About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 27 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 157

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 157||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 19||

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
||பலஸ்²ருதி||

யோகோ ஜ்ஞானம் ததா² ஸாங்க்²யம் 
வித்யாஸ்² ஸி²ல்பாதி கர்ம ச|
வேதாஸ்² ஸா²ஸ்த்ராணி விஜ்ஞானம்
ஏதத் ஸர்வம் ஜநார்தனாத்|| 

  • யோகோ – யோகக் கலை, மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி
  • ஜ்ஞானம் – ஆன்மீக அறிவு, ஆத்ம ஞானம்
  • ததா² – அது போலவே, மேலும்
  • ஸாங்க்²யம் –  படைப்பு மற்றும் பிரகிருதி பற்றிய அறிவு
  • வித்யாஸ்² – கல்வி, கலைகள்
  • ஸி²ல்பாதி – சிற்பக்கலை முதலான
  • கர்ம – செயல்கள், கைத்தொழில்கள்
  • ச – உம், மற்றும்
  • வேதாஸ்² – வேதங்கள்
  • ஸா²ஸ்த்ராணி – சாஸ்திரங்கள், அறநூல்கள்
  • விஜ்ஞானம் – அறிவியல், உலகியல் அறிவு
  • ஏதத் – இவை
  • ஸர்வம் – அனைத்தும்
  • ஜநார்தனாத் – ஜனார்த்தனனிடமிருந்தே, மகாவிஷ்ணுவிடமிருந்தே உண்டாகின்றன

யோகம், மெய்ஞ்ஞானம், சாங்கிய தத்துவம், கல்வி, சிற்பம் முதலான கலைகள், வேதங்கள், சாஸ்திரங்கள், உலகியல் விஞ்ஞானம் ஆகிய இவை அனைத்தும் ஜனார்த்தனனாகிய அந்த பரம்பொருளிடமிருந்தே தோன்றின.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment