||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 14
யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஸு²
அதி க³ஸு மது⁴ரம் முக்தி பா⁴ஜாம் நிவாஸோ|
ப⁴க்தாநாம் காம வர்ஸ²த்³யுதரு
கிஸலயம் நாததே பா³த⁴ மூலம்||
நித்யம் சித்த ஸ்திதம் மே பவன புரபதே
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ³|
ஹ்ருத்வா நிஸ்²ஸே²ஷ தாபான் பிரதி³ ஸ²து
பரமாநந்த ஸந்தோஹ லக்ஷ்மீ:||
- யோ³ந்த்³ராணாம் - யோகிகளின் தலைவர்களுக்கு
- த்வத்³ - உமது
- அங்கே³ஸு² - அங்கங்களில்
- அதி - மிகவும்
- க³ஸு - எதனால், எங்கே
- மது⁴ரம் - இனிமையான
- முக்தி - முக்தி
- பா⁴ஜாம் - பெறுபவர்களின்
- நிவாஸோ - வசிப்பிடம்
- ப⁴க்தாநாம் - பக்தர்களின்
- காம - விருப்பங்களை
- வர்ஸ²தி - பொழிகிறது, வழங்குகிறது
- தரு - மரம்
- கிஸலயம் - தளிர்
- நாத - நாதனே
- தே - உமது
- பா³த⁴ மூலம் - திருவடிகள்
- நித்யம் - எப்போதும்
- சித்த - மனதில்
- ஸ்திதம் - நிலைத்திருப்பது
- மே - எனது
- பவன புரபதே - குருவாயூரப்பனே
- க்ருஷ்ண - கிருஷ்ணரே
- காருண்ய - கருணை
- ஸிந்தோ³ - கடலே
- ஹ்ருத்வா - நீக்கி
- நிஸ்²ஸே²ஷ - முழுமையாக
- தாபான் - துன்பங்களை
- பிரதி³ ஸ²து - அருளட்டும்
- பரமாநந்த - பேரானந்தத்தின்
- ஸந்தோஹ - பெருக்கை, குவியலை
- லக்ஷ்மீஹி - செல்வத்தை, நிலையை
யோகிகளின் தலைவர்களுக்கு இனிமையான இருப்பிடமாகவும், முக்தியை விரும்புவோருக்கு தங்குமிடமாகவும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக மரம் போன்றதாகவும் உமது திருவடிகள் விளங்குகின்றன. கருணைக் கடலான குருவாயூரப்பனே கிருஷ்ணா! என் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் நீர், என் அனைத்து துன்பங்களையும் நீக்கி, பேரானந்தத்தை எனக்கு அருள வேண்டும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment