||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ரோஹிணி நக்ஷத்திரம்
ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி
பாலதந்வி வரதாச்சார்யார்
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - ரோஹிணி
தனியன்
ஸ்ரீமத் கௌஸிக வார் தீந்தும்
ஸீலாதி குண ஸாகரம்|
ஸ்ரீமத் கநார்ய ஸத் புத்ரம்
வரதார்யம் அஹம் பஜே||
வாழித் திருநாமம்
1. கௌசிகர் தம் குலத்து உதித்த குணக் கடலோன் வாழியே|
தொல் புகழ் சீர் தொட்டையாரியன் தனயன் அவன் வாழியே|
சித்திரையில் உரோகிணி நாள் உதித்த செல்வன் வாழியே|
திருவரங்கன் பெரிய கோயில் போற்றும் அவன் வாழியே|
திருகடிகைத் தக்கானைத் தினம் தொழுவோன் வாழியே|
காரேய் கருணை இராமாநுசன் கழல் பணிவோன் வாழியே|
பதின்மர் தம் பாசுரத்தில் பற்று உடையோன் வாழியே|
நம் பாலதந்வி வரதாரியன் பொற் பதங்கள் வாழியே||
2. சீராரும் இளையவில்லி இணை அடிகள் வாழியே|
பன்னிரு சீர் திருநாமம் அணிந்த எழில் வாழியே|
பன்னிருவர் பாடல்கள் பயில் பவளம் வாழியே|
திருமலைமால் திருக்கோஷ்டித் தழைக்க வந்தான் வாழியே|
திருமுகமும் கருணை மிகுக் கண்ணின் இணைகள் வாழியே|
திருமுடியில் திகழ் அழகுக் குழலொழுங்கும் வாழியே|
தாள் பணிவோர் ஆருரைப் பேணும் அவன் வாழியே|
கௌஸிகர் தம் குலமகனார் வாழி என்றும் வாழியே||
சீர் பாட்டு
1. வாழி இளையவில்லி ஆச்சான்
மாதக வால் வாழும் பால தந்வி வரதாசிரியன்
வாழியவன் ஸரணாகதி மொழிப் பொருளை
சிச்சனவன் உய்யும்படி உரைக்கும் சீர்|
2. மாலடியார் வாழ மாநகர் அரங்கம் வாழ
பெரும்பூதூர் மாமுனி தன் மன்னுபுகழ் வாழ
ஆழிசூழ் அனைத்துலகும் தாம் வாழ
நன்னெறி சேர் ஆத்திகர் புகழ் இளையவில்லி வரதாரியனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்|
வைணவ ஆச்சார்யர்களில் ஒருவர், குறிப்பாக ராமானுஜரின் சிறிய தாயாரின் குமாரர், கோயில் கந்தாடை அண்ணனின் தம்பி, மற்றும் பாலதந்வி ஆச்சான் என்றும் போற்றப்பட்டவர். இவர் ஸ்ரீ வைஷ்ணவ மரபில் கொண்டாடப்படும் ஒரு ஞானி. எம்பெருமானாருடைய சிஷ்யர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர், ஸ்ரீ வைஷ்ணவப் பாரம்பரியத்தில் ஆழ்ந்த பக்தியுடனும், தத்துவ அறிவும் கொண்டவர். "வாழி இளையவில்லி ஆச்சான், மாதகவால் வாழும் பாலதந்வி" என்ற வரிகள் இவரை வாழ்த்துகின்றன. மேலும் "வரதா" என்ற பெயர் வரத நாராயணரைக் குறிக்கலாம், இவர் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருமாளிகை தொடர்பானவர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment