About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 9 December 2025

சித்திரை - திருவாதிரை - ஸ்ரீ சோமாசியாண்டான்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திருவாதிரை நக்ஷத்திரம்

ஸ்ரீ சோமாசியாண்டான்  
(ஸ்ரீ ராம க்ரது நாதார்யர்) 

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - திருவாதிரை
  • அவதார ஸ்தலம் -  காராஞ்சி
  • ஆசார்யன் - எம்பெருமானார்
  • அருளிச் செய்தவை - ஸ்ரீ பாஷ்ய விவரணம், குரு குணாவளி (எம்பெருமானார் பெருமை பேசுவது), ஷடர்த்த ஸம்க்ஷேபம்

தனியன்
நௌமி லக்ஷ்மண யோகீந்த்ர 
பாதஸேவைக தாரகம்|
ஸ்ரீராமக்ரதுநாதார்யம் 
ஸ்ரீபாஷ்யாம்ருத ஸாகரம்||

சோம யாகம் செய்யும் குடியில் பிறந்த ஸ்ரீ ராம மிச்ரர். எம்பெருமானார் ராமானுஜரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவர். ஸோமயாஜியார் என்றும் கூறுவர். ஸ்ரீபாஷ்யத்துக்கு முதலில் வ்யாக்யானம் சாதித்தவர் இவரே. ஸ்ரீரங்கம் பெரிய கோயிலில் பஞ்சாங்கம் தொகுக்கும் கைங்கர்யம்  இவர் பரம்பரையே இன்றும் செய்து வருகிறது. ச்ருத பிரகாசிகா பட்டர், நாயனாராச்சான் பிள்ளை, வேதாந்தாசார்யர் போன்றோர் தம் வ்யாக்யானங்களில் இவரை உதாஹரிக்கின்றனர். க்ருபாமாத்ர ப்ரசன்னாசார்யர்களின் பெருமையை விளக்கும் நாயனாராச்சான் பிள்ளை இவரது குரு குணாவளி  ச்லோகம் ஒன்றை உதாஹரிக்கிறார்.அவர் பாடும் திறமை கொண்டவர், அவர் பாடினால் பெருமாளே ஆடுவார் என்று போற்றப்படுகிறார்.

எம்பெருமானாரிடம் காலக்ஷேபம் கேட்டு அவரோடிருந்த சோமாசியாண்டான், சிறிது காலம் தம் ஊரான காராஞ்சி வந்து, திருமணம் ஆகி, பின் மனைவி வற்புறுத்தலால் மீண்டும் எம்பெருமானாரிடம் சென்று சேர இயலாது கிராமத்திலேயே இருக்க, தம் வழிபாட்டுக்கு ஒரு எம்பெருமானார் விக்ரஹம் செய்விக்க, அவ்விக்ரஹம் சிற்பி முயன்றும் சரிவராமல் போக, சிற்பியிடம் அந்த விக்ரஹத்தை அழித்து வேறு விக்ரஹம் செய்யுமாறு கூறுகிறார். அன்று இரவு அவர் கனவில் ஸ்வாமி வந்து, ”ஆண்டான், நீர் எங்கிருப்பினும் நம் நினைவுண்டதாகில் கவலை வேண்டாவே. நீர் ஏன் நம்மை இப்படித் துன்புறுத்துகிறீர்? நம்மிடம் விச்வாஸம் இல்லையெனில் இவ்விக்ரஹத்தால் மட்டும் என்ன பயன்”என வினவ, விழித்தெழுந்த ஆண்டான் விக்ரஹத்தைப் பாதுகாப்பாய் வைத்துவிட்டு, மனைவியைத் துறந்து, ஸ்ரீரங்கம் வந்து எம்பெருமானார் திருவடியில் வந்து அழுதபடி விழுந்தார். எம்பெருமானார் என்ன நடந்தது என்று வினவ, ஆண்டான் நடந்ததை விவரித்தார். உடையவரும் சிரித்து, “உம்முடைய மனைவியிடத்தில் உமக்கு இருந்த பற்றை விலக்கவே இதைச் செய்தோம். நீர் நம்மை விட்டாலும், நாம் உம்மை விடமாட்டோம். நீர் எங்கிருந்தாலும், நம்முடைய அபிமானம் உள்ளதால் உம்முடைய பேற்றுக்கு ஒரு குறையும் இல்லை. நம்மிடம் எல்லாக் கவலைகளையும் விட்டு இனி நீர் சுகமாய் இருக்கலாம்” என்று அருளினார்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - திருவாதிரை - ஸ்ரீ ஆட்கொண்டவில்லி ஜீயர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திருவாதிரை நக்ஷத்திரம்

ஸ்ரீ ஆட்கொண்டவில்லி ஜீயர் 
(வகுளாபரணர்)

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - திருவாதிரை

தனியன்
ஜ்ஞாந வைராக்ய ஸம்பந்நம் 
ராமாநுஜ பதாச்ரிதம்| 
சதுர்த்தாஸ்ரம ஸம்மந்தம் 
ஸம்ய மீந்தரம் நாம் யஹம்||

ராமானுஜரால் நிறுவப்பட்ட 74 சிம்மாசனங்களில் ஒருவர், ஞானம் மற்றும் வைராக்கியம் நிறைந்தவர், வகுளாபரணர் என்ற திருநாமம் கொண்டவர்; சித்திரை மாத திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர். இவர் நஞ்சீயரை சந்தித்து மரியாதை செய்த நிகழ்வும், நம்பெருமாளை சேவிக்க வந்ததும் ஆன்மீக வரலாற்றில் குறிப்பிடப்படுகின்றன. 

பெருமாளை சேவித்து விட்டு வருகிறார் நஞ்சீயர். ஆட்கொண்ட வில்லி ஜீயரும் எதிரே வருகிறார். இருவரும் எதிர் எதிரே சந்தித்துக் கொள்கிறார்கள். நஞ்சியர் யோசிக்காமல்  ஆட்கொண்ட வில்லி ஜீயரின் காலில் விழுந்து தண்டன் சமர்ப்பிக்கிறார். ஆட்கொண்ட வில்லி ஜீயர் நடுங்கி போய்,  'அடியேன் ஒரு அபராதி. இவ்வளவு நாள் பகவத் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தது எல்லாம் பொய். பகவத் சம்பந்தம் எப்போது உறுதியாகிறது என்றால் ஒரு அடியாரை பார்க்கும் பொழுது கீழே விழும் போது தான் இது தான் மெய். உம்மை போல எனக்கு சட்டு என்று விழ தோன்றவில்லையே அடியேனுக்கு முன் நீர் விழுந்து விட்டீரே!' என்று வருத்தப்பட்டாராம். அதற்கு நஞ்சீயர், 'அப்படியெல்லாம் இல்லை. நீர் எம்பெருமானாரின் ஸிஷ்யர். மற்றவர்களுக்கு ஆசிரியராக இருக்கிறீர்' என்று சமாதானம் செய்தாராம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - திருவாதிரை - ஸ்ரீ ராமாநுஜர்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

திருவாதிரை நக்ஷத்திரம்

1. ஸ்ரீ இராமாநுஜர்
(எம்பெருமானார்)



||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

சித்திரை - ரோஹிணி - ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி பாலதந்வி வரதாச்சார்யார்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ரோஹிணி நக்ஷத்திரம்

ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி 
பாலதந்வி வரதாச்சார்யார்

  • மாதம் - சித்திரை
  • நக்ஷத்திரம் - ரோஹிணி

தனியன்
ஸ்ரீமத் கௌஸிக வார் தீந்தும் 
ஸீலாதி குண ஸாகரம்|
ஸ்ரீமத் கநார்ய ஸத் புத்ரம் 
வரதார்யம் அஹம் பஜே||

வாழித் திருநாமம்
1. கௌசிகர் தம் குலத்து உதித்த குணக் கடலோன் வாழியே|
தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயன் அவன் வாழியே|
சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே|
திருவரங்கன் பெரிய கோயில் போற்றும் அவன் வாழியே|
திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே|
காரேய் கருணை இராமாநுசன் கழல் பணிவோன் வாழியே|
பதின்மர் தம் பாசுரத்தில் பற்று உடையோன் வாழியே|
நம் பாலதந்வி வரதாரியன் பொற் பதங்கள் வாழியே||

2. சீராரும் இளையவில்லி இணை அடிகள் வாழியே|
பன்னிரு சீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே|
பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே|
திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே|
திருமுகமும் கருணை மிகுக் கண்ணின் இணைகள் வாழியே|
திருமுடியில் திகழ் அழகுக் குழலொழுங்கும் வாழியே|
தாள் பணிவோர் ஆருரைப் பேணும் அவன் வாழியே|
கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே||

சீர் பாட்டு
1. வாழி இளையவில்லி ஆச்சான்
மாதக வால் வாழும் பால தந்வி வரதாசிரியன்
வாழியவன் ஸரணாகதி மொழிப் பொருளை
சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்|

2. மாலடியார் வாழ மாநகர் அரங்கம் வாழ 
பெரும்பூதூர் மாமுனி தன் மன்னுபுகழ் வாழ
ஆழிசூழ் அனைத்துலகும் தாம் வாழ 
நன்னெறி சேர் ஆத்திகர் புகழ் இளையவில்லி வரதாரியனே 
இன்னுமொரு நூற்றாண்டு இரும்|

வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர், குறிப்பாக ராமானுஜரின் சிறிய தாயாரின் குமாரர், கோயில் கந்தாடை அண்ணனின் தம்பி, மற்றும் பாலதந்வி ஆச்சான் என்றும் போற்றப்பட்டவர். இவர் ஸ்ரீ வைஷ்ணவ மரபில் கொண்டாடப்படும் ஒரு ஞானி. எம்பெருமானாருடைய சிஷ்யர்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர், ஸ்ரீ வைஷ்ணவப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தியுடனும், தத்துவ அறிவும் கொண்டவர். "வாழி இளையவில்லி ஆச்சான், மாதகவால் வாழும் பாலதந்வி" என்ற வரிகள் இவரை வாழ்த்துகின்றன. மேலும் "வரதா" என்ற பெயர் வரத நாராயணரைக் குறிக்கலாம், இவர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருமாளிகை தொடர்பானவர். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||