About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 29 November 2025

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 3

மாதஸ் ஸமஸ்த ஜக³தாம் மது⁴கைட பா⁴ரேஹ்
வக்ஷோ விஹாரிணி மநோஹர தி³வ்ய மூர்த்தே|
ஸ்ரீ ஸ்வாமிநி, ஸ்ரீத ஜந ப்ரிய தா³ந ஸீலே
ஸ்ரீ வேங்கடேஸ த³யிதே தவ ஸுப்ரபா⁴தம்|| (2)


எல்லா உலகங்களுக்கும் தாயாக விளங்குபவளே! மது கைடபவர்கள் என்ற இரு அசுரர்களையும் அழித்து அருளிய திருமாலின் வல மார்பினில் விளையாடுபவளே! அனைவரின் உள்ளத்தையும் கவரக் கூடிய திவ்ய வடிவம் உடையவளே! தம்மைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதில் இயல்பான தன்மை உடையவளே! அன்பிற்கு உரியவளே! பிராட்டியே! உனக்கு நற்பொழுது புலருக! கார்வண்ண வேங்கடத்தான் திருத்தேவி எழுந்தருள்வாய்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 3

முகுந்த³ மூர்த்⁴நா ப்ரணி பத்ய யாசே 
ப⁴வந்த மேகாந்த மியந்த மர்த்த²ம்|
அவி ஸ்ம்ருதி த்வச் சரணார விந்தே³
ப⁴வே ப⁴வே மேஸ்து ப⁴வத் ப்ரஸாதா³த்||


ஹே முகுந்தா! உன்னை என்றென்றும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்! நான் உன்னிடம் கேட்பதெல்லாம் இது தான்! அதாவது, என்னுடைய ஒவ்வொரு பிறவியிலும், உன் அருளால், உன் திருவடித் தாமரைகளை மறந்து விடாமல் இருக்க வேண்டும்! இந்த ஒன்றை மட்டுமே நான் உன்னிடமிருந்து யாசிக்கிறேன்! 

நாம் பகவானிடம் மிகவும் அற்பமான, உலகாயதன பொருள்களை கேட்காமல், அவனை என்றென்றும் மறக்காமல் இருக்கும் மனத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதை குலசேகரர் இங்கு தெரிவிக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருவேங்கட மஹாத்மியம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்துதி||

||ஓம் நமோ நாராயணா||

வராஹ பெருமான் பூமியில் தங்கிவிட்டதால்
வந்து பூமியில் துதித்தனர் வானவர் முனிவர்

இந்திரன் பிரமன் துவாதச ஆதித்யர்கள்
ருத்திரர் தேவர் வசுக்கள் திக்பாலகர்கள்

கந்தருவர் சப்த ரிஷிகள் மருத் கணங்கள்
வந்தவர் விண்ணப்பித்தனர் பெருமானிடம்

தரணியைப் பாதாளத்தில் ஒளித்து வைத்த
ஹிரண்யாக்ஷனை சம்ஹரித்தீர்கள் போரில்

ப்ரபாவமும் தோற்றமும் மாறவேயில்லை
பக்தருக்கு அருள வேண்டும் இன்முகத்துடன்’

மாற்றிக் கொண்டார் பெருமான் சிரித்தபடியே
தோற்றத்தையும் தன் முக விலாசத்தையும்

அழகிய வலிய புஜங்கள் ஒரு நான்குடனும்
அழகிய இருதேவியர் தன் இருமருங்கிலும்

கருணை பொழியும் கமலக் கண்களுடனும்
கருத்தைக் கவரும் ஒளிரும் வடிவத்துடனும்

கிரீடாச்சலத்தில் விளங்கும் வராஹ பெருமான்
நிறைவேற்றுகிறார் பக்தரின் கோரிக்கைகளை

வெள்ளைப் பன்றி வடிவெடுத்ததால்
ஸ்வேத வராஹ கல்பம் என்ற பெயர் வழங்கலாயிற்று

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 160

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 160||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 22||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

விஸ்²வேஸ்²வரமஜம் தே³வம் 
ஜக³த: ப்ரபு⁴மவ்யயம்|
ப⁴ஜந்தி யே புஷ்கராக்ஷம் 
ந தே யாந்தி பராப⁴வம்|| 

ந தே யாந்தி பராப⁴வம் ஓம் நம இதி|


தாமரைக் கண்களைக் கொண்ட பகவான் பிறக்காத உச்ச தெய்வம், பிரபஞ்சத்தின் ஆட்சியாளர், அத்துடன் பிரபஞ்சத்தின் கட்டுப்பாட்டாளர். அவரைப் புகழ்ந்து பாடுபவர்கள் எந்த வகையிலும் பின்னடைவையோ அல்லது குழப்பத்தையோ சந்திக்க மாட்டார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.24

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.24 

உத்ஸீ தே³யுரிமே லோகா 
ந குர்யாம் கர்ம சேத³ஹம்|
ஸங்க ரஸ்ய ச கர்தா ஸ்யாம் 
உப ஹந்யா மிமா: ப்ரஜா:||

  • உத்ஸீ தே³யுர் - சீரழிந்து விடும் 
  • இமே - இவ்வெல்லா 
  • லோகா - உலகங்கள் 
  • ந- இல்லை 
  • குர்யாம் - நான் செய்ய 
  • கர்ம - விதிக்கப்பட்ட கடமைகள் 
  • சேத்³ - ஆயின் 
  • அஹம் - நான் 
  • ஸங்க ரஸ்ய - தேவையற்ற ஜனத்தொகையை 
  • ச - மேலும்  
  • கர்தா - படைப்பவன் 
  • ஸ்யாம் - ஆவேன் 
  • உப ஹந்யாம் - அழிந்து விடும் 
  • இமாஃ - இவ்வெல்லா 
  • ப்ரஜாஹ - உயிர்வாழிகள்

விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து நான் தவறினால், இவ்வெல்லா உலகங்களும் சீரழிந்து விடும். உலகின் சீர் குலைவிற்கு நானே காரணமாவேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.17

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.17

த்யக்த்வா ஸ்வ த⁴ர்மம் சரணாம் பு³ஜம் ஹரேர் 
ப⁴ஜந்ந பக்வோ த² பதேத் ததோ யதி³|
யத்ர க்வவா அப⁴த்³ரம் அபூ⁴த்³ அமுஷ்ய கிம்
கோ வார்த² ஆப்தோ ப⁴ஜதாம் ஸ்வ த⁴ர்மத:||

  • ஸ்வ த⁴ர்மம் - ஸ்வ தர்மத்தை
  • த்யக்த்வா - விட்டும் கூட
  • ஹரேர் - ஸ்ரீ வாஸுதேவனின்
  • சரணாம் பு³ஜம்  - பாத கமலங்களை
  • ப⁴ஜந் - பூஜிக்கின்றவனாய் கொண்டு
  • அத² - ஒருக் கால்
  • அபக்வோ - பக்குவம் ஆகாத மனத்தினனாய்
  • ததோ - அந்த பஜனத்திலிருந்து
  • யதி³ பதேத் - விழுந்ததாலும்
  • அமுஷ்ய - அந்த மனிதனுக்கு
  • யத்ர க்வ வா - எங்காவது
  • அப⁴த்³ரம் அபூ⁴த்³ கிம் - அமங்கலம் ஏற்படுமோ? மங்களமே ஏற்படும்
  • அப⁴ஜதாம் - அந்த வாஸுதேவனை பூஜிக்காதவர்களுக்கு
  • ஸ்வ த⁴ர்மதஹ - தனது தர்மத்தை அனுஷ்டானம் செய்வதால் தான்
  • கோ வார்த² - என்ன பிரயோஜனம்
  • ஆப்தோ - அடையப்பட்டது?

ஒரு மனிதன் வருணாசிரம கர்மங்களைக் கைவிட்டு, பகவானது திரு அடித் தாமரைகளிலேயே மனம் ஈடுபாடு கொண்டிருந்து, அவனது பக்தி பக்குவமடைவதற்கு முன் அவனது உயிர் பிரிந்து விட்டாலும், அவனுக்கு அசுபம் ஏற்படுமா என்ன? பகவத் பஜனம் செய்யாது, வருணாசிரம கர்மாக்களை மாத்திரம் செய்து வந்தவன், எந்தப் பயனை அடைந்து விட்டான்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.95

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.95

க³வாம் கோட்ய யுதம் த³த்த்வா
ப்³ரஹ்ம லோகம் ப்ரயாஸ்யதி³
அஸங்க்²யேயம் த⁴நம் த³த்த்வா
ப்³ராஹ்மணே ப்⁴யோ மஹா யஸா²:|| 

  • கோட்ய யுதம் - அநேக கோடி
  • க³வாம் - பசுக்களை
  • த³த்த்வா - தானம் செய்து
  • அஸங்க்²யேயம் - கணக்கிட முடியாத
  • த⁴நம் - தனத்தை
  • ப்³ராஹ்மணேப்⁴யோ - பிராமணர்களுக்கு
  • த³த்த்வா - கொடுத்து
  • மஹா யஸா²ஹா - மஹா கீர்த்தியை உடையவராய்
  • ப்³ரஹ்ம லோகம் - பிரம்ம லோகத்தை
  • ப்ரயாஸ்யதி - அடையப் போகிறார்

விதிப்படி பிராமணர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஏராளமான பொன்னையும், கோடிக் கணக்கான பசுக்களையும், கணக்கிடப்பட முடியாத செல்வத்தையும் கொடை அளிப்பார்.  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - 135 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 135 - மல்லர் இருவரை அழித்தவன்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - எட்டாம் பாசுரம்||

இரு மலை போல் எதிர்ந்த மல்லர்* 
இருவர் அங்கம் எரி செய்தாய்!* 
உன் திரு மலிந்து திகழு மார்வு* 
தேக்க வந்து என் அல்குல் ஏறி* 
ஒரு முலையை வாய் மடுத்து* 
ஒரு முலையை நெருடிக் கொண்டு* 
இரு முலையும் முறை முறையாய்* 
ஏங்கி ஏங்கி இருந்து உணாயே| 

  • இரு மலை போல் - இரண்டு மலை போலே வந்து
  • எதிர்ந்த - எதிர்த்து நின்ற
  • மல்லர் இருவர் - சாணூர முஷ்டிகர் என்னும் இரண்டு மல்லர்களுடைய
  • அங்கம் - உடல்களை
  • எரி செய்தாய் - பயத்தாலே எரியும் படி அழிந்து போகச் செய்தவனே!
  • உன் - உன்னுடைய
  • திரு மலிந்து - அழகு நிரம்பி
  • திகழும் மார்வு - விளங்குகின்ற மார்பானது
  • தேக்க - பாலாலே நிறையும்படி
  • வந்து - நீ வந்து
  • என் அல்குல் ஏறி - என் மடி மீது ஏறிக் கொண்டு
  • ஒரு முலையை - ஒரு மார்பகத்தில்
  • வாய் மடுத்து - வாயை வைத்துக் கொண்டு
  • ஒரு முலையை - மற்றொரு முலையை
  • நெருடிக் கொண்டு - கையினாலே நெருடிக் கொண்டிருந்து
  • இரு முலையும் - இரண்டு மார்பிலும்
  • முறை முறை ஆய் - மாறி மாறி
  • ஏங்கி ஏங்கி - இளைத்திளைத்து இப்படி
  • இருந்து - ஆர்வத்துடன்
  • உணாய் - உண்பாயாக

சாணூர முஷ்டிகரென்னும் மலைகளைப்போன்ற இரண்டு மல் யுத்த வீரர்களை அஞ்சி நடுங்கி எரிந்துபோகும்படி செய்தவனே! நீ வந்து என் மடியிலமர்ந்து, உன் திருமார்பு நிரம்பும் படியாக என் ஒரு முலையை வாயில் வைத்தும், மற்றொரு முலையை கையினால் நெருடிக்கொண்டும், இப்படியாக மாறி மாறி மூச்சுத் திணற என் இரண்டு முலைகளிருந்தும் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை! 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 041 - திருவஹீந்திரபுரம் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||041. திருவஹீந்திரபுரம்|| 
||திரு அயிந்தை - திருவந்திபுரம் - கடலூர்||
||நாற்பத்தி ஒன்றாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1148 - பெரிய திருமொழி - 3.1.1
இருந் தண் மா நிலம் ஏனம் அது ஆய்* வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி*
கருந் தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமல நல் மலர்த் தேறல் அருந்தி* 
இன் இசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழிதரு* திருவயிந்திரபுரமே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1149 - பெரிய திருமொழி - 3.1.2
மின்னும் ஆழி அங்கையவன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பல் பொருள் ஆகிய* பரன் இடம் வரைச் சாரல்* 
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப்* பிணி அவிழ் கமலத்து*
தென்ன என்று வண்டு இன் இசை முரல் தரு* திருவயிந்திரபுரமே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1150 - பெரிய திருமொழி - 3.1.3
வையம் ஏழும் உண்டு ஆல் இலை வைகிய மாயவன்* 
அடியவர்க்கு மெய்யன் ஆகிய தெய்வநாயகன் இடம்* மெய்தகு வரைச் சாரல்* 
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு* திருவயிந்திரபுரமே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1151 - பெரிய திருமொழி - 3.1.4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன்* மார்பு அகம் இரு பிளவா*
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்* 
மிடைந்து சாறு கொண்ட மென் கரும்பு இளங் கழை தகை* 
விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1152 - பெரிய திருமொழி - 3.1.5
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து* 
ஆயர் பூங் கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்* 
வேங்கை கோங்கு செண்பகக் கொம்பினில்* 
குதிகொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர்தரு* திருவயிந்திரபுரமே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1153 - பெரிய திருமொழி - 3.1.6
கூன் உலாவிய மடந்தை தன்* கொடுஞ் சொலின் திறத்து இளங் கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்* 
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதிள் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1154 - பெரிய திருமொழி - 3.1.7
மின்னின் நுண் இடை மடக் கொடி காரணம்* விலங்கலின் மிசை இலங்கை
மன்னன்* நீள் முடி பொடி செய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்* 
அன்னம் மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையொடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1155 - பெரிய திருமொழி - 3.1.8
விரை கமழ்ந்த மென் கருங் குழல் காரணம்* வில் இறுத்து* 
அடல் மழைக்கு நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* 
நிலவிய இடம் தடம் ஆர்* 
வரை வளம் திகழ் மத கரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தி*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1156 - பெரிய திருமொழி - 3.1.9
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்*
விசயனுக்கு ஆய்* மணித் தேர் கோல் கொள்* 
கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்* 
கால் கொள் கண் கொடிக் கைஎழக்* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல்*
சேல்கள் பாய்தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1157 - பெரிய திருமொழி - 3.1.10
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்சத்* தண் திருவயிந்திரபுரத்து* 
மேவு சோதியை வேல் வலவன்* கலி கன்றி விரித்து உரைத்த*
பாவு தண் தமிழ்ப் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவத புராணம் - 103

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 48||

||ஸ்கந்தம் 04||

தக்ஷனின் கதையைத் தொடர்ந்து சொன்னார் மைத்ரேயர்.

தன் மாப்பிள்ளையான சிவன் ப்ரஜாபதியான தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று அஹங்காரத்துடன் அவரைக் கண்டபடி ஏசத் துவங்கினான் தக்ஷன். அனைத்தையும் நிந்தாஸ்துதியாக ஏற்று பரமேஸ்வரன் அமைதி காத்தார்.

ஆனால் சபையிலிருந்த மற்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் தக்ஷனைத் தடுக்க முயற்சி செய்தும் அவன் கேட்காமல் யாகத்தில் ஹவிர்பாகம் கிடையாது என்ற சிவனுக்கு சாபமும் அளித்தான்.

தன் தலைவரை நிந்தனை செய்ததைப் பொறுக்க இயலாமல் நந்திதேவர் தக்ஷனுக்கு ஆட்டுத்தலை கிடைக்கட்டும் என்று சாபமளித்தார். அவர் இன்னொரு கொடூரமான சாபத்தை அந்தணர்க்கும் அளித்தார்.

அறிவிலியான தக்ஷன் கர்மங்களை மெய்யென்று எண்ணுகிறான். இவனும், இவனைச் சேர்ந்தவர்களும்‌ ஸம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கட்டும். இவன் செய்த நிந்தனையை அனுமதித்த அந்தணர்களுக்கு பிழைப்பிற்காக வேத அத்யயனம்‌செய்யும் நிலைமை வரட்டும். பிழைப்பிற்காகவே விரதங்களும், தவமும் மேற்கொண்டு பொறி இன்பத்தில் உழலட்டும் என்ற கொடூரமான சாபத்தை அளித்தார் நந்திதேவர்.


அதைக் கண்டு பொறுக்காத ப்ருகு முனிவர் சிவனடியார்கள்‌ ஆசாரம் விடுத்து பாஷண்டிகளாக அலையட்டும்‌ என்று சாபம் விடுத்தார்.

அவரது சாபத்தைக் கண்டு வருந்திய சிவன் தன் கணங்களுடன் அமைதியாக வெளியேறினார்.

விதுரா! ப்ரஜாபதிகள் அனைவரும் யாகத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள்.

மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான இப்பகைமை வெகுகாலம் நீடித்தது.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தலைவனாக தன் மகன் தக்ஷனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.‌ இதனால் அவனது கர்வம் மிதமிஞ்சி வளர்ந்தது.

அவன் பரமேஸ்வரனையும், ப்ரும்மநிஷ்டர்களையும் அவமதித்து வாஜபேயம்‌ என்ற யாகத்தைச் செய்து முடித்தான்.

பின்னர் ப்ருஹஸ்பதிஸவம் என்ற சிறந்த யாகத்தைத் துவங்கினான். அந்த வேள்வியில் தேவர்கள், ப்ரும்மரிஷிகள், பித்ருக்கள் அனைவர்க்கும்‌ மரியாதை செய்தான்.

அப்போது தக்ஷான் மகளான ஸதீதேவி ஆகாய மார்கத்தில் சென்ற தேவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தன் தந்தை செய்யும் வேள்வி பற்றி அறிந்து கொண்டாள்.

கயிலைக்குச் சமீபத்தில் வசிக்கும் கந்தர்வர்கள் அவரது மனைவிகளுடன் நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் பல அணிந்து,‌ விமானம் ஏறிச்செல்லும் காட்சியைக் கண்டு தானும் போகவேண்டும் என்று ஆர்வம் கொண்டாள்.

தன்‌ கணவரான பரமேஸ்வரனிடம்‌ சென்று, தங்கள்‌ மாமனார் இப்போது யாகம்‌நடத்துகிறாராம். எல்லா தேவர்களும்‌ அங்குதான் செல்கிறார்கள். நாமும் போகலாமே என்றாள்.

அந்த வேள்விக்கு என் சகோதரிகள்‌ அனைவரும் வருவார்கள். என் தாயையும் அவர்களையும் பார்த்து வெகு காலமாயிற்று. என் தந்தை எனக்களிக்கும் சீர்வரிசைகளை நான் தங்களுடன்‌ சேர்ந்து பெற விரும்புகிறேன்.

மாயையால் விளங்கும்‌ இப்பிரபஞ்சம் தங்களிடமே நிலைத்து விளங்குகிறது. ஆனால் நானோ பெண். உண்மை ஸ்வரூபத்தை அறிய இயலாத பேதை. தங்களின் கருணைக்குப் பாத்திரமானவள்.

தந்தை, உற்ற நண்பர், ஆசிரியர், கணவன் ஆகியோர் வீட்டிற்கு அழைப்பின்றிச் செல்லலாம் என்பது சாஸ்திரமல்லவா?

எனவே தயை கூர்ந்து என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என்றாள்.

அதைக்கேட்டுச் சிரித்த பரமேஸ்வரன், தேவீ! நீ சொல்வது உண்மைதான். அன்புள்ளவர் வீட்டிற்கு அவசியம் செல்லலாம். ஆனால், அஹங்காரத்தினால் எண்ணம் மாசடைந்தவர்கள் சான்றோர் பெருமையை உணர்வதில்லை. அவர்கள் வீட்டிற்கு நம் உறவினர்தானே என்றெண்ணி ஒருக்காலும் போகக்கூடாது.

அவர்கள் அவமரியாதையாகப் பேசக்கூடும். வில்லால் அடிக்கும் அம்பைக் காட்டிலும் சொல்லால் அடிப்பது அதிக வேதனை தரும்.

சொல்லம்பால் புண்பட்டவனால் அதை மறக்க இயலாது. எபோதும்‌ அதை நினைத்துப் புலம்புவான்.

அழகியே! உன் தந்தை உயர்ந்தவர்தான். ஆனால் எனக்கு உன்னைத் திருமணம் செய்து கொடுத்ததை நினைத்து வருந்துகிறார். இப்போது நீ அங்கு சென்றால் அன்போ மரியாதையோ கிடைக்காது.

ஒருவரை ஒருவர் வணங்குவது அவர் உள்ளுறையும் இறைவனையே சேரும். ஆனால், அஹங்காரம்‌ நிரம்பியவர் மனத்தில் இறைவன் வெளிப் படுவதில்லை.

என்னிடம் பகை கொண்ட உன் தந்தையை நீ சென்று பார்த்தால் அவர் உன்னை அவமதிப்பார்.

நல்ல நிலையில் உள்ளோருக்கு உற்றார் உறவினரால் அவமானம் நேரிட்டால் அது அவரின் திடீர் மரணத்திற்கு காரணமாகி விடும் என்றார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ப்ரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி இயற்றிய 

ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸுப்ரபாதம் - 2

உத்திஷ்டோ²த் திஷ்ட² கோ³விந்த³
உத்திஷ்ட² க³ருட³த்வஜ|
உத்திஷ்ட² கமலா காந்தா
த்ரை லோக்யம் மங்க³ளம் கு³ரு|| (2)


கோவிந்தா! விரைவாகத்  துயில் எழுவாய்! கருடனைக்  கொடியில் கொண்டவனே! பள்ளி  எழுந்தருள்வாய்! செந்தாமரையில் பெருமிதம் கொண்டு வீற்றிருக்கும் திருமகளின் நாயகனே! பள்ளி எழுந்தருள்! மூன்று உலகங்களையும் நீ மங்களம் உடையதாக செய்வாயாக! நீ திருக்கண் விழிக்காவிடில் மூன்று உலகங்களும் செம்மை பெறாது ஒழியும். ஆதலால்  அவைகளை வாழ வைப்பதற்காகவே நீ திருக்கண் மலர வேண்டும்! துயில் எழுந்து அருள்வாயாக. வேங்கடவா எழுந்தருள்வாய்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ முகுந்த மாலா - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த 

ஸ்ரீ முகுந்த மாலா – 2

ஜயது ஜயது தே³வோ தே³வகீ நந்த³ நோயம் 
ஜயது ஜயது க்ருஷ்ணோ வ்ருஷ்ணி வம்ஸ பிரதீ³ப:|
ஜயது ஜயது மேக⁴ ஸ்²யாமள கோமாளாங்கோ³ 
ஜயது ஜயது ப்ருத்²வி பா⁴ர நாஸோ² முகுந்த³:||


தேவகிக்கு குழந்தையாகத் தோன்றிய கண்ணன் வெற்றி கொள்வானாக! ஆயர் குலத்திற்கே அணியாகிய விளங்கும் க்ருஷ்ணன் வெற்றி கொள்வானாக! மிருதுவான, தளிர் போன்ற மேனியையுடைய அந்த முகில் வண்ணன் வெற்றி கொள்வானாக! இந்த பூமியின் பாரத்தை நீக்க அவதரித்த அந்த முகுந்தன் வெற்றி கொள்வானாக! 

இந்த ஸ்லோகத்தின் மூலமாக குலசேகரர் கண்ணனுக்கு பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்கிறார். அனைத்து மங்களங்களுக்கும் மூல காரணமாக விளங்கும் ஸ்ரீ ருக்மிணி பிராட்டியின் இதயத்தை வென்ற அழகிய மணவாளனாக விளங்கும் முகுந்தனுக்கே வெற்றி என்று ஜெய கோஷம் எழுப்புகிறார்.

பகவானுடைய சரணாரவிந்தங்களே நம் அனைவரையும் காக்க வல்லது. அசையும், அசையா பொருட்கள் அனைத்திலும் வியாபித்து, நீக்கமற நிறைந்திருக்கும், அந்த தன்னிகரற்ற பரம்பொருளாகிய திருமாலுக்கு, நாம் பல்லாண்டு பாட வேண்டும் என்பதை இந்தப் பாடலின் மூலம் அறியலாம். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திருவேங்கட மஹாத்மியம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||கிரீடாசலம்||

||ஓம் நமோ நாராயணா||

ஞான லோகத்தில் தியானத்தில் இருந்த
மோன முனிவர்கள் அறிந்தனர் இதனை

தரணியைத் தன் முகத்தில் தாங்கி வந்தார்
வராஹ பெருமான் நீரிலிருந்து வெளியே

ஸ்தாபித்தார் பூலோகத்தை முன்போலவே
ஸ்தாபித்தார் சாகரங்களை முன்போலவே

சிருஷ்டியைத் தொடங்கினான் பிரம்மதேவன்
சிருஷ்டித்தான் சூரிய சந்திரர்களை முதலில்

பிற ஜீவராசிகளையும் படைத்தான் பின்னர்
பிரம்மதேவன் சரியான வரிசைக் கிரமத்தில்

பூலோகத்தை மீட்ட வராஹ பெருமான்
பூவுலகிலேயே தங்கிவிட விழைந்தார்

கருடனைப் பணித்தார் வைகுந்தம் செல்க
பிரியமான கிரீடாச்சலத்தைக் கொணர்க

வைகுந்தம் விரைந்தான் உடனே கருடன்
வைக்கும் இடத்தையும் தேர்வு செய்தார்

கோமதி நதிக்குத் தெற்கேயும் மற்றும்
கீழ்க்கடலுக்கு மேற்கேயும் அமைந்தது

நாராயண கிரியே ஆகும் கிரீடாசலம்
நவரத்தினங்கள் நிரம்பிய சிகரங்கள்

காய் கனி மூலிகைகளால் நிறைந்தது
கந்தம் கமழும் மலர்களால் நிறைந்தது

ஒலிக்கும் பறவைகளின் பாடல் கொண்டது
ஒலிக்கும் சுனைகள் நீரோடைகள் கொண்டது

தேர்வு செய்த இடத்தில் மலையை வைக்கப்
பார்மீது ஆதிசேஷன் படுத்ததுபோல இருந்தது

இருந்தது ஸ்வாமி புஷ்கரிணி என்னும் தடாகம்
கிரிகளின் இடையே மற்றும் தருக்களின் நடுவே

நவரத்தினங்கள் இழைத்த தூண்கள் தாங்கிட
நடுநாயகமாக அமைந்து இருந்தது விமானம்

அழகிய மண்டபங்களோடு கூடிய விமானம்
அமைந்தது ஸ்வாமி புஷ்கரிணிக் கரையில்

எழுந்தருளினார் வராஹ பெருமான்
தாம் விழைந்தபடி பூவுலகில் விமானத்தின் கீழ்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 159

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 159||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 21||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

இமம் ஸ்தவம் ப⁴க³வதோ 
விஷ்ணோர் வ்யாஸேன கீர்திதம்|
படே²த்³ய இச்சே²த்புருஷ: 
ஸ்²ரேய: ப்ராப்தும் ஸுகா²நி ச|| 


உன்னதமான பேரின்பத்தையும், உலக இன்பங்களையும், செழிப்பையும் பெற விரும்பும் எவரும், மகா முனிவர் வியாசரால் இயற்றப்பட்ட பகவான் விஷ்ணுவின் இந்தப் பாடலைப் படிக்க வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.23

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.23 

யதி³ ஹ்யஹம் ந வர்தேயம் 
ஜாது கர்மண்ய தந்த்³ரித:|
மம வர்த்மாநு வர்தந்தே 
மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²:||

  • யதி³ - ஆயினும் 
  • ஹி - நிச்சயமாய்  
  • அஹம் - நான் 
  • ந - இல்லையேல்  
  • வர்தேயம் - ஈடுபட 
  • ஜாது - எப்போதும் 
  • கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில்  
  • அதந்த்³ரிதஹ - பெரும் கவனத்தோடு  
  • மம - என்னுடைய 
  • வர்த்ம - பாதை  
  • அநுவர் தந்தே - பின்புற்றும்  
  • மநுஷ்யாஃ - மனிதரெல்லாம் 
  • பார்த² - பிருதாவின் மகனே 
  • ஸர்வஸ²ஹ - எல்லாவிதத்திலும்

பார்த்தா! எப்போதும் கடமைகளைச் செயலாற்றுவதில், நான் பெரும் கவனத்தோடு இல்லாமல் விட்டு விட்டால், எல்லா விதத்திலும், என்னுடைய பாதையை மனிதரெல்லாம் பின்பற்றுவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.16

விசக்ஷணோ ஸ்யார்ஹதி வேதி³தும் விபோ⁴ர் 
அநந்த பாரஸ்ய நிவ்ருத்தித: ஸுக²ம்|
ப்ரவர்த மாநஸ்ய கு³ணைர் அநாத்மநஸ் 
ததோ ப⁴வாந் த³ர்ஸ²ய சேஷ்டிதம் விபோ⁴:||

  • விசக்ஷணோ - புத்திமானான ஒருவன் தான்
  • நிவ்ருத்திதஸ் - எல்லாவிதமான கர்மாக்களையும் விட்டொழிப்பதால்
  • அநந்த பாரஸ்ய - தேச கால பரிச்சேதமில்லாதவன் ஆன
  • விபோ⁴ர் - பரமாத்மாவின் உடைய
  • ஸுக²ம் - நிர்விகல்பக சுக ரூபமான ஸ்வரூபத்தை
  • வேதி³தும் அர்ஹதி - அறிவதற்கு யோக்கியன் ஆகிறான்
  • ததோ - ஆகையால்
  • விபோ⁴ஹ - ஹே பெரியோனே!
  • அநாத்மநஸ் - தேகாதிகளில் அபிமானத்தோடு கூடியவனும்
  • கு³ணைர் ப்ரவர்த மாநஸ்ய  - ஸத்வாதி குணங்களோடு பிரவிருத்திக்கின்ற மனிதனின் சிரேயசின் பொருட்டு
  • ப⁴வாந் - தாங்கள்
  • அஸ்ய சேஷ்டிதம் - அந்த வாஸுதேவனின் லீலைகளை
  •  த³ர்ஸ²ய - காண்பிப்பீராக

புத்திமானான ஒருவன், பகவானின் 'ஸத் சித் ஆனந்தமயமான' திரு உருவத்தை வைராக்கியத்தால் அறிந்து ஸுகம் பெற முடியும். ஆகவே, முக்குணங்கள் நிறைந்த இவ்வுடலிலேயே பற்றுக் கொண்டு ஜீவிக்கும் பாமர மனிதனின் முன்னேற்றத்திற்காக வேண்டி, தாங்கள் அந்த பகவான் வாசுதேவனின் திரு விளையாடல்களைச் சொல்லுங்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.94

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.94

நித்யம் ப்ரமுதி³தா: ஸர்வே
யதா² க்ருத யுகே³ ததா²|
அஸ்²வ மேத⁴ஸ²தை ரிஷ்ட்வா
ததா² ப³ஹு ஸுவர்ணகை:|| 

  • க்ருத யுகே³ - க்ருத யுகத்தில்
  • யதா² - எப்படியோ
  • ததா² - அப்படியே
  • ஸர்வே - எல்லோரும்
  • நித்யம் - எப்பொழுதும்
  • ப்ரமுதி³தாஸ் - சந்தோஷம் அடைந்தவர்களாக இருந்தார்கள்
  • அஸ்²வ மேத⁴ ஸ²தைர் - அநேக நூற்றுக்கணக்கான அஸ்வ மேதங்களாலே
  • ததா² - அப்படியே
  • ப³ஹுஸு வர்ணகைஹி - வெகு த்ரவ்யங்களுடன்
  • இஷ்ட்வா - யாகங்களைச் செய்து

கிருத யுகத்தில் இருப்பது போல, குடிமக்கள் அனைவரும் எப்போதும் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அந்தப் பெருஞ் சிறப்புமிக்க ஸ்ரீராமர், நூறு அஷ்வ மேதங்களாலே, வெகு த்ரவியங்களுடன்,  

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்