||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||சூத முனிவர்||
||ஓம் நமோ நாராயணா||
நைமிசாரண்யம் சிறந்த தபோவனம்
நிமிஷம் வீணாகாமல் நடக்கும் அங்கு
பகவத் தியானமும் பகவத் சர்ச்சைகளும்
அகத்தை வென்ற முனிவர்கள் இடையே
சூத முனிவரைக் கேட்டனர் பிற முனிவர்கள்
பூதலத்தில் ஆதி நாராயணனுக்கு உகந்த இடம்
பகவான் நிகழ்த்திய லீலா விநோதங்கள் என்னும்
மகாத்மியத்தைக் கேட்க வேண்டும் செவிகள் குளிர
அன்புடன் அளித்த வேண்டுகோளை ஏற்றார்
என்றும் இறைவன் புகழ் பேச விரும்பும் சூதர்
கணக்கில் அடங்காது நாரயணனின் லீலைகள்
வணக்கத்துக்குரிய சேஷாசலத்தில் நடந்தவை
வராக கல்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களை ஒரு
புராணமாக உரைக்கின்றேன் எனத் தொடங்கினார்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment