||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
த்யான ஸ்லோகம் 3
ஸ்ரீகாந்தோ மாதுலோ
யஸ்ய ஜனனீ ஸர்வ மங்களா|
ஜநக: ஸ²ங்கரோ தே³வ:
தம் வந்தே³ குஞ்ஜராநநம்||
- ஸ்ரீகாந்தோ - திருமகளின் கணவர்; மகாவிஷ்ணு
- மாதுலோ - தாய்மாமன்
- யஸ்ய - யாருக்கு, அவருக்கு
- ஜனனீ - தாய்
- ஸர்வ - அனைத்து
- மங்களா - மங்களத்தைத் தருபவள், மங்களமானவள்
- ஜநகஸ் - தந்தை
- ஸ²ங்கரோ - சிவபெருமான்
- தே³வஹ - கடவுள்
- தம் - அவரை
- வந்தே³ - வணங்குகிறேன்
- குஞ்ஜர் - யானை
- ஆநநம் - முகம்
மகாவிஷ்ணு யாருக்குத் தாய்மாமனாகவும், ஸர்வமங்களா தாயாகவும், சிவபெருமான் தந்தையாகவும் இருக்கிறாரோ, யானை முகம் கொண்ட அந்த விநாயகரை நான் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment