||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 13
ஸ்ரீமத்³ பா⁴க³வதாக்²யோ யம்
பிரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவஹி|
ஸ்வீக்ருதோ ஸி மயா
நாத முக்தை யர்தம் ப⁴வ ஸாகரே||
- ஸ்ரீமத்³ - சிறப்பும் செல்வமும் உடைய
- பா⁴க³வத - பாகவதம்
- ஆ²க்யோ - என்று பெயரிடப்பட்ட
- அயம் - இந்த
- பிரத்யக்ஷஹ் - நேரடியாகக் காணக்கூடிய
- கிருஷ்ண - கிருஷ்ணர்
- ஏவ - நிச்சயமாக
- ஹி - உண்மையாக
- ஸ்வீக்ருதோ - ஏற்றுக்கொள்ளப்பட்ட
- அஸி - இருக்கிறீர்
- மயா - என்னால்
- நாத - தலைவனே
- முக்தை - விடுதலை பெறுவதற்காக
- அர்த்தம் - பொருட்டு
- ப⁴வ - பிறப்பு இறப்பு
- ஸாகரே - கடலில்
“ஸ்ரீமத் பாகவதம்” என்று அழைக்கப்படும் இந்த நூல், நேரடியாகக் காணக்கூடிய கிருஷ்ணரே என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு இறப்பு என்னும் சம்சாரக் கடலில் இருந்து விடுபடுவதற்காக, நாதனே, உம்மைச் சரணடைகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment