About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Sunday, 23 November 2025

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.89

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

||உலகின் உன்னத மனிதனைக் குறித்து|| 
||நாரதரிடம் கேட்ட வால்மீகி|| 
||மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்||

ஸ்லோகம் - 1.1.89

நந்தி³ க்³ராமே ஜடாம் ஹித்வா 
ப்⁴ராத்ருபி⁴: ஸஹிதோ நக⁴:|
ராம: ஸீதா மநுப்ராப்ய 
ராஜ்யம் புநரவாப் தவாந்|| 

  • அநக⁴ஹ - பாபரஹிதரான
  • ராமஸ் - ஸ்ரீராமர்
  • ப்⁴ராத்ருபி⁴ஸ் -  ப்ரார்த்தாக்களோடு
  • ஸஹித - கூடினவராய்  
  • நந்தி³ க்³ராமே - நந்தி கிராமத்தில்
  • ஜடாம் -  ஜடையை
  • ஹித்வா -  களைந்து
  • ஸீதாம் -  ஸீதையை 
  • அநுப்ராப்ய - கூட வைத்துக் கொண்டு
  • ராஜ்யம் -  இராஜ்ய பரிபாலனத்தை
  • புநர் - மறுபடியும்
  • அவாப் தவாந் - மேற்கொண்டார்

பாவமற்றவரான ஸ்ரீராமர், தன் தம்பிகள் அனைவருடன் கூடியவனாக நந்திக் கிராமத்தில் தன் சடா முடியை நீக்கினார். ஸீதையை மீட்டு வந்த பிறகு, அவர் தன் ராஜ்யத்தை மீண்டும் அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - 129 - பெரியாழ்வார் திருமொழி - 2.2.2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||திவ்ய ப்ரபந்தம் - 129 - முத்தனைய புன்முறுவல்||
||பெரியாழ்வார் திருமொழி||
||இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி - இரண்டாம் பாசுரம்||

வைத்த நெய்யும் காய்ந்த பாலும்* 
வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
இத்தனையும் பெற்று அறியேன்* 
எம்பிரான்! நீ பிறந்த பின்னை*
எத்தனையும் செய்யப் பெற்றாய்;* 
ஏதும் செய்யேன் கதம் படாதே* 
முத்து அனைய முறுவல் செய்து* 
மூக்கு உறிஞ்சி முலை உணாயே|

  • எம்பிரான்! - என் பிள்ளாய்!
  • வைத்த நெய்யும் - உருக்கி வைத்த நெய்யும்
  • காய்ந்த பாலும் - ஏடு மிகுதியாகப் படியும்படி காய்ச்சிய பாலும்
  • வடி தயிரும் - உள்ள நீரை வடித்துக் கட்டியாயிருக்கிற தயிரும்
  • நறு வெண்ணெயும் - நறுமணம் மிக்க வெண்ணெயும்
  • இத்தனையும் - ஆகிய இவை எல்லாவற்றையும்
  • நீ பிறந்த பின்னை - நீ பிறந்த பிறகு
  • பெற்று அறியேன் - நான் கண்டதில்லை
  • எத்தனையும் - எல்லாவற்றையும் நீ வேண்டின படி எல்லாம்
  • செய்யப் பெற்றாய் - செய்தாய். உனக்குத் தரப்பட்டது
  • ஏதும் செய்யேன் - அப்படி நீ செய்வதற்காக நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்
  • கதம் படாதே - நீ கோபித்துக் கொள்ளாதே
  • முத்து அனைய - முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முறுவல் செய்து - புன்முறுவல் செய்து
  • மூக்கு உறிஞ்சி - மூக்கை முத்தைப் போல் வெண்ணிறமாக
  • முலை உணாயே - என்னிடம் பால் உண்பாயாக

கண்ணன் அவதரித்த பின், சேமித்து வைத்திருந்த நல்ல காய்ச்சின பால், கட்டி தயிர், நறுமணமுள்ள வெண்ணை, உருக்கின நெய் இவற்றையெல்லாம் அவன் ஒன்று விடாமல் திருடி உண்டு விடுவதால், நான் இவற்றைக் கண்டதில்லை என்கிறாள் யசோதை. கண்ணா! நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்! உன்னை கோபிக்க மாட்டேன்! மோகனப் புன்னைகையுடன், மூக்கை உறிஞ்சியவாறே என் முலையின் பாலை உண்பாயாக என்கிறாள் யசோதை!

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 040 - திருச்சித்திரகூடம் - 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||040. திருச்சித்திரகூடம்||
||சிதம்பரம்||
||நாற்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் அருளிச் செய்த
தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில்
இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்களின் விவரங்கள்
2 ஆழ்வார்கள் - 32 பாசுரங்கள்

001. குலசேகராழ்வார் - 11 பாசுரங்கள்
1. பெருமாள் திருமொழி (முதலாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 741 - 751 - பத்தாம் திருமொழி 
----------

002. திருமங்கையாழ்வார் - 21 பாசுரங்கள்
1. பெரிய திருமொழி (இரண்டாம் ஆயிரம்)

  • திவ்ய ப்ரபந்தம் - 1158 - 1167 - மூன்றாம் பத்து - இரண்டாம் திருமொழி - 10 பாசுரங்கள் 
  • திவ்ய ப்ரபந்தம் - 1168 - 1177 - மூன்றாம் பத்து - மூன்றாம் திருமொழி - 10 பாசுரங்கள் 

2. பெரிய திருமடல் (மூன்றாம் ஆயிரம்) - 1 பாசுரம்

  • திவ்ய ப்ரபந்தம் - 2777 - ஏழாம் திருமொழி - ஐந்தாம் பாசுரம் (65) 

--------------------
திவ்ய கவி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
இந்த திவ்ய தேசத்திற்காக இயற்றிய அந்தாதி

தனியன்
மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடளவும்*
எண்ணு திருப்பதி நூற்று எட்டினையும் நண்ணியே*
கற்பார் துதிப்பார் கருதுவார் கேட்டிருப்பார்*
பொற் பாதம் என் தலை மேல் பூ|

அந்தாதி
அடியால் உலகு எல்லாம் அன்று அளந்து கொண்ட*
நெடியானைக் கூடுதியேல் நெஞ்சே கொடிது ஆய*
குத்திர கூடு அங்கி கொளுந்தா முன் கோவிந்தன்*
சித்திர கூடம் கருதிச் செல்|

  • நெஞ்சே - மனமே! 
  • அடியால் - தனது திருவடிகளினால்
  • உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்
  • அன்று - முற்காலத்தில்
  • அளந்து கொண்ட - அளந்து தன்னுடையனவாக்கிக் கொண்ட
  • நெடியானை - திரிவிக்கிரம அவதாரம் செய்த கடவுளை
  • கூடுதி ஏல் - சேர வேண்டுமென்று விரும்பினையானால்
  • கொடிது ஆய - கொடுமை உள்ளதாகிய
  • குத்திரம் - இழி குணத்தைக் கொண்ட
  • கூடு - இந்தச் சரீரத்தை
  • அங்கி - அக்னியானது
  • கொளுந்தா முன் - எரித்து விடுதற்கு முன்னமே
  • கோவிந்தன் - கோவிந்தராஜன் எழுந்தருளி இருக்கின்ற
  • சித்திரகூடம் - திருச்சித்திரகூடம் என்னும் திவ்ய ஸ்தலத்தை
  • கருதி - நினைத்து
  • செல் - செல்வாயாக

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவத புராணம் - 97

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||விதுர மைத்ரேய ஸம்வாதம் - 42||

||ஸ்கந்தம் 03||

ஜீவனின் உபாதி சரீரம் முக்தியடையும் வரை ஜீவனுடன் தொடர்ந்திருக்கும்.

முக்தி பெற விரும்புபவன் பிறப்பு இறப்பு கண்டு வருந்தலாகாது.

ஆன்மாவின் உண்மையைப் பற்றிய அறிவு, பகவானைத் தவிர மற்ற உலகியல் விஷயங்களில் பற்றின்மை, சாஸ்திரங்களை உணர்ந்த கலக்கமற்ற புத்தி ஆகியவற்றினால், மாயையால் தோன்றிய இவ்வுலகில் ஓடித்திரிய வேண்டும். வாழவும் வேண்டும்.

அறிவுள்ள மனிதன் தன் கடைமைகளைச் செய்கையில்‌ பலனை எதிர்பார்த்துச் செய்வதில்லை. உரிய முறையில் பகவத் அர்ப்பணமாகவே செய்கிறான்.


உடல்‌ இன்பத்திற்காகவும் செய்வதில்லை. இம்மாதிரி மனிதர்கள் சாந்தமான தூய்மையான மனத்துடன் துறவு மனமுடையவராக தன் கடைமையைச் செய்து சத்வகுணம் மேலோங்கி இருக்கிறான்.

அவன் முடிவில் அர்ச்சிஸ் அல்லது தேவயானம் என்ற சூரியன் வழியில், நீக்கமற நிறையும் பகவானையே அடைகிறான். அர்ச்சிராதி மார்கம் என்பது ஒளி, அஹஸ் (பகல்), வளர்பிறை, உத்தராயணம், ஸம்வத்ஸரம்,(வருடம்), வாயு, சூரியன், சந்திரன், வித்யுத் (மின்னல்), வருணன், இந்திரன், ப்ரும்மதேவர் என்ற வரிசைக் கிரமம் ஆகும்.

ப்ரும்மதேவர் தன் ஆயுள்காலமான இரண்டு பரார்தங்கள் முடிந்ததும், பூமி, ஜலம், காற்று, தீ, ஆகாயம், மனம்,‌இந்திரியங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற விஷயங்கள், அஹங்காரத்தால்‌ சூழப்பட்ட ப்ரபஞ்சத்தை அழிக்க எண்ணி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண வடிவோடு கலந்து பரப்ரும்மத்தில் ஐக்கியமாகிறார்.

அப்போது ப்ராணனையும்‌ மனத்தையும் வசப்படுத்திய யோகிகள் இவ்வுடலை விடுத்து ப்ரும்மதேவருடன் ஐக்கியமாகிறார்கள்.

பகவத் குண ச்ரவணம், பக்தி, முக்தியை அளிப்பது. பிறவிச் சுழலிலிருந்து விடுவிப்பது. இறைவனைப் பற்றிய கதைகளைச் செவியாறப் பருகாமல், வீணான உலகின்‌ கவர்ச்சியான செய்திகளைப் படிப்பது, கேட்பது போன்ற‌செயல்களைச் செய்பவர்கள், நல்ல உணவை விடுத்து மலத்தைத் தேடியலையும் பன்றி போல் ஆவார். அவர்களை விடப்‌பேறு கெட்டவர் எவருளர்? அவர்கள் விதியின் கொடுமைக்கு‌ ஆளாவர்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்