About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 2 December 2025

ஸ்ரீ முகுந்த மாலா - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 4

நாஹம் வந்தே³ தவ சரணயோர்
 த்³வந்த்³வ மத்³வந்த்³வ ஹேதோ:
கும்பீ⁴ பாகம் கு³ருமபி ஹரே 
நாரகம் நாப நேதும்| 
ரம்யா ராமா ம்ருது³ தநுலதா 
நந்த³நே நாபி ரந்தும்
பா⁴வே பா⁴வே ஹ்ருத³ய ப⁴வநே 
பா⁴வயே யம் ப⁴வந்தம்|| 

  • ந - இல்லை, அல்ல
  • அஹம் - நான்
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • தவ - உமது, உன்னுடைய
  • சரணயோர் - இரு திருவடிகளை
  • த்³வந்த்³வ - இரட்டைகள் (சுகம்–துக்கம், குளிர்–வெயில் போன்றவை)
  • மத்³வந்த்³வ - என்னுடைய இரட்டைப் பந்தங்கள்
  • ஹேதோஹோ - காரணமாக, நீங்குவதற்காக
  • கும்பீ⁴ பாகம் - கும்பீபாகம் என்னும் நரகம்
  • கு³ரும் - கொடிய, பயங்கரமான
  • அபி - கூட
  • ஹரே - ஹரியே! (திருமாலே!)
  • ந - இல்லை
  • அப - கூட
  • நேதும் - நீக்குவதற்காக, தப்பிப்பதற்காக
  • ரம்யா - அழகான
  • ராமா - லக்ஷ்மியுடன் கூடிய செல்வங்கள், இன்பங்கள்
  • ம்ருது³ - மென்மையான
  • தநு லதா - கொடி போன்ற உடலமைப்புடைய பெண்கள்
  • நந்த³நே - நந்தனவனத்தில் (சொர்க்கத்தில்)
  • ந அபி - கூட இல்லை
  • ரந்தும் - அனுபவிப்பதற்கு, மகிழ்வதற்கு
  • பா⁴வே பா⁴வே - ஒவ்வொரு பிறவியிலும்
  • ஹ்ருத³ய - இதயம்
  • ப⁴வனே - இல்லத்தில், ஆலயத்தில்
  • பா⁴வயே யம் - தியானிப்பேனாக, நினைப்பேனாக
  • ப⁴வந்தம் - உம்மை

ஹே ஹரி! கொடிய பாவங்களை அழிப்பவனே! மிகவும் திவ்யமானதும், தேவர்களால் கூட அடைய முடியாததுமாகிய, அந்த வைகுண்ட பதவியை அடைவதற்காகவோ, அல்லது நரக லோகத்திலுள்ள, மிகவும் கொடியதான, கும்பீபாகத்தில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவோ, அல்லது சுவர்க்க லோகத்திலுள்ள நந்தவனத்தில், மிருதுவான மலர்க் கொடியைப் போன்ற உடலுடைய தேவலோகப் பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ, நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை வணங்கவில்லை! நான் எத்தனை பிறவி எடுத்தாலும், ஒவ்வொரு பிறப்பிலும், உன்னை என் இதயமாகிய கோவிலுக்குள்ளே வைத்து அனுதினமும் பூஜிக்க வேண்டும் என்பதற்காகவே உன் திருவடிகளை வணங்குகின்றேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment