||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||திவ்ய ப்ரபந்தம் - 132 - ஆயர்பாடி அணிவிளக்கு||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம்||
தீய புந்திக் கஞ்சன் உன் மேல்*
சினம் உடையன் சோர்வு பார்த்து*
மாயம் தன்னால் வலைப் படுக்கில்*
வாழகில்லேன் வாசுதேவா!*
தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய்*
சாற்றிச் சொன்னேன் போக வேண்டா*
ஆயர் பாடிக்கு அணி விளக்கே!*
அமர்ந்து வந்து என் முலை உணாயே|
- வாசுதேவா - கண்ணபிரானே!
- தீய புந்தி - தீங்கு செய்யும் துஷ்ட புத்தியை உடைய
- கஞ்சன் - கம்ஸனானவன்
- உன் மேல் - உன் மீது
- சினம் உடையன் - கோபமாய் இருக்கிறான்
- சோர்வு பார்த்து - நீ தன்னந்தனியாக இருக்கும் சமயம் பார்த்து
- மாயம் தன்னால் - வஞ்சைனையால்
- வலைப்படுக்கில் - உன்னை பிடித்து விட்டால்
- வாழகில்லேன் - நான் உயிர் தரிக்க மாட்டேன்
- தாயர் - அன்னை
- வாய் சொல் - சொல்படி
- கருமம் கண்டாய் - செய்வது அவசியமானது
- சாற்றிச் சொன்னேன் - வற்புறுத்திச் சொல்கிறேன்
- போகவேண்டா - நீ ஓரிடத்திற்கும் தனியாகப் போக வேண்டாம்
- ஆயர் பாடிக்கு - ஆயர் பாடிக்கு
- அணி விளக்கே! - அணிகலன் போன்ற தீபமே!
- அமர்ந்து வந்து - ஆற அமர வந்து
- என் முலை - என்னிடம் சுரக்கும் பாலை
- உணாயே - உண்ணாயோ
கெட்ட புத்தி கொண்ட கம்சன் உன் மேல் கோபமாய் இருக்கிறான். நீ தனியாயிருக்கும் சமயம் பார்த்து அவன் உன்னை வஞ்சனையால் பிடித்து விட்டால், நான் பிழைத்திருக்க சக்தியற்றவளாகி விடுவேன். தாய் பேச்சைத் தட்டாதவனாய், நீ கண்டிப்பாக வெளியே எங்கும் போக வேண்டாம், ஆயர்பாடியின் நந்தா விளக்கே! என் அருகில் வந்தமர்ந்து என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment