About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

மாதஸ் ஸமஸ்த ஜக³தாம் மது⁴கைட பா⁴ரேஹ்
வக்ஷோ விஹாரிணி மநோஹர தி³வ்ய மூர்த்தே|
ஸ்ரீ ஸ்வாமிநி, ஸ்ரீத ஜந ப்ரிய தா³ந ஸீலே
ஸ்ரீ வேங்கடேஸ த³யிதே தவ ஸுப்ரபா⁴தம்|| (2)

  • மாதஸ் - தாயே, அம்மையே
  • ஸமஸ்த - முழுவதும், எல்லா
  • ஜக³தாம் - உலகங்களின், பிரபஞ்சத்தின்
  • மது⁴கைட பா⁴ரேஹ் - மது, கைடபன் என்ற அசுரர்களின் பகைவனான விஷ்ணுவின் 
  • வக்ஷோ - மார்பு, திருமார்பு
  • விஹாரிணி - விளையாடுபவளே, வசிப்பவளே
  • மநோஹர - மனதை கவரும், அழகான
  • தி³வ்ய - தெய்வீகமான, புனிதமான
  • மூர்த்தே - உருவமே, திருமேனியே
  • ஸ்ரீ ஸ்வாமிநி - ஸ்ரீயின் தலைவியே, மகாலட்சுமியே
  • ஸ்ரீத ஜந - உன்னைச் சரணடைந்த மக்கள், உன்னை நம்பியவர்கள்
  • ப்ரிய - அன்பான, பிரியமான
  • தா³ந - கொடை, வழங்குதல்
  • சீலே - குணமுடையவளே, இயல்புடையவளே
  • ஸ்ரீ வேங்கடேஸ - ஸ்ரீ வேங்கடேச பெருமாளின்
  • த³யிதே - அன்புக்குரியவளே, பிரியமானவளே
  • தவ - உனது, உம்முடைய
  • ஸுப்ரபா⁴தம் - இனிய காலை வணக்கம், நற்காலை வாழ்த்து

எல்லா உலகங்களுக்கும் தாயாக விளங்குபவளே! மது கைடபவர்கள் என்ற இரு அசுரர்களையும் அழித்து அருளிய திருமாலின் வல மார்பினில் விளையாடுபவளே! அனைவரின் உள்ளத்தையும் கவரக் கூடிய திவ்ய வடிவம் உடையவளே! தம்மைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதில் இயல்பான தன்மை உடையவளே! அன்பிற்கு உரியவளே! பிராட்டியே! உனக்கு நற்பொழுது புலருக! கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment