About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

ஸ்ரீ முகுந்த மாலா - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 3

முகுந்த³ மூர்த்⁴நா ப்ரணி பத்ய யாசே 
ப⁴வந்த மேகாந்த மியந்த மர்த்த²ம்|
அவி ஸ்ம்ருதி த்வச் சரணார விந்தே³
ப⁴வே ப⁴வே மேஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த்||

  • முகுந்த³ - முகுந்தா!; மோட்சம் அளிப்பவனே; ஸ்ரீகிருஷ்ணா/விஷ்ணுவே
  • மூர்த்⁴நா - தலையால், தலையைத் தாழ்த்தி
  • ப்ரணி பத்ய - பணிந்து, முழு வணக்கம் செய்து
  • யாசே - வேண்டுகிறேன், பிரார்த்திக்கிறேன்
  • ப⁴வந்தம் - உம்மை, உங்களை
  • ஏகாந்தம் - ஒரே ஒரு, பிரதானமான
  • இயந்தம் - இந்த
  • அர்த்தம் - வேண்டுகோள், விருப்பம், பொருள்
  • அவி ஸ்ம்ருதி - மறவாமை, இடையறாத நினைவு
  • த்வத் - உமது
  • சரண - திருவடி
  • அரவிந்தே³ - தாமரை போன்ற (திருவடியில்)
  • ப⁴வே ப⁴வே - ஒவ்வொரு பிறவியிலும்
  • மே - எனக்கு
  • அஸ்து - உண்டாகட்டும், கிடைக்கட்டும்
  • ப⁴வத் - உமது
  • ப்ரஸாதா³த் - அருளால், கருணையால்

ஹே முகுந்தா! உன்னை என்றென்றும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் இது தான்! அதாவது, என்னுடைய ஒவ்வொரு பிறவியிலும், உன் அருளால், உன் திருவடித் தாமரைகளை மறந்து விடாமல் இருக்க வேண்டும்! இந்த ஒன்றை மட்டுமே நான் உன்னிடமிருந்து யாசிக்கிறேன்! 

நாம் பகவானிடம் மிகவும் அற்பமான, உலகாயதன பொருள்களை கேட்காமல், அவனை என்றென்றும் மறக்காமல் இருக்கும் மனத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை குலசேகரர் இங்கு தெரிவிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment