About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 27 September 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.4

ஜிஜ்ஞா ஸிதம் அதீ⁴தம் ச 
ப்³ரஹ்ம யத்தத்³ ஸநாதநம்|
அதா²பி ஸோ²சஸ் யாத்மாநம் 
அக்ரு தார்த² இவ ப்ரபோ⁴||

  • ஸநாதநம் - நித்தியமான
  • யத் ப்³ரஹ்ம - யாதொரு பிரும்மம் உண்டோ
  • தத்³ ஜிஜ்ஞா ஸிதம் - அது நன்கு அறியப்பட்டது
  • அதீ⁴தம் ச - நன்கு அனுபவ சாத்தியமாக பார்க்கவும் பட்டது
  • ததா² அபி - அவ்வாறு இருந்த போதிலும்
  • ப்ரபோ⁴ - ஹே பிரபு!
  • அக்ரு தார்த² இவ - செய்ய வேண்டியதை செய்து முடிக்காதவன் போல
  • ஆத்மாநம் - தன்னைப் பற்றி
  • ஸோ²சஸஸி – கவலைப்படுகிறீர்

அருவ பிரம்மம் என்ற விஷயத்தையும், அதிலிருந்து பெறப்பட்ட அறிவையும் நீங்கள் முழுமையாக வரையறுத்துள்ளீர்கள். என் அன்பான பிரபு, இவை அனைத்தையும் மீறி, நீங்கள் ஏன் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று நினைத்து விரக்தியடைய வேண்டும்?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.82

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.82

தாமுவாச ததோ ராம: 
பருஷம் ஜநஸம்ஸதி³|
அம்ருஷ்யமாணா ஸா ஸீதா 
விவேஸ² ஜ்வலநம் ஸதீ|| 

  • ததோ - பிறகு
  • தாம் - அவளைப் பார்த்து
  • ஜநஸம்ஸதி³ -  ஜன சபையில்
  • பருஷம் -  கொடுமையான வார்த்தையை
  • ராம: - ஸ்ரீராமர்
  • உவாச - சொன்னார்
  • ஸதீ  - பதிவ்ரதையான
  • ஸா ஸீதா - அந்த ஸீதை
  • அம்ருஷ்யமாணா - அந்தக் கொடிய வார்த்தைகளை ஸஹிக்க முடியாதவளாய்
  • ஜ்வலநம் -  அக்னியில்
  • விவேஸ² -  ப்ரவேசித்தாள்

அப்போது ஸ்ரீராமர், மக்கள் கூட்டத்தின் முன்பு அவளிடம் கடுமையாகப் பேசினார். கணவனிடம் அர்ப்பணிப்பு மிக்கச் சீதை, ஸ்ரீராமரின் சொற்களைப் பொறாமல் எரியும் தழலுக்குள் புகுந்தாள். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 123 - பெரியாழ்வார் திருமொழி - 2.1.6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

திவ்ய ப்ரபந்தம் - 123 - தேவகியின் தோன்றல்
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - முதலாம் திருமொழி - ஆறாம் பாசுரம்

செப்பு இள மென் முலைத்* தேவகி நங்கைக்குச்* 
சொப்படத் தோன்றி* தொறுப் பாடியோம் வைத்த* 
துப்பமும் பாலும்* தயிரும் விழுங்கிய* 
அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்* 
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்! (2)

  • செப்பு - ஸ்வர்ண கலசங்கள் போன்ற
  • இள மெல் முலை - இளமையையும் மென்மையையுமுடைய முலைகளையுடைய
  • தேவகி நங்கைக்கு - தேவகிப் பிராட்டிக்கு மகனாக
  • சொப்பட தோன்றி - நன்றாகப் பிறந்து
  • தொறுப்பாடியோம் - ஆய்ப்பாடியிலுள்ளவர்களாகிய நாங்கள் (தொறு  -  பசு)
  • வைத்த - சேமித்து வைத்த
  • துப்பமும் - நெய்யையும்
  • பாலும் - பாலையும்
  • தயிரும் - தயிரையும்
  • விழுங்கிய - உட் கொண்ட
  • அப்பன் - ஸ்வாமி (உபகாரகன்)
  • வந்து அப் பூச்சி காட்டுகின்றான் - அப்படிப் பட்ட மிகவும் பயங்கரமான பூச்சி காட்டுகின்றான்
  • அம்மனே - அம்மா!
  • அப் பூச்சி காட்டுகின்றான் - தலை கேசம் வைத்து மறைத்து, கண்ணை புரட்டி, சங்கு சக்கரம் காட்டி அப்பூச்சி காட்டுதல்

செம்பு போன்றதும், இளமையும் மிருதுவும் நிறைந்த ஸ்தனங்களை உடைய பெண்ணிற் சிறந்த தேவகிக்குப் பிறந்து, ஆயர்பாடிகளான எங்களுடைய நெய்யையும், பாலையும், தயிரையும் வயிறாரப் புசித்த ஸ்வாமி ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகின்றான்!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 038 - திருவெள்ளக் குளம் - 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||038. திருவெள்ளக் குளம்||
||அண்ணன் கோயில் - திருநாங்கூர்||
||முப்பத்தி எட்டாவது திவ்ய க்ஷேத்ரம்||

||ஸ்ரீ அண்ணன் பெருமாள் திருக்கோயில்||

||ஸ்ரீ அலர்மேல் மங்கை தாயார் ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாசன் பெருமாள்|| 
||திருவடிகளே சரணம்||

  • பெருமாள் மூலவர் - கண்ணன், நாராயணன், அண்ணன்
  • பெருமாள் உற்சவர் - ஸ்ரீநிவாசன்
  • தாயார் மூலவர் - அலர்மேல் மங்கை
  • தாயார் உற்சவர் - பூவார் திருமகள், பத்மாவதி
  • திருமுக மண்டலம் திசை - கிழக்கு
  • திருக்கோலம் - நின்ற
  • புஷ்கரிணி/தீர்த்தம் - வெள்ளக் குளம்
  • விமானம் - தத்வரசித
  • ஸ்தல விருக்ஷம் - வில்வம், பரசு
  • ப்ரத்யக்ஷம் - ருத்ரர், ஸ்வேத ராஜன்
  • ஸம்ப்ரதாயம் - தென் கலை
  • மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
  • பாசுரங்கள் - 10

--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி


ஸ்தல புராணம்

மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா" என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்" ஆகி விடுகிறார். எனவே தான் இங்குள்ள சீனிவாசப் பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்" என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப் போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "ஸ்ரீநிவாசன்", தாயாரின் திருநாமம் "அலர்மேல்மங்கை". திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். 

ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச் செய்தார். இதனை அறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து "திரு" மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் "திருமங்கை ஆழ்வார்" என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

துந்துமாரன் என்ற அரசனுக்கு ஸ்வேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி ஸ்வேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய "நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை" ஸ்ரீநிவாசப் பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறி வந்தான். மனமிறங்கிய பெருமாள், "ஸ்வேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையாது'' என்று கூறினார். வைணவத் தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்