||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய
ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 2
உத்திஷ்டோ²த் திஷ்ட² கோ³விந்த³
உத்திஷ்ட² க³ருட³த்வஜ|
உத்திஷ்ட² கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்க³ளம் கு³ரு|| (2)
- உத்திஷ்ட² - எழுந்திரு, விழித்தெழு
- உத்திஷ்ட² - எழுந்திரு (மீண்டும் வலியுறுத்தல்)
- கோ³விந்த³ - கோவிந்தா (ஸ்ரீ கிருஷ்ணர், திருமால் பெயர்)
- உத்திஷ்ட² - எழுந்திரு
- க³ருட³ - கருடன்
- த்வஜ - கொடி, கொடியை உடையவன்
- உத்திஷ்ட² - எழுந்திரு
- கமலா - தாமரை போன்றவள்; மகாலட்சுமி
- காந்த - கணவன், அன்புக்குரியவர், பிரியமானவர்
- த்ரை - மூன்று
- லோக்யம் - உலகங்கள் (தேவலோகம், பூலோகம், பாதாளம்)
- மங்க³ளம் - மங்களம், நன்மை, சுபம்
- கு³ரு - செய், அருள் செய், ஏற்படுத்து
கோவிந்தா! விரைவாகத் துயில் எழுவாய்! கருடனைக் கொடியில் கொண்டவனே! பள்ளி எழுந்தருள்வாய்! செந்தாமரையில் பெருமிதம் கொண்டு வீற்றிருக்கும் திருமகளின் நாயகனே! பள்ளி எழுந்தருள்! மூன்று உலகங்களையும் நீ மங்களம் உடையதாக செய்வாயாக! நீ திருக்கண் விழிக்காவிடில் மூன்று உலகங்களும் செம்மை பெறாது ஒழியும். ஆதலால் அவைகளை வாழ வைப்பதற்காகவே நீ திருக்கண் மலர வேண்டும்! துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment