||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 15
நாம ஸங்கீர்தநம் யஸ்ய
ஸர்வ பாப ப்ரநாஸ²நம்|
ப்ரணாமோ து³க்க² ஸ²மந:
தம் நமாமி ஹரிம் பரம்||
- நாம - திருநாம
- ஸங்கீர்தநம் - பாடுதல், புகழ்ந்து கூறுதல்
- யஸ்ய - யாருடைய
- ஸர்வ - அனைத்து
- பாப - பாவங்களையும்
- ப்ரநாஸ²நம் - அழிப்பது
- ப்ரணாமோ - வணக்கம்
- து³க்க² - துன்பத்தை
- ஸ²மநஹ் - தணிப்பது
- தம் - அந்த
- நமாமி - நான் வணங்குகிறேன்
- ஹரிம் - ஹரியை
- பரம் - பரம்பொருளை
யாருடைய திருநாமத்தைப் பாடுவதால் அனைத்து பாவங்களும் அழிகின்றனவோ, யாரை வணங்குவதால் துன்பங்கள் தணிகின்றனவோ, அந்த பரம்பொருளான ஹரியை நான் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றது

No comments:
Post a Comment