About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 2 December 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 4

தவ ஸுப்ரபா⁴தம் அரவிந்த³ லோசநே
ப⁴வது பிரஸந்ந முக² சந்த்³ர மண்ட³லே|
விதி⁴ ஸங்கரேந்த்³ர வநிதாபி⁴ர் அர்ச்சிதே
விருஷ ஸைலநாத² த³யிதே த³யாநிதே⁴||

  • தவ – உனக்கு, உம்முடைய
  • ஸுப்ரபா⁴தம் – இனிய காலை வணக்கம், நற்காலை வாழ்த்து
  • அரவிந்த³  – தாமரை
  • லோசநே – கண்களை உடையவளே
  • ப⁴வது – ஆகட்டும், உண்டாகட்டும்
  • பிரஸந்ந – தெளிந்த, மகிழ்ச்சியான, கருணை நிறைந்த
  • முக² – முகம்
  • சந்த்³ர – சந்திரன்
  • மண்ட³லே – வட்டம், மண்டலம்
  • விதி⁴ – பிரம்மா (படைப்புக் கடவுள்)
  • ஸங்கர – சிவபெருமான்
  • இந்த்³ர – இந்திரன்
  • வநிதாபி⁴ர் – பெண்களால், தேவியர்களால்
  • அர்ச்சிதே – வணங்கப்பட்டவளே, பூஜிக்கப்பட்டவளே
  • விருஷ – விருஷபம், காளை (இங்கு விருஷாத்ரி மலையைக் குறிக்கும்)
  • ஸைல – மலை
  • நாத² – நாதன், இறைவன்
  • த³யிதே – பிரியமானவளே, அன்புக்குரியவளே
  • த³யா – கருணை
  • நிதே⁴  – களஞ்சியம், பொக்கிஷம்

தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவளே! முழு நிலவு போன்ற தெளிந்த முகம் உடையவளே! நான்முகன், சிவபெருமான், இந்திரன் முதலானவர்களின் துணைவியர்கள் ஆகிய கலைமகள், மலைமகள் (பார்வதி), இந்திராணி (சசி தேவி) ஆகியவர்களால் பூஜிக்கப்படுபவளே! அருளுக்கு உறைவிடம் ஆனவளே! திருவேங்கடமுடையானின் அன்பிற்கு உரியவளான திருத்தேவியே! எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment