||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
க்ருத்திகை நக்ஷத்திரம்
1. ஸ்ரீ உய்யக் கொண்டார்
(ஸ்ரீ புண்டரீகாக்ஷர்)
- மாதம் - சித்திரை
- நக்ஷத்திரம் - க்ருத்திகை
- அவதார ஸ்தலம் - திருவெள்ளறை
- ஆசார்யன் – நாதமுனிகள்
- ஸிஷ்யர்கள் - மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்கார தாஸர், ஸ்ரீ புண்டரீக தாஸர், கோமடம் திருவிண்ணகரப்பன், உலகபெருமாள் நங்கை
- பரமபத ப்ராப்தி ஸ்தலம் - திருக்குருகூர்
- அருளிச் செய்தவை - திருப்பாவை தனியன்கள்
தனியன்
1. நம: பங்கஜ நேத்ராய நாத:
ஸ்ரீ பாத பங்கஜே|
ந்யஸ்த ஸர்வ பராய
அஸ்மத் குல நாதாய தீமதே||
2. மேஷ மாஸே சரோஜாஷம்
கிருத்திகா ஜாதம் ஆஸ்ரயே|
நாதயோகி பதாம் போஜ
த்வந்த ப்ரவண மாநசம்||
3. நமஸ்யாம் அரவிந்தாக்ஷம்
நாத பாவே வ்யவஸ்திதம்|
ஸூத்த சத்வ மயம்
சவ்ரேர் அவதாரம் இவா பரம்||
வாழி திருநாமம்
1. வால வெய்யோன் தனை வென்ற வடிவழகன் வாழியே|
மால் மணக்கால் நம்பி தொழும் மலர்ப் பதத்தோன் வாழியே|
சீல மிகு நாதமுனி சீர் உரைப்போன் வாழியே|
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்க வந்தோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்கு உரைத்தான் வாழியே|
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே|
மால் அரங்க மணவாளர் வளம் உரைப்போன் வாழியே|
வையம் உய்யக் கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே||
2. எந்தாதை நாதமுனி இணை அடியோன் வாழியே|
ஏராரும் சித்திரையில் கார்த்திகையான் வாழியே|
நந்தாமல் நாதமுனி நலம் புகழ்வோன் வாழியே|
நாலிரண்டும் ஐயைந்து நன்று அளித்தான் வாழியே|
செந்தாதார் வெள்ளறையில் சிறக்க வந்தோன் வாழியே|
சேம மணக்கால் நம்பிக்கு அருள் புரிந்தோன் வாழியே|
சிந்தாமல் தரிசனத்தை விளங்குவித்தான் வாழியே|
தேசுறும் உய்யக் கொண்டார் சேவடிகள் வாழியே||
நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர். நாதமுனிகள் யோக சாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார். இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள். இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார். நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:
Post a Comment