||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.18
தஸ்யை வ ஹேதோ: ப்ரயதேத கோவிதோ³
ந லப்⁴யதே யத்³ ப்⁴ரமதாம் உபர்யத⁴:|
தல் லப்⁴யதே து³: க² வத³ந்யத: ஸுக²ம்
காலேந ஸர்வத்ர க³பீ⁴ரரம் ஹஸா||
- உபரி - மேல் லோகத்தில் பிரம்ம தேவர் வரையிலும்
- அத⁴: - கீழ் லோகத்தில் தாவரம் வரையிலும்
- ப்⁴ரமதாம் - சுழலுகின்ற ஜீவர்களுக்கு
- யத்³ - யாதொரு பரமானந்த சுகமானது
- ந லப்⁴யதே - அடையப்படுகிறது இல்லையோ
- தஸ்ய - அதை அடைவதற்காக
- ஏவ ஹேதோஃ - மட்டும் காரணம்
- கோவிதோ³ - புத்திமான்
- ப்ரயதேத - முயற்சி செய்ய வேண்டும்
- தத் ஸுக²ம் - அந்த விஷய சுகமானது
- அந்யதஸ் - முன் ஜென்ம வினையினால்
- து³ஹ்க² வத்³ - துயரங்களைப் போல
- ஸர்வத்ர - எல்லா இடத்திலும் நரகத்திலும் கூட
- க³பீ⁴ரரம் ஹஸா - மிக வேகத்தை உடைய
- காலேந - காலத்தால்
- லப்⁴யதே - அடையப்படுகிறது
ஆகவே, அறிவுடைய ஒருவன் தாவரம் முதல் பிரும்ம தேவன் முடிய உள்ள பலப்பல பிறவிகளில் சுற்றிச் சுற்றி வரினும் அடைய இயலாத உயரிய பதத்தை அடைவதற்கு முயல வேண்டும். ஏனெனில், இவ்வுகியல் இன்பங்களும், துன்பங்களும் முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கேற்ப, தவிர்க்க முடியாத கால வேகத்தால், எங்கும் எப்படியும் வந்து சேர்ந்து கொண்டிருக்கும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment