||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||திவ்ய ப்ரபந்தம் - 134 - நின் பவளவாயின் இன்னமுதம்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஏழாம் பாசுரம்||
பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*
பெறுதும் என்னும் ஆசையாலே*
கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*
கண் இணையால் கலக்க நோக்கி*
வண்டு உலாம் பூம் குழலினார்*
உன் வாய் அமுதம் உண்ண வேண்டிக்*
கொண்டு போவான் வந்து நின்றார்*
கோவிந்தா நீ முலை உணாயே|
- பெண்டிர் - பல பெண்கள்
- வாழ்வார் - வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
- நின் ஒப்பாரை - உன்னைப் போன்ற செல்வனைப்
- பெறுதும் - பெறுவோம்
- என்னும் ஆசையாலே - என்ற ஆசையுடன்
- கண்டவர்கள் - உன்னைக் கண்டவர்கள்
- போக்கு ஒழிந்தார் - அப்படியே நின்று விடுகிறார்கள்
- கண்ணிணையால் - தமது இரு கண்களாலும்
- கலக்க நோக்கி - உனது திருமேனி முழுவதும் பார்த்து
- வண்டு உலாம் - வண்டுக்கள் மொய்க்கும்
- பூங்குழலினார் - பூக்களை கூந்தலில் சூடிய பெண்கள்
- உன் வாய் அமுதம் - உன்னை முத்தமிட்டு வாய் அமுதம்
- உண்ணவேண்டி - சுவைப்பதற்காக
- கொண்டு போவான் - உன்னை தூக்கி கொண்டு போவதற்கு
- வந்து நின்றார் - வந்து நிற்கிறார்கள்
- கோவிந்தா! - கோவிந்தனே!
- நீ முலை உணாயே - தாய்ப்பால் பருகாயோ
உன்னைப் பார்த்த பெண்கள் உன்னைப் போல பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற பேராவலினாலே உன் திருமேனியைத் தங்கள் கண்களினால் கண்டு களித்தவாறே உன்னை விட்டு நீங்காமல் இருந்தார்கள். வண்டுகள் மொய்க்கும் புஷ்பங்களை அணிந்த கூந்தலை உடைய பெண்கள் உன் பவள வாயில் சுரக்கும் அம்ருதத்தைப் பருக விரும்பி உன்னை எடுத்துக் கொண்டு போக வந்து நிற்கிறார்கள். கோவிந்தா! என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment