||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||திவ்ய ப்ரபந்தம் - 136 - அமரர்க்கு அமுதளித்தவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஒண்பதாம் பாசுரம்||
அங் கமலப் போதகத்தில்*
அணி கொள் முத்தம் சிந்தினாற் போல்*
செங்கமல முகம் வியர்ப்ப*
தீமை செய்து இம் முற்றத்தூடே*
அங்கம் எல்லாம் புழுதியாக*
அளைய வேண்டா அம்ம! விம்ம*
அங்கு அமரர்க்கு அமுது அளித்த*
அமரர் கோவே! முலை உணாயே|
- அங் கமல - அழகிய தாமரைப்
- போதகத்தில் - பூவினுள்ளே
- அணி கொள் முத்தம் - அழகு மிக்க முத்துகள்
- சிந்தினாற் போல் - சிந்தியது போல
- செங் கமல - சிவந்த தாமரை மலர் போன்ற
- முகம் - உனது முகமானது
- வியர்ப்ப - வியர்க்கும் அளவு
- தீமை செய்து - குறும்புகள் செய்து கொண்டு
- இம் முற்றத்தூடே - இந்த முற்றதுள் நின்று
- அங்கம் எல்லாம் - உடலெல்லாம்
- புழுதியாக - புழுதி படிய
- அளைய வேண்டா - அளைந்து விளையாடாதே
- அம்ம! - கண்ணம்மா!
- விம்ம - வயிறு புடைக்க
- அங்கு அமரர்க்கு - முன்பு தேவர்களுக்கு
- அமுது அளித்த - அமிர்தம் கடைந்து அளித்த
- அமரர் கோவே! - தேவாதி தேவனே!
- முலை உணாயே - தாய்ப் பால் பருக வாராயோ!
ஒரு சமயம், தேவர்கள் வயிறு நிரம்ப அவர்களுக்கு அமுதத்தை அளித்த தேவாதி ராஜனே, தலைவனே! தாமரைப் பூவில் நீர்த்துளி முத்துக்கள் சிந்தியிருப்பது போல், உன் செந்தாமரையை ஓத்த அழகான முகத்தில் வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க, உடம்பை எல்லாம் புழுதியாக்கி கொள்ளாமல் என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment