About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 21 September 2026

ஜடாயுவின் இராம ஸ்தோத்திரம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஜடாயுருவாச|
அக³நித கு³ண மப்⁴ரமேய மாத்³யம் 
ஸகல ஜக³த் ஸ்தி²தி ஸம்யமாதி³ ஹேதும்| 
உபரம பரமம் பரமாத்ம பூ⁴தம் 
ஸதத மஹம் ப்ரணோதோஸ்மி ராமச் சந்த்³ரம்||

  • ஜடாயுருவாச - ஜடாயு கூறினார்
  • அக³நித - எண்ணற்ற
  • கு³ணம் - நற்குணங்களை உடையவர்
  • அப்⁴ரமேயம் - அளவிட முடியாதவர்
  • ஆத்³யம் - ஆதியானவர், முதன்மையானவர்
  • ஸகல - அனைத்து
  • ஜக³த் - உலகம்
  • ஸ்தி²தி - நிலைத்திருத்தல்
  • ஸம்யம - ஒடுக்குதல், அழித்தல்
  • ஆதி³ - முதலியவற்றிற்கு
  • ஹேதும் - காரணமானவர்
  • உபரம - அமைதியானவர்
  • பரமம் - உயர்ந்தவர்
  • பரமாத்ம பூ⁴தம் - பரமாத்ம சொரூபமாக இருப்பவர்
  • ஸததம் - எப்பொழுதும்
  • அஹம் - நான்
  • ப்ரணதோஸ்மி - வணங்குகிறேன்
  • ராம சந்த்³ரம் - இராமச்சந்திரரை

எண்ணற்ற நற்குணங்களைக் கொண்டவரும், அளவிட முடியாதவரும், ஆதியானவரும், உலகின் தோற்றம், நிலை, அழிவு முதலிய அனைத்திற்கும் காரணமானவரும், பரமாத்ம சொரூபமாக விளங்குபவருமான இராமச்சந்திரரை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் முன்னுரை

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்

த்⁴யாநம்
வாகீ³ஸா யஸ்ய வத³நே 
லக்ஷ்மீர் யஸ்ய ச வக்ஷஸி|
யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித் 
தம் ந்ருஸிம்ஹ மஹம் பஜே||

  • த்⁴யாநம் - த்யானம்
  • வாகீ³ஸா - கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி
  • யஸ்ய - யாருடைய
  • வத³நே - முகத்தில் வாசம் செய்கிறாளோ
  • லக்ஷ்மீர் - லட்சுமி தேவி
  • யஸ்ய - யாருடைய
  • ச - மேலும்
  • வக்ஷஸி - மார்பில் வாசம் செய்கிறாளோ
  • யஸ்யாஸ்தே - யாருடையதாக இருக்கிறதோ
  • ஹ்ருதயே - இதயத்தில்
  • ஸம்வித் - ஞானம், தூய அறிவு நிலைபெற்றுள்ளதோ
  • தம் - அந்த
  • ந்ருஸிம்ஹ - நரசிம்மரை
  • அஹம் - நான்
  • பஜே - வணங்குகிறேன், போற்றுகிறேன்

யாருடைய முகத்தில் சரஸ்வதி தேவியும், யாருடைய மார்பில் லட்சுமி தேவியும் வீற்றிருக்கின்றார்களோ, யாருடைய இதயத்தில் தூய ஞானம் நிலைபெற்றுள்ளதோ, அந்த நரசிம்ம மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Wednesday, 9 September 2026

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 15

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 15

நாம ஸங்கீர்தநம் யஸ்ய 
ஸர்வ பாப ப்ரநாஸ²நம்|
ப்ரணாமோ து³க்க² ஸ²மந: 
தம் நமாமி ஹரிம் பரம்||

  • நாம - திருநாம
  • ஸங்கீர்தநம் - பாடுதல், புகழ்ந்து கூறுதல்
  • யஸ்ய - யாருடைய
  • ஸர்வ - அனைத்து
  • பாப - பாவங்களையும்
  • ப்ரநாஸ²நம் - அழிப்பது
  • ப்ரணாமோ - வணக்கம்
  • து³க்க² - துன்பத்தை
  • ஸ²மநஹ் - தணிப்பது
  • தம் - அந்த
  • நமாமி - நான் வணங்குகிறேன்
  • ஹரிம் - ஹரியை
  • பரம் - பரம்பொருளை

யாருடைய திருநாமத்தைப் பாடுவதால் அனைத்து பாவங்களும் அழிகின்றனவோ, யாரை வணங்குவதால் துன்பங்கள் தணிகின்றனவோ, அந்த பரம்பொருளான ஹரியை நான் வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

த்யான ஸ்லோகங்கள் முடிவுற்றது

ஸ்ரீமத் பாகவதம் - த்யான ஸ்லோகம் 14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்யான ஸ்லோகம் 14

யோகீ³ந்த்³ராணாம் த்வத³ங்கே³ஸு²
அதி க³ஸு மது⁴ரம் முக்தி பா⁴ஜாம் நிவாஸோ|
ப⁴க்தாநாம் காம வர்ஸ²த்³யுதரு 
கிஸலயம் நாததே பா³த⁴ மூலம்||
நித்யம் சித்த ஸ்திதம் மே பவன புரபதே 
க்ருஷ்ண காருண்ய ஸிந்தோ³|
ஹ்ருத்வா நிஸ்²ஸே²ஷ தாபான் பிரதி³ ஸ²து 
பரமாநந்த ஸந்தோஹ லக்ஷ்மீ:||

  • யோ³ந்த்³ராணாம் - யோகிகளின் தலைவர்களுக்கு
  • த்வத்³ - உமது
  • அங்கே³ஸு² - அங்கங்களில்
  • அதி - மிகவும்
  • க³ஸு - எதனால், எங்கே
  • மது⁴ரம் - இனிமையான
  • முக்தி - முக்தி
  • பா⁴ஜாம் - பெறுபவர்களின்
  • நிவாஸோ - வசிப்பிடம்
  • ப⁴க்தாநாம் - பக்தர்களின்
  • காம - விருப்பங்களை
  • வர்ஸ²தி - பொழிகிறது, வழங்குகிறது
  • தரு - மரம்
  • கிஸலயம் - தளிர்
  • நாத - நாதனே
  • தே - உமது
  • பா³த⁴ மூலம் - திருவடிகள்
  • நித்யம் - எப்போதும்
  • சித்த - மனதில்
  • ஸ்திதம் - நிலைத்திருப்பது
  • மே - எனது
  • பவன புரபதே - குருவாயூரப்பனே
  • க்ருஷ்ண - கிருஷ்ணரே
  • காருண்ய - கருணை
  • ஸிந்தோ³ - கடலே
  • ஹ்ருத்வா - நீக்கி
  • நிஸ்²ஸே²ஷ - முழுமையாக
  • தாபான் - துன்பங்களை
  • பிரதி³ ஸ²து - அருளட்டும்
  • பரமாநந்த - பேரானந்தத்தின்
  • ஸந்தோஹ - பெருக்கை, குவியலை
  • லக்ஷ்மீஹி - செல்வத்தை, நிலையை

யோகிகளின் தலைவர்களுக்கு இனிமையான இருப்பிடமாகவும், முக்தியை விரும்புவோருக்கு தங்குமிடமாகவும், பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் கற்பக மரம் போன்றதாகவும் உமது திருவடிகள் விளங்குகின்றன. கருணைக் கடலான குருவாயூரப்பனே கிருஷ்ணா! என் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் நீர், என் அனைத்து துன்பங்களையும் நீக்கி, பேரானந்தத்தை எனக்கு அருள வேண்டும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்