||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 7
நிக³ம கல்ப தரோர் க³ளிதம் ப⁴லம்
ஸுகமுகாத்³ அம்ருத த்³ரவ ஸம்யுதம்|
பிப³த பா⁴க³வதம் ரஸம் ஆலயம்
முஹுர் அஹோ ரஸிகா பு⁴வி பா⁴விகா:||
- நிக³ம - வேதங்கள்
- கல்ப தரோர் - கற்பக மரம்
- க³ளிதம் - கிடைத்த, பழுத்த
- ப⁴லம் - பழம்
- ஸுகமுகாத்³ - சுகதேவரின் வாயிலிருந்து
- அம்ருத - அமுதம் போன்ற
- த்³ரவ - திரவமான, சாறாகிய
- ஸம்யுதம் - சேர்ந்த, நிறைந்த
- பிப³த - பருகுங்கள்
- பா⁴க³வதம் - பாகவதத்தை
- ரஸம் - இனிய ரசம், சுவை
- ஆலயம் - இருப்பிடம், நிலையம்
- முஹுர் - மீண்டும் மீண்டும்
- அஹோ - ஓ!, ஆகா!
- ரஸிகா - ரசத்தை அனுபவிப்பவர்களே
- பு⁴வி - உலகில்
- பா⁴விகாஹ - உணர்வுள்ளவர்களே, நற்பேறு பெற்றவர்களே
வேதமாகிய கற்பக மரத்தில் பழுத்த பழம் போன்றதும், சுகதேவரின் வாயிலிருந்து வெளிப்பட்ட அமுதச் சாறுடன் நிறைந்ததுமான பாகவதத்தை, இனிய பக்தி ரசத்தை அனுபவிக்கும் உணர்வுள்ளவர்களே, இந்த உலகில் மீண்டும் மீண்டும் பருகுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment