About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 3 December 2025

1. ஸ்ரீ பெரிய பெருமாள்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ பெரிய பெருமாள்


ஒராண் வழி ஆசார்ய பரம்பரையில் முதலில் இருப்பது திருமால் (பெரிய பெருமாள், ஸ்ரீமந் நாராயணன்).ஆசார்ய பீடம் என்பது உயர்ந்த பீடமாக இருப்பதனாலும் இறைவனை விடத் தகுதியான ஒருவர் ஆசார்யராக இருக்க முடியாது என்பதனாலும் இந்த நிரையின் முதல் குரு பெரிய பெருமாளே.

  • மாதம் - பங்குனி
  • திரு நக்ஷத்திரம் - ரோஹிணி
  • அருளிச் செய்தவை - பகவத் கீதை, ஸ்ரீ ஸைலேஸ தயாபாத்ரம் தனியன்

------
தனியன்
1. தபஸ்யே மாசி ரோஹிண்யாம் 
தடே ஸஹ்ய புவஸ் ஸ்திதம்|
ஸ்ரீ ரங்க ஸாயிநம் வந்தே ஸேவிதம் 
ஸர்வ தேஸிகை||

2. ஸ்ரீ ஸ்தநா பரணம் தேஜஸ் 
ஸ்ரீ ரங்கேஸ²யம் ஆஸ்ரயே|
சிந்தாமணிம் இவோத் வாந்தம் 
உத்ஸங்கே அநந்த போகிநஹ||

3. லசஷ்மீ கல்பல தோத்துங்க 
ஸ்தந ஸ்தபக சஞ்சலஹ| 
ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கோமே 
ரமதாம் மானஸாம்புஜே||
---------
வாழித் திருநாமம்
1. திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே|
செய்ய விடைத் தாய் மகளார் சேவிப்போன் வாழியே|
இரு விசும்பில் வீற்று இருக்கும் இமையவர் கோன் வாழியே|
இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே|
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே|
அந்தரியா மித்துவமும் ஆயினான் வாழியே|
பெருகி வரும் பொன்னி நடுப் பின் துயின்றான் வாழியே|
பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே||

2. இரு விசும்பில் திருமகேளாடு இனிது அமர்ந்தான் வாழியே|
இயற் பூமி நீளைகளோடு இணங்கி நிற்பான் வாழியே|
திருவரங்கப் பெருநகருள் திகழ்ந்த பிரான் வாழியே|
தீர்த்தங் கொள் பாற்கடலுள் துயில் அமர்ந்தான் வாழியே|
அருமறையின் பொருளாகும் அச்சுதனார் வாழியே|
அகிலத்தின் இதயத்துள் இருப்புடையோன் வாழியே|
விரதங்கள் அனைத்திற்கும் விரும்பி நிற்போன் வாழியே|
விடலரிய பெரிய பெருமாள் அடிகள் வாழியே||

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment