About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

ஸ்ரீ முகுந்த மாலா - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 2

ஜயது ஜயது தே³வோ தே³வகீ நந்த³ நோயம் 
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ஸ பிரதீ³ப:|
ஜயது ஜயது மேக⁴ ஸ்²யாமள கோமாளாங்கோ³ 
ஜயது ஜயது ப்ருத்²வி பா⁴ர நாஸோ² முகுந்த³:||

  • ஜயது ஜயது - வெற்றி பெறட்டும்! வெற்றி பெறட்டும்! / போற்றப்படுவாராக!
  • தே³வோ - பரம தெய்வம்
  • தே³வகீ - தேவகி (கிருஷ்ணரின் தாய்)
  • நந்த³நோயம் - மகன்; அயம் - இவர்
  • க்ருஷ்ணோ - பகவான் கிருஷ்ணர்
  • வ்ருஷ்ணி - வ்ருஷ்ணி குலம்
  • வம்ஸ - வம்சம், குலம்
  • பிரதீ³பஹ - விளக்கு, ஒளி, பெருமை சேர்ப்பவர்
  • மேக⁴ - கருமேகத்தைப் போன்ற
  • ஸ்²யாமள - கருநீல நிறமுடையவர்
  • கோமள - மென்மையான
  • அங்கோ³- உடல், திருமேனியைக் கொண்டவர்
  • ப்ருத்²வீ - பூமி
  • பா⁴ர - சுமை
  • நாஸோ² - அழிப்பவர், நீக்குபவர்
  • முகுந்த³ஹ - மோட்சத்தை அருள்பவர்; முக்தியை அளிப்பவர்

தேவகிக்கு குழந்தையாகத் தோன்றிய கண்ணன் வெற்றி கொள்வானாக! ஆயர் குலத்திற்கே அணியாகிய விளங்கும் க்ருஷ்ணன் வெற்றி கொள்வானாக! மிருதுவான, தளிர் போன்ற மேனியையுடைய அந்த முகில் வண்ணன் வெற்றி கொள்வானாக! இந்த பூமியின் பாரத்தை நீக்க அவதரித்த அந்த முகுந்தன் வெற்றி கொள்வானாக! 

இந்த ஸ்லோகத்தின் மூலமாக குலசேகரர் கண்ணனுக்கு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்கிறார். அனைத்து மங்களங்களுக்கும் மூல காரணமாக விளங்கும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியின் இதயத்தை வென்ற அழகிய மணவாளனாக விளங்கும் முகுந்தனுக்கே வெற்றி என்று ஜெய கோஷம் எழுப்புகிறார்.

பகவானுடைய சரணாரவிந்தங்களே நம் அனைவரையும் காக்க வல்லது. அசையும், அசையா பொருட்கள் அனைத்திலும் வியாபித்து, நீக்கமற நிறைந்திருக்கும், அந்த தன்னிகரற்ற பரம்பொருளாகிய திருமாலுக்கு, நாம் பல்லாண்டு பாட வேண்டும் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment