About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 16 August 2026

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 3

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

3. கத³ம்ப³ ஸூன குண்ட³லம்
ஸு சாரு க³ண்ட³ மண்ட³லம்
வ்ரஜாங்க³னைக வல்லப⁴ம்
நமாமி க்ருʼஷ்ண து³ர்லப⁴ம்|
யஸோ²த³யா ஸ மோத³யா
ஸ கோ³பயா ஸ நந்த³யா
யுதம் ஸுகை²க தா³யகம்
நமாமி கோ³ப நாயகம்||

  • கத³ம்ப³ ஸூன - கடம்ப மலர்களாலான 
  • குண்ட³லம் - காதணிகளை அணிந்திருப்பவரை
  • ஸு சாரு - மிகவும் அழகான
  • க³ண்ட³ மண்ட³லம் - கன்னப் பிரதேசங்களைக் கொண்டவரை
  • வ்ரஜ அங்க³னா - விரஜ பூமியின், ஆயர்பாடியின் கோபியர்களுக்கு
  • ஏக வல்லப⁴ம் - ஒரே தலைவராக, பிரியமானவராக விளங்குபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • க்ருʼஷ்ணம் - ஸ்ரீ கிருஷ்ணரை
  • து³ர்லப⁴ம் - பக்தி இல்லாதவர்களால் அடைவதற்கு அரியவரை
  • யஸோ²த³யா - யசோதா தேவியுடனும்
  • ஸ மோத³யா - மகிழ்ச்சியுடனும்
  • ஸ கோ³பயா - கோபாலர்களுடனும், இடைச் சிறுவர்களுடனும்
  • ஸ நந்த³யா - நந்தகோபருடனும்
  • யுதம் - கூடி இருப்பவரை
  • ஸுக² ஏக தா³யகம் - தூய்மையான ஆனந்தத்தை மட்டுமே தருபவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • கோ³ப நாயகம் - ஆயர்களின் தலைவரான அந்த கிருஷ்ணரை

கதம்ப மலரினால் ஆன குண்டலங்களை காதில் அணிந்தவனே, அழகிய கன்னங்களைக் கொண்டவனே, கோகுலத்தில் வாழும் கோபிகைகளின் ப்ரேமையின் தலைவனே, ப்ரேம பக்தியை தவிர வேறெந்த மார்க்கத்தாலும் அடைய முடியாதவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோபர்கள், நந்தகோபர் மற்றும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் யசோதாவினால் எக்கணமும் சூழப்பட்டு இருப்பவனே, தனது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, கோபர்களின் பிரபுவான ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

2. அச்யுதம் கேஸ²வம் 
ஸத்யபா⁴மா த⁴வம் 
மாத⁴வம் ஸ்ரீத⁴ரம் 
ராதி⁴கா ராதி⁴தம்|
இந்தி³ரா மந்தி³ரம் 
சேதஸா ஸுந்த³ரம் 
தே³வகீ நந்த³னம் 
நந்த³ஜம் ஸந்த³தே⁴||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், என்றும் வீழாதவன்
  • கேஸ²வம் - அழகான தலை முடி உடையவன், கேசி என்ற அரக்கனை அழித்தவன்
  • ஸத்யபா⁴மா த⁴வம் - சத்யபாமாவின் கணவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் கணவன், அறிவுக்கு அதிபதி
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியைத் தன் மார்பில் தாங்குபவன்
  • ராதி⁴கா ராதி⁴தம் - ராதையால் ஆராதிக்கப்படுபவன், வழிபடப்படுபவன்
  • இந்தி³ரா மந்தி³ரம் - லட்சுமி தேவி வசிக்கும் இருப்பிடம்
  • சேதஸா ஸுந்த³ரம் - மனதால் நினைக்க அழகாக இருப்பவன், தூய்மையான உள்ளம் கொண்டவன்
  • தே³வகி நந்த³னம் - தேவகியின் மைந்தன், தேவகிக்கு மகிழ்ச்சி அளிப்பவன்
  • நந்த³ஜம் - நந்தகோபனின் மகன்
  • ஸந்த³தே⁴ - எப்போதும் வணங்குகிறேன், மனதாரத் துதிக்கிறேன்

அழிவற்றவனே, மனத் துயரங்களைப் போக்குபவனே, சத்ய பாமாவின் நாயகனே, மஹாலக்ஷ்மியை இதயத்தில் ஏற்றுக்கொண்ட அவளது பதியே, ராதையினால்  பூஜிக்கப்பட்டவனே, மஹாலக்ஷ்மிக்கு இருப்பிடம் அளித்தவனே, அழகுக்கே அழகு செய்பவனே, தேவகியின் மைந்தனே, நந் தகோபரின் பிள்ளையே, ஸ்ரீகோபாலா  உம்மை மனதால் தியானம் செய்து நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ ஸங்கர க்ருஷ்ண அஷ்டகம் 2

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

2. மனோஜ க³ர்வ மோசனம்
விஸா²ல லோல லோசனம்
விதூ⁴த கோ³ப ஸோ²சனம்
நமாமி பத்³ம லோசனம்|
கரார விந்த³ பூ⁴த⁴ரம்
ஸ்மிதாவ லோக ஸுந்த³ரம்
மஹேந்த்³ரமான தா³ரணம்
நமாமி க்ருஷ்ண வாரணம்||

  • மனோஜ - மன்மதனுடைய, காமதேவனுடைய
  • க³ர்வ - அகந்தையை, கர்வத்தை
  • மோசனம் - அழித்தவரை, நீக்கியவரை
  • விஸா²ல - பரந்த, பெரிய
  • லோல - சஞ்சலமான, அசைந்து கொண்டிருக்கும், கருணை ததும்பும்
  • லோசனம் - கண்களை உடையவரை
  • விதூ⁴த - போக்கப்பட்ட, துடைத்தெறியப்பட்ட
  • கோ³ப - கோபியர்களின், ஆயர்பாடி மக்களின்
  • ஸோ²சனம் - துக்கத்தை, சோகத்தை உடையவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • பத்³ம - தாமரை போன்ற
  • லோசனம் - கண்களை உடையவரை
  • கர - கைகளாகிய
  • அரவிந்த³ - தாமரை மலரினால்
  • பூ⁴த⁴ரம் - மலையைத் தாங்கியவரை, கோவர்த்தன கிரியைச் சுமந்தவரை
  • ஸ்மித - புன்னகையுடனும்
  • அவலோக - பார்க்கும் பார்வையினாலும்
  • ஸுந்த³ரம் - அழகானவரை
  • மஹேந்த்³ர - தேவேந்திரனுடைய
  • மான - கர்வத்தை
  • தா³ரணம் - பிளந்தவரை, அழித்தவரை
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • க்ருஷ்ண - கிருஷ்ணனாகிய
  • வாரணம் - மத யானையை

மன்மதனின் கர்வத்தை அடக்கியவனே, விசாலமான விழிகளைக் கொண்டவனே, நந்தகோபியர்களின் சோகத்தை அழித்தவனே, தாமரை மலரை ஒத்த நயனங்களைக் கொண்டவனே, உன்னை சதா சர்வ காலமும் வணங்குகிறேன். கோவர்த்தனகிரியை கரங்களில் தூக்கி விரலில் ஏந்தியவனே, காண்பவர் கவரும் காந்தப்பார்வையும், புன்னகையும் கொண்டவனே, இந்திரனின் கர்வத்தை அழித்தவனே, கஜராஜனின் உருக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணா, உன்னை நமஸ்கரிக்கிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ அச்யுதா அஷ்டகம் 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:

1. அச்யுதம் கேஸ²வம் ராம நாராயணம் 
க்ருஷ்ண தா³மோத³ரம் வாஸுதே³வம் ஹரிம்|
ஸ்ரீத⁴ரம் மாத⁴வம் கோ³பிகா வல்லப⁴ம் 
ஜானகீ நாயகம் ராமச்சந்த்³ரம் ப⁴ஜே||

  • அச்யுதம் - நழுவாதவன், அழிவில்லாதவன், தன் நிலையில் இருந்து என்றும் வீழாதவன் 
  • கேஸ²வம் - கேசி என்ற அரக்கனை அழித்தவன், அழகான தலைமுடி உடையவன் 
  • ராம நாராயணம் - ராமனாக அவதரித்த நாராயணன்
  • க்ருஷ்ண - அனைவரையும் தன் பால் ஈர்க்கும் கிருஷ்ணன், கருமை நிறத்தவன்
  • தா³மோத³ரம் - யசோதையால் வயிற்றில் கயிற்றால் கட்டப்பட்ட கண்ணன்
  • வாஸுதே³வம் - வசுதேவரின் மைந்தன், எங்கும் நிறைந்திருப்பவன்
  • ஹரிம் - பாவங்களைப் போக்குபவன், திருமால்
  • ஸ்ரீத⁴ரம் - லட்சுமியை தன் மார்பில் தாங்கியவன்
  • மாத⁴வம் - லட்சுமியின் மணாளன், அறிவுக்கு அதிபதி
  • கோ³பிகா வல்லப⁴ம் - கோபியர் குலப் பெண்களின் அன்பிற்குரிய தலைவன்
  • ஜானகீ நாயகம் - ஜனகரின் மகளான சீதையின் கணவன்
  • ராமச்சந்த்³ரம் - சந்திரன் போன்ற குளுமையான முகமுடைய ராமபிரான்
  • ப⁴ஜே - இப்படிப்பட்ட இறைவனை நான் வணங்குகிறேன், துதிக்கிறேன் 

அழிவில்லாதவனும், கேசி அரக்கனை அழித்தவனும், ராமபிரானாக வந்த நாராயணனும், அனைவரையும் ஈர்க்கும் கிருஷ்ணனும், வயிற்றில் கயிறு கட்டப்பட்ட தாமோதரனும், வசுதேவர் மைந்தனும், பாவங்களை அழிக்கும் ஹரியும், லட்சுமியை மார்பில் தாங்கிய ஸ்ரீதரனும், மாதவனும், கோபிகைகளின் அன்பிற்குரியவனும், ஜானகியின் நாயகனுமாகிய ராமச்சந்திர மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||