||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.16
ஏவம் ப்ரவர் திதம் சக்ரம்
நாநு வர்தய தீஹ ய:|
அகா⁴யுரிந் த்³ரியா ராமோ
மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி||
- ஏவம் - இவ்வாறாக
- ப்ரவர் திதம் - வேதங்களில் நிலைநாட்டப்பட்ட
- சக்ரம் - சக்கரம்
- ந - இல்லை
- அநுவர்தயதி - கடைப்பிடித்தல்
- இஹ - இவ்வாழ்வில்
- யஹ - யாரொருவர்
- அகா⁴யுர் - பாவம் நிறைந்த வாழ்வு வாழ்பவன்
- இந்த்³ரியா ராமோ - புலனுகர்ச்சியில் திருப்தியுற்று
- மோக⁴ம் - பலனின்றி
- பார்த² - பிருதாவின் மகனே (அர்ஜுனா)
- ஸ - அவன்
- ஜீவதி - வாழ்கிறான்
பார்த்தா! எவனொருவன் இந்த உலகத்தில் மனித உடலை பெற்ற பிறகும் இந்த முறையில் சுழன்று கொண்டிருக்கும் சாதனைச் சக்கரத்திற்கு ஏற்ப நடக்கவில்லையோ, அதாவது தெய்வீகச் செல்வங்களைப் பெருக்குதல் தெய்வீகக் குணங்கள் எனப்படும் தெய்வீகச் செல்வங்களை உயர்த்துதல் மற்றும் ஒருவரை ஒருவர் முன்னேற்றுவதன் மூலம் குறைவற்ற, அழிவற்ற இறைவனை அடைதல், இவற்றிற்கு ஏற்ப நடக்கவில்லையோ, புலன்களின் இன்பங்களையே நாடுகின்ற அவற்றின் ஓய்வையே விரும்புகின்ற அந்த பாவி மனிதன் வீணாகவே வாழ்கிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment