About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

108 திவ்ய தேசங்கள் - 041 - திருவஹீந்திரபுரம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||041. திருவஹீந்திரபுரம்|| 
||திரு அயிந்தை - திருவந்திபுரம் - கடலூர்||
||நாற்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
1 ஆழ்வார் - 10 பாசுரங்கள்

001. திருமங்கையாழ்வார் - 10 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1148 - 1157 - மூன்றாம் பத்து - முதலாம் திருமொழி 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அன்பு அணிந்த சிந்தையராய் ஆய்ந்த மலர் தூவி*
முன் பணிந்து நீர் எமக்கு மூர்த்தியரே என்பர்*
எம் ஐயிந்திர புரத்தார்க்கு இன் தொண்டர் ஆனார்*
தமை இந்திர புரத்தார் தாம்|

  • எம் - எமது
  • ஐயிந்திர புரத்தார்க்கு - திருவயிந்திரபுரம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளிய தெய்வநாயகப் பெருமானுக்கு
  • இன்தொண்டர் ஆனார்தமை - நல் அடியாரானவர்களை
  • இந்திரபுரத்தார்தாம் - தேவேந்திரனது அமராவதி நகரத்தில் வாழ்கின்ற தேவர்கள்
  • அன்பு அணிந்த சிந்தையர் ஆய் - பக்தி கொண்ட மனம் உடையவராய்
  • ஆய்ந்த மலர் தூவி - அவர்கள் மீது ஆராய்ந்து எடுத்த சிறந்த கற்பக மரத்தின் மலர்களைச் சொரிந்து
  • முன் பணிந்து - அவர்கட்கு முன்னே வந்து நமஸ்கரித்து
  • நீர் எமக்கு மூர்த்தியரே என்பர் - “நீவிர் எங்கட்குக் கடவுளாவீர்கள்’ என்று கொண்டாடுவார்கள்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment