About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 27 November 2025

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.21

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.21 

யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்
தத்ததே³ வேதரோ ஜந:|
ஸ யத் ப்ரமாணம் குருதே 
லோகஸ் தத³நு வர்ததே||

  • யத்³ யத்³ - எதையெல்லாம் 
  • ஆசரதி - செய்கின்றானோ 
  • ஸ்²ரேஷ்ட²ஸ் - மரியாதைக்குரிய தலைவர் 
  • தத் - அதையே 
  • தத்³ - அதை மட்டுமே 
  • ஏவ - நிச்சயமாக 
  • இதரோ - பொது 
  • ஜநஹ - மக்கள் 
  • ஸ - அவன் 
  • யத் - எதனை 
  • ப்ரமாணம் - உதராணமாக 
  • குருதே - செய்கின்றானோ 
  • லோகஸ் - உலகம் முழுவதும் 
  • தத்³ - அதையே  
  • அநுவர்ததே - பின்பற்றுகிறது

மரியாதைக்குரிய தலைவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதையே , உலகம் முழுவதிலும் பொது மக்கள், உதாரணமாக பின்பற்றுகின்றார்கள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.14

ததோந் யதா² கிஞ்ச ந யத்³ விவக்ஷத:
ப்ருத² க்³ த்³ருஸ²ஸ் தத் க்ருத ரூப நாமபி⁴:|
ந கர்ஹி சித் க்வாபி சது³: ஸ்தி²தா மதிர் 
லபே⁴த வாதா ஹத நௌரி வாஸ் பத³ம்||

  • ததோ - அவரது புகழை சொல்லாது
  • அந்யதா² - வேறு விதமாக
  • யத்³ கிஞ்சந் - ஏதோ ஒன்றை  
  • விவக்ஷதஹ - சொல்ல விரும்பியவனும்
  • ப்ருத²க்³ த்³ருஸ²ஸ் - வெவ்வேறு விஷயங்களில் நாட்டம் கொண்டவனுமான மனிதனுடைய
  • மதிர் - புத்தியானது
  • தத் க்ருத ரூப நாமபி⁴ஹி - அவ் விருப்பத்தால் செய்யப்பட்ட உருவம், பெயர் 
  • து³ஸ் ஸ்தி²தா - இவைகளால் நிலை பெறாததாய்
  • வாதா ஹத - காற்றினால் அடித்துச் செல்லப்பட்ட 
  • நௌஹ் - ஓடம் 
  • இவ - போன்று
  • கர்ஹி சித் - எந்த விஷயத்திலும்
  • க்வாபி ச - ஒருபொழுதும்
  • ஆஸ்பத³ம் - இடத்தை
  • ந லபே⁴த - அடைவதில்லை

பகவத் குணம் கீர்த்தனம் அல்லாது வேறு எதையாவது சொல்ல விரும்பியவன், அவ்விதம் சொல்வதனால், அவனது சிந்தையில் தோன்றிய ரூபத்தாலும் பெயரினாலும், அவனது புத்தி நிலை தவறி, நடுக்கடலில் காற்றில் சிக்கிய ஓடம் போல, தன் லட்சியத்தை அடைவதில்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.92

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.92

ந சாக்³ நிஜம் ப⁴யம் கிஞ்சிந்
நாப்ஸு மஜ்ஜந்தி ஜந்தவ:|
ந வாதஜம் ப⁴யம் 
கிஞ்சிந் நாபி ஜ்வர க்ருதம் ததா²|| 

  • அக்³நிஜம் - அக்நியால் உண்டாகிற
  • ப⁴யம் - பயம்
  • கிஞ்சித் ந - கொஞ்சமும் இல்லை
  • ச - மேலும்
  • ஜந்தவஹ - ஜந்துக்கள்
  • அப்ஸு - ஜலங்களில்
  • மஜ்ஜந்தி ந - மூழ்கி மரணம் அடைகிறது இல்லை
  • வாதஜம் - வாயுவினால் உண்டான
  • ப⁴யம் -  பயம்
  • கிஞ்சித் அபி -  கொஞ்சமும்
  • ந - இல்லை
  • ததா² - அப்படியே
  • ஜ்வர க்ருதம் - ஜ்வரத்தால் உண்டானதும்
  • ந - இல்லை

அங்கே  ஸ்ரீராம ராஜ்யத்தில் அக்நி பயமோ, புயல் பயமோ, வெள்ளத்தில் கால்நடைகள் மூழ்கிப் போகும் என்ற பயமோ, பிணி பயமோ இருக்காது. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

திவ்ய ப்ரபந்தம் - 132 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 132 - ஆயர்பாடி அணிவிளக்கு||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்||

தீய புந்திக் கஞ்சன் உன் மேல்* 
சினம் உடையன் சோர்வு பார்த்து* 
மாயம் தன்னால் வலைப் படுக்கில்* 
வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய்* 
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா* 
ஆயர் பாடிக்கு அணி விளக்கே!* 
அமர்ந்து வந்து என் முலை உணாயே|

  • வாசுதேவா - கண்ணபிரானே!
  • தீய புந்தி - தீங்கு செய்யும் துஷ்ட புத்தியை உடைய
  • கஞ்சன் - கம்ஸனானவன்
  • உன் மேல் - உன் மீது
  • சினம் உடையன் - கோபமாய் இருக்கிறான்
  • சோர்வு பார்த்து - நீ தன்னந்தனியாக இருக்கும் சமயம் பார்த்து
  • மாயம் தன்னால் - வஞ்சைனையால்
  • வலைப்படுக்கில் - உன்னை பிடித்து விட்டால்
  • வாழகில்லேன் - நான் உயிர் தரிக்க மாட்டேன்
  • தாயர் - அன்னை
  • வாய் சொல் - சொல்படி
  • கருமம் கண்டாய் - செய்வது அவசியமானது
  • சாற்றிச் சொன்னேன் - வற்புறுத்திச் சொல்கிறேன்
  • போகவேண்டா - நீ ஓரிடத்திற்கும் தனியாகப் போக வேண்டாம்
  • ஆயர் பாடிக்கு - ஆயர் பாடிக்கு
  • அணி விளக்கே! - அணிகலன் போன்ற தீபமே!
  • அமர்ந்து வந்து - ஆற அமர வந்து
  • என் முலை - என்னிடம் சுரக்கும் பாலை
  • உணாயே - உண்ணாயோ 

கெட்ட புத்தி கொண்ட கம்சன் உன் மேல் கோபமாய் இருக்கிறான். நீ தனியாயிருக்கும் சமயம் பார்த்து அவன் உன்னை வஞ்சனையால் பிடித்து விட்டால், நான் பிழைத்திருக்க சக்தியற்றவளாகி விடுவேன். தாய் பேச்சைத் தட்டாதவனாய், நீ கண்டிப்பாக வெளியே எங்கும் போக வேண்டாம், ஆயர்பாடியின் நந்தா விளக்கே! என் அருகில் வந்தமர்ந்து என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை. 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்