||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வடக்குத் திருவீதிப் பிள்ளை
(க்ருஷ்ண பாதர்)
ஸ்ரீ க்ருஷ்ண பாதர் அவருடைய இயற்பெயர். ஶ்ரீரங்கத்தின் வடக்கு திருவீதியில் வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றார். அவரது மகன்கள் வைணவ ஆசாரியர்களான பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். இருவரும் வடக்கு திருவீதிப் பிள்ளையிடம் கல்வி கற்றனர்.
நம்பிள்ளையிடம் பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி 240000 படி உரையைப் பாடம் கேட்டவற்றைத் தன் குறிப்போடு பட்டோலையில் எழுதி வைத்தார். ஒரு நாள் அதைப் பார்வையிட்ட நம்பிள்ளை அது பெரியவாச்சான் பிள்ளையின் உரையை விட சிறப்பாக இருந்ததைக் கண்டு தன்னிடம் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். ஈயுண்ணி மாதவப் பெருமாள் அவற்றை நம்பிள்ளையிடமிருந்து பெற்று தன் சீடர்களுக்குக் கற்பித்தார். மாதவப் பெருமாளின் குருபரம்பரையில் வந்த மணவாள மாமுனிகள் 36000 படி ஈட்டை ஶ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் நம்பெருமாளின் முன் காலக்ஷேபம் செய்தார்.
வடக்கு திருவீதைப் பிள்ளை திருவாய்மொழிக்கு எழுதிய உரை 360000 படி ஈடு என வழங்கப்பட்டது. ஈடு என்றால் மூல செய்யுளுக்கு இணையான என்று பொருள்படும்.
- மாதம் - ஆனி
- திரு நக்ஷத்திரம் - ஸ்வாதி
- அவதார ஸ்தலம் - திருவரங்கம்
- ஆசார்யன் - நம்பிள்ளை
- ஸிஷ்யர்கள் - பிள்ளை லோகாசார்யர், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் மற்றும் பலர்
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- அருளிச் செய்தவை - ஈடு 36000 படி
-----
தனியன்
1. ஸ்ரீ க்ருஷ்ண பாத பாதாப்ஜே
நமாமி ஸி²ரஸா ஸதா|
யத் ப்ரஸாதப் ப்ரபா வேந
ஸர்வ ஸித்திர பூந்மம||
2. மிதுநே ஸ்வாதி ஸம்பூதம்
கலிவைரி பதாஸ்² ரிதம்|
உதக் ப்ரதோளீ நிலயம்
க்ருஷ்ண பாத மஹம் பஜே||
-----
வாழி திருநாமம்
ஆனி தனில் சோதி நன்னாள் அவதரித்தான் வாழியே|
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
தான் உகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே|
சடகோபன் தமிழ்க்கு ஈடு சாற்றினான் வாழியே|
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே|
நல்ல உலகாரியனை நமக்கு அளித்தான் வாழியே|
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே|
எங்கள் வடவீதிப்பிள்ளை இணை அடிகள் வாழியே||
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||


No comments:
Post a Comment