாதமுனிகள்
- ஸிஷ்யர்கள் - மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
- அருளிச் செய்தவை - திருப்பாவை தனியன்கள்
----
தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத:
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத்
குல நாதாய தீமதே||
2. மேஷ மாஸே சரோஜாஷம்
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ
த்வந்த ப்ரவண மாநசம்||
3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம்
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம் சவ்ரேர்
அவதாரம் இவா பரம்||
----
வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||
2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே|
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே|
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment