||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
இரண்டாவது ஆசார்யராகக் கருதப்படுபவர் பெரிய பிராட்டி (திருமகள், ஸ்ரீரங்கநாயகித் தாயார்). பிராட்டி பெரிய பெருமாளை அகலாது இருப்பவள், அன்புக்குரியவள். பெரிய பிராட்டிக்கு திருமால் த்வய மந்திரத்தை உபதேசம் செய்ததால் பிராட்டி பெரிய பெருமாளின் மாணவியாகவும் வைணவ மரபின் அடுத்த ஆசார்யராகவும் ஆகிறாள்.
- மாதம் - பங்குனி மாதம்
- திரு நக்ஷத்திரம் - உத்திரம்
- ஆசார்யன் - பெரிய பெருமாள்
------
தனியன்
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத்
ப்ரூ விப்ரம பேதத:|
ஈஸே²ஸி²தவ்ய வைஷம்ய
நிம்நோந்நதம் இதம் ஜகத்||
------
வாழித் திருநாமம்
1. பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே|
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியே|
மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே|
மால் அரங்கர் மணி மார்பை மன்னும் அவள் வாழியே|
எங்கள் எழில் ஸேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே|
இருபத்தி அஞ்சு உட்பொருள் மால் இயம்பும் அவள் வாழியே|
செங்கமலச் செய் அரங்கம் செழிக்க வந்தாள் வாழியே|
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே||
2. செங்கமலப் பூவுதித்த பாவை நல்லாள் வாழியே|
சீர்மிகு மங்கையர் கழுத்தில் திருவானாள் வாழியே|
பங்குனியில் உத்தர நாள் பார் உதித்தாள் வாழியே|
பகரும் இரு பாக்கிமாய் என்ற செல்வி வாழியே|
அங்கயல் பாய் வயல் அரங்கம் சிறக்க வந்தாள் வாழியே|
அணி அரங்கன் திருமார்பில் அமர்ந்து அருள்வாள் வாழியே|
இங்கிதத்தால் திருமாலுக்கு இதம் உழைப்பாள் வாழியே|
ஏராரும் திருமகளார் இணை அடிகள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment