||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
க்ருத்திகை நக்ஷத்திரம்
ஸ்ரீ ஜீயர் நாயனார்
(மணவாள மாமுனிகளின் பூர்வாஸ்ரம பௌத்ரன்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - க்ருத்திகை
- அவதார ஸ்தலம் - ஆழ்வார் திருநகரி
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருவரங்கம்
- ஆசார்யன் - அழகிய மணவாள மாமுநிகள்
- அருளிச் செய்தவை - ஸ்ரீ நக்ஷத்ர மாலிகை
தனியன்
அஸ்மாஸு வத்ஸல தயா க்ருபயா சா பூய:
ஸ்வேச்சாவ தீர்ணமிவ ஸௌம்ய வரம் முநீந்த்ரம்|
ஆசார்ய பௌத்ரம் அபிராம வராபி தாநம்
அஸ்மத் குரும் பரம காருணிகம் பஜாமி||
வாழித் திருநாமம்
1. சீராரும் வர முனிவன் செழும் குலத்தோன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
பாராரும் எதிராசன் பதம் பணிவோன் வாழியே|
பாடியத்தின் உட்பொருளை பகரும் அவன் வாழியே|
ஆரம் சூழ் குருகை தனில் அவதரித்தோன் வாழியே|
ஆழ்வார்கள் கலைப் பொருளை ஆய்ந்து உரைப்போன் வாழியே|
வரத குரு கருணையினால் வாழ்வு உடையோன் வாழியே|
வான் சீர் நயினார் மலர்ப் பதங்கள் வாழியே||
2. பாகவதர் வாழ பராங்குசன் தன் சீர் வாழ|
தாமுடன் வந்து அணைந்தோன் தாம் வாழ|
போதமிகு தென் அரங்கம் வாழ|
சீயர் நயினார் இன்னமொரு நூற்றாண்டு இரும்||
பெரிய ஜீயர் ஸ்ரீ பாதத்து ஸிஷ்யர்கள் எல்லோரும் தங்கள் புத்திரர்களுக்கு நாயனார் என்று திருநாமம் சாற்றி இருந்த படியால் மூத்த திருக்குமாரர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரை ஜீயர் நாயனார் என்று குறிப்பிட்டு அழைத்தனர். ஜீயர் நாயனார் பெரிய ஜீயர் திருவடிகளை பிரியாது சேவை செய்து வந்தார். ஜீயர் நாயனார் உபதேச ரத்தின மாலையை வடமொழியில் ஸ்லோகமாக எழுதினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment