||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத:
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம்
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய
நாரதரின் அறிவுரைகள்||
ஸ்லோகம் 1.5.16
விசக்ஷணோ ஸ்யார்ஹதி வேதி³தும் விபோ⁴ர்
அநந்த பாரஸ்ய நிவ்ருத்தித: ஸுக²ம்|
ப்ரவர்த மாநஸ்ய கு³ணைர் அநாத்மநஸ்
ததோ ப⁴வாந் த³ர்ஸ²ய சேஷ்டிதம் விபோ⁴:||
- விசக்ஷணோ - புத்திமானான ஒருவன் தான்
- நிவ்ருத்திதஸ் - எல்லாவிதமான கர்மாக்களையும் விட்டொழிப்பதால்
- அநந்த பாரஸ்ய - தேச கால பரிச்சேதமில்லாதவன் ஆன
- விபோ⁴ர் - பரமாத்மாவின் உடைய
- ஸுக²ம் - நிர்விகல்பக சுக ரூபமான ஸ்வரூபத்தை
- வேதி³தும் அர்ஹதி - அறிவதற்கு யோக்கியன் ஆகிறான்
- ததோ - ஆகையால்
- விபோ⁴ஹ - ஹே பெரியோனே!
- அநாத்மநஸ் - தேகாதிகளில் அபிமானத்தோடு கூடியவனும்
- கு³ணைர் ப்ரவர்த மாநஸ்ய - ஸத்வாதி குணங்களோடு பிரவிருத்திக்கின்ற மனிதனின் சிரேயசின் பொருட்டு
- ப⁴வாந் - தாங்கள்
- அஸ்ய சேஷ்டிதம் - அந்த வாஸுதேவனின் லீலைகளை
- த³ர்ஸ²ய - காண்பிப்பீராக
புத்திமானான ஒருவன், பகவானின் 'ஸத் சித் ஆனந்தமயமான' திரு உருவத்தை வைராக்கியத்தால் அறிந்து ஸுகம் பெற முடியும். ஆகவே, முக்குணங்கள் நிறைந்த இவ்வுடலிலேயே பற்றுக் கொண்டு ஜீவிக்கும் பாமர மனிதனின் முன்னேற்றத்திற்காக வேண்டி, தாங்கள் அந்த பகவான் வாசுதேவனின் திரு விளையாடல்களைச் சொல்லுங்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment