About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 152

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 152

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 14

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம் - பலஸ்²ருதி

த்³யெள: ஸ சந்த்³ரார்க்க நக்ஷத்ரம்
க²ம் தி³ஸோ² பூ⁴ர்‌ம ஹோத³தி⁴:|
வாஸுதே³வஸ்ய வீர்யேண
வித்⁴ருதாநி மஹாத்மந:|| 

  • த்³யெளஸ் – ஆகாயம், சொர்க்க லோகம்
  • ஸ சந்த்³ரார்க்க நக்ஷத்ரம் – சந்திரன், சூரியன் மற்றும் நட்சத்திரங்களுடன் கூடிய
  • க²ம் – விண்வெளி, அந்தரிக்ஷம்
  • தி³ஸோ² – அனைத்து திசைகள்
  • பூ⁴ர் – பூமி
  • மஹோத³தி⁴ஹி – பெருங்கடல்
  • வாஸுதே³வஸ்ய – வாசுதேவனுடைய, பகவான் விஷ்ணுவின்
  • வீர்யேண – சக்தியினால், வீரியத்தினால்
  • வித்⁴ருதாநி – தாங்கப்படுகின்றன
  • மஹாத்மநஹ – மகாத்மாவான, பரமாத்மாவான அவருடைய

மகாத்மாவான வாசுதேவனின் ஒப்பற்ற சக்தியினாலேயே சூரியன், சந்திரன், நட்சத்திரங்களுடன் கூடிய ஆகாயம், விண்வெளி, திசைகள், பூமி மற்றும் பெருங்கடல்கள் ஆகியவை அனைத்தும் நிலைநிறுத்தப்பட்டுத் தாங்கப்படுகின்றன.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.16

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.16 

ஏவம் ப்ரவர் திதம் சக்ரம் 
நாநு வர்தய தீஹ ய:|
அகா⁴யுரிந் த்³ரியா ராமோ 
மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி||

  • ஏவம் - இவ்வாறாக 
  • ப்ரவர் திதம் - வேதங்களில் நிலைநாட்டப்பட்ட  
  • சக்ரம் - சக்கரம் 
  • ந - இல்லை  
  • அநுவர்தயதி - கடைப்பிடித்தல்  
  • இஹ - இவ்வாழ்வில் 
  • யஹ - யாரொருவர் 
  • அகா⁴யுர் - பாவம் நிறைந்த வாழ்வு வாழ்பவன் 
  • இந்த்³ரியா ராமோ - புலனுகர்ச்சியில் திருப்தியுற்று 
  • மோக⁴ம் - பலனின்றி  
  • பார்த² - பிருதாவின் மகனே (அர்ஜுனா) 
  • ஸ - அவன் 
  • ஜீவதி - வாழ்கிறான்

பார்த்தா! எவனொருவன் இந்த உலகத்தில் மனித உடலை பெற்ற பிறகும் இந்த முறையில் சுழன்று கொண்டிருக்கும் சாதனைச் சக்கரத்திற்கு ஏற்ப நடக்கவில்லையோ, அதாவது தெய்வீகச் செல்வங்களைப் பெருக்குதல் தெய்வீகக் குணங்கள் எனப்படும் தெய்வீகச் செல்வங்களை உயர்த்துதல் மற்றும் ஒருவரை ஒருவர் முன்னேற்றுவதன் மூலம் குறைவற்ற, அழிவற்ற இறைவனை அடைதல், இவற்றிற்கு ஏற்ப நடக்கவில்லையோ, புலன்களின் இன்பங்களையே நாடுகின்ற அவற்றின் ஓய்வையே விரும்புகின்ற அந்த பாவி மனிதன் வீணாகவே வாழ்கிறான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.9

யதா² த⁴ர்மாத³யஸ்² சார்தா² 
முநிவர்யாநு கீர்திதா:|
ந ததா² வாஸுதே³வஸ்ய 
மஹிமாஹ்யநு வர்ணித:||

  • முநிவர்ய - ஏய் மகரிஷி ஸ்ரேஷ்டரே!
  • த⁴ர்மாத³யஸ்² - அறம் முதலான
  • அர்தா²ஸ் ச - புருஷார்த்தங்கள் 
  • யதா² அநு கீர்திதாஹா - எவ்வாறு தங்களால் வருணிக்கப் பட்டனவோ
  • ததா² - அவ்வாறு
  • வாஸுதே³வஸ்ய - வாஸுதேவனின்
  • மஹிமா - பெருமையானது
  • ந அநு வர்ணிதஹ ஹி - வர்ணிக்கப்படவில்லை அன்றோ?

முனிவரே! தர்மம் முதலிய புருஷார்த்தங்களை வர்ணித்தது போல, பகவானின் பெருமைகளைத் தாங்கள் விளக்கமாக வர்ணிக்கவில்லையே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.87

ப⁴ரத்³வாஜாஸ்²ரமம் கத்வா 
ராம: ஸத்ய பராக்ரம:|
ப⁴ரதஸ் யாந்திகே ராமோ 
ஹநுமந்தம் வ்யஸர்ஜயத்|| 

  • ஸத்ய பராக்ரமஹ - ஸத்ய பராக்ரமரான
  • ராமஸ் - ஸ்ரீராமர்
  • ப⁴ரத்³வாஜாஸ்²ரமம் - பரத்வாஜர் ஆசிரமத்தை
  • கத்வா - அடைந்து
  • ப⁴ரதஸ்ய - பரதருடைய
  • அந்திகே - ஸமீபத்திற்கு
  • ஹநுமந்தம் - ஹநுமாரை
  • ராமோ - ஸ்ரீராமர்
  • வ்யஸர்ஜயத் - அனுப்பி வைத்தார்

உண்மையான ஆற்றல் படைத்தவனான அந்த ஸ்ரீராமர், பரத்வாஜ ஆசிரமத்திற்குச் சென்று, நந்திக்கிராமத்தில் உள்ள பரதனிடம் ஹநுமாரை அனுப்பினார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்