About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Tuesday, 8 August 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 4

ஸர்வோ பனிஷதோ³ கா³வோ, 
தோ³க்³தா⁴ கோ³பால னந்த³ன꞉|
பார்தோ² வத்ஸ꞉ ஸுதீ⁴ர் போ⁴க்தா, 
து³க்³த⁴ம் கீ³தாம்ருதம் மஹத்||

  • ஸர்வோ - எல்லா
  • உபநிஷதோ³ - உபநிடதங்களும்
  • கா³வோ - பசுக்கள்
  • தோ³க்³தா⁴ - பால் கறப்பவர்
  • கோ³பால நந்த³னஹ - கோபாலனின் மகனான கிருஷ்ணர்
  • பார்தோ² - அர்ஜுனன்
  • வத்ஸஸ் - கன்றுக்குட்டி
  • ஸுதீ⁴ர் - தூய புத்தியுடையவர்கள், அறிஞர்கள்
  • போ⁴க்தா - அதனை அருந்துபவர்கள்
  • து³க்³த⁴ம் - கறந்த பால்
  • கீ³தா அம்ருதம் - கீதையாகிய அமிர்தம்
  • மஹத் - மிக உயர்ந்தது, மகத்தானது

எல்லா உபநிடதங்களும் பசுக்கள் போன்றவையாகும். பால் கறப்பவர் நந்தகோபனின் மகனான ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். அர்ஜுனன் கன்றுக்குட்டி ஆவார். தூய புத்தியுடைய அறிஞர்கள் அந்தப் பாலை அருந்துபவர்கள் ஆவர். கறக்கப்பட்ட மகா உன்னதமான பால், கீதையாகிய அமிர்தம் ஆகும்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.1

ஜந்மாத்³ யஸ்ய யதோந் வயாதி³
தரதஸ்² சார்தே²ஷ் வபி⁴ஜ்ஞ: ஸ்வராட்|
தேநே ப்³ரஹ்ம ஹ்ருதா³ய ஆதி³ கவயே 
முஹ்யந்தி யத் ஸூரய:||
தேஜோ வாரிம் ருதா³ம் யதா² விநிமயோ 
யத்ர த்ரி ஸர்கோ³ம் ருஷா|
தா⁴ம்நா ஸ்வேந ஸதா³ நிரஸ்த குஹகம் 
ஸத்யம் பரம் தீ⁴மஹி||

  • அர்த்தே²ஷு - ஆகாசம் முதலிய கார்ய வஸ்துக்களில்
  • அந்வயாத்³ - ஸத் ரூபியாய் தொடர்வதாலும்
  • இதரதஸ்²ச - ஆகாச புஷ்பம் முதலிய ஆகார்ய வஸ்துக்களில் தொடராததாலும்
  • யதோ - எந்த பரமாத்மாவிடமிருந்து
  • யஸ்ய - இவ்வுலகின்
  • ஜந்மாத்³ - உற்பத்தி வளர்ச்சி நாசம் இவைகள் உண்டாகிறதோ
  • அபிஜ்ஞஸ் - ஸர்வக்ஞரும்
  • ஸ்வராட்டு - சுயமாகவே பிரகாசிப்பவருமான
  • ய: - எந்த பரமாத்மா
  • ஆதி³ கவயே - ஆதி கவியின் (பிரம்மாவின்) பொருட்டு
  • யத் - எந்த வேதத்தில்
  • ஸூரயஹ அபி - மகா கவிஞரும் கூட
  • முஹ்யந்தி - மோஹத்தை அடைகின்றனரோ 
  • ப்³ரஹ்ம - அந்த வேதத்தை
  • ஹ்ருதா³ - மனதினாலேயே 
  • தேநே - உணர்த்தினாரோ
  • தேஜோ வாரி அம்ருதா³ம் - தேஜஸ், ஜலம், ப்ரித்வீ இவைகளுடைய 
  • விநிமயோ - ஒன்றில் மற்றொன்றின் தோற்றம் போல்
  • யத்ர - எந்த பரமாத்மாவிடத்தில்
  • த்ரி ஸ்ர்கோ³ - மாயா குணங்களான தாமஸ், ரஜஸ், ஸத்வம் இவைகளுடைய பூதம், இந்திரியம், தேவதை என்றவைகளின் ஸ்ருஷ்டியானது
  • அம்ருஷா - ஸத்யமாக தோன்றுகிறதோ
  • ஸ்வேந தா⁴ம்நா - ஸ்வப் பிரகாசத்தாலேயே
  • ஸதா³ - எப்பொழுதும்
  • நிரஸ்த குஹகம் - போக்கடிக்கப்பட்ட மாயா தீத காரியங்களை உடையவரும்
  • ஸத்யம் - ஸத்ய ஸ்வரூபியுமான
  • பரம் - அந்தப் பரமாத்மாவை
  • தீ⁴மஹி - தியானம் செய்வோம்

பரமாத்மாவின் உன்னத ஆளுமையாக விளங்கும் வாசுதேவரின் மகனான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு எனது வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். எல்லாக் காரணங்களுக்கும் முதன்மையான காரணமாகவும், எவரிடமிருந்து எல்லா வெளிப்பட்ட பிரபஞ்சங்களும் எழுகின்றனவோ, யாரில் அவை வாழ்கின்றனவோ, யாரால் அழிக்கப்படுகின்றனவோ, அவரையே நான் தியானிக்கிறேன். எல்லா வெளிப்பாடுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்ந்து அவற்றைக் கடந்தும் நித்திய ஒளிமயமான இறைவனை நான் தியானிக்கிறேன். முதன் முதலில் படைக்கப்பட்ட பிரம்மாவின் இதயத்திற்கு வேத அறிவை வழங்கியவர் அவர் மட்டுமே. அவர் மூலம், பெரிய முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் கூட, இந்த உலகம் ஒரு மாயை போல, உண்மையானதாகத் தோன்றுகிறது. அவர் காரணமாக, இயற்கையின் மூன்று முறைகளால் உருவாக்கப்பட்ட ஜடப் பிரபஞ்சங்கள், உண்மை அற்றவையாக இருந்தாலும், அவருக்கு உண்மையாகத் தோன்றுகின்றன. ஆதலால் நான் அவரையே தியானிக்கிறேன், முழுமையான உண்மை, அவர் தனது ஆழ்நிலை வாசஸ்தலத்தில் நிரந்தரமாக இருக்கிறார், அவர் எப்போதும் மாயையிலிருந்து விடுபடுகிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

Monday, 7 August 2023

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||பூர்வ பாகம் (முற்பகுதி) பாகம் 2||

ஓம் நமோ விஷ்ணவே ப்ரப⁴ விஷ்ணவே||
ஸ்ரீ வைஸ²ம் பாயந உவாச|
ஸ்²ருத்வா த⁴ர்மா ந ஸே²ஷேண 
பாவநாநி ச ஸர்வஸ:| 
யுதி⁴ஷ்டிர: ஸா²ந்த நவம் 
புநரே வாப்⁴ய பா⁴ஷத||

  • ஓம் - பிரணவ மந்திரம், பரம்பொருளைக் குறிக்கும் புனித ஒலி
  • நமோ - வணக்கம், சரணடைதல்
  • விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
  • ப்ரப⁴ - பிரபுவே, தலைவனே
  • விஷ்ணவே - விஷ்ணுவுக்கு
  • ஸ்ரீ - சிறப்புடைய, மங்களமான
  • வைஸ²ம் பாயந - வைஷம் பாயனர் என்ற முனிவர்
  • உவாச - கூறினார், உரைத்தார்
  • ஸ்²ருத்வா - கேட்ட பிறகு
  • த⁴ர்மாந் - தர்மங்களை, அறநெறிகளை
  • அஸே²ஷேண - முழுமையாக, எஞ்சியில்லாமல்
  • பாவநாநி - புனிதமானவை, தூய்மைப்படுத்துபவை
  • ச - மேலும், மற்றும்
  • ஸர்வஸஹ - எல்லா வகையிலும், முழுமையாக
  • யுதி⁴ஷ்டிரஸ் - யுதிஷ்டிரர்
  • ஸா²ந்த நவம் - சாந்தனுவின் மகனான பீஷ்மரை
  • புநர் - மீண்டும்
  • ஏவ - அதுவே, நிச்சயமாக
  • அபி⁴ - மேலும், மீண்டும்
  • பா⁴ஷத - பேசினார், கேட்டார்

வியாஸரின் மாணாக்கர் வைஸம் பாயனர். ஜனமே ஜயன் என்னும் மன்னனுக்குப் பாரதத்தை உபதேசித்தவர். ஜனமே ஜயன் என்னும் மன்னவன் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பெருமையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்னும் அவாவினால், வைஸம் பாயனர் ஜனமே ஜயனுக்கு இதனை உபதேசித்தார்.

ஸ்ரீ ஸஹஸ்ர நாமத்துக்குப் பீடிகையாகத் தொடங்குகிறது இந்த வரி. ஸ்ரீவைஸம் பாயனர் ஜனமே ஜயனிடம் கூறியது. இப்படித் தொடங்குகிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம உபதேசம். எல்லாத் தருமங்களையும், பாவங்கள் அனைத்தையும் போக்கும் முறைகளையும் பீஷ்மர் தருமருக்குக் கூறி வந்தார். இவை அனைத்தையும் ஒன்று விடாமல் தருமர் பீஷ்மரிடம் கேட்டறிந்தார். மேலும் பீஷ்மரை நோக்கித் தருமர் மீண்டும் கேட்கலானார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள் - 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஆறாவது வார்த்தை

006. பிண விருந்திட்டேனோ கண்டா கர்ணனைப் போலே|

கண்டா கர்ணன் என்பவன் பரம சிவ பக்தன். அவன் பிணத்தை தின்னு பிழைப்பவன். சிவ பக்தனாக இருந்ததால் விஷ்ணு நாமமே ஆகாது. காதுல மணி கட்டி கொண்டு இருப்பான். யாராவது விஷ்ணுவின் நாமத்தை சொன்னால் அந்த நாமம் காதில் விழக் கூடாது என்று உடனே தலையை ஆட்டுவான். அப்பொழுது காதில் இருக்கும் மணி ஆடி சத்தத்தை எழுப்பும். அந்த சத்தத்தில் நாமம் காதில் விழாது. 


காதில் மணி இருந்ததால் அவனுக்கு கண்டா கர்ணன் என்று பெயர். அந்த அளவுக்கு சிவ பக்தன். அவனுக்கு வேண்டிய அனைத்தையும் சிவபெருமான் பண்ணினார்.  ஒரு நாள் கண்டா கர்ணனுக்கு இந்த வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டு விட்டது. அடியேனுக்கு முக்தி குடுக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் பிரார்த்தித்தான். "இது வரை நீ கேட்டதையெல்லாம் கொடுத்தேன். இது குடுக்க என்னால் இயலாது. அதை நீ மோக்ஷத்தை கொடுக்க கூடிய சக்தி படைத்த ஜனார்தனனிடம் தான் கேட்க வேண்டும். அங்கு போய் கேள்" என்று சிவபெருமான் சொல்லி அனுப்பினார். 


கண்டா கர்ணனுக்கு இப்போது பயம் வந்து விட்டது. அவன் நாமமே கேட்க கூடாது என்று இருந்தவன். முதல் முறையாக பார்க்க போறோம் என்ற நடுக்கம். தன் காதுகளில் கட்டியிருந்த மணிகளை அகற்றினான். முதன் முறையாக போகும் போது வெறும் கையோடு போக முடியாதே. ஏதாவது சமர்ப்பிக்க வேண்டுமே! அவனிடம் எதுவுமே கிடையாது. அவன் எப்பொழுதும் பிணத்தோடேயே இருப்பவன். யோசித்து அப்பொழுது தான் உயிர் பிரிந்த ஒரு பிராமணப் பிணமாக எடுத்துக் கொண்டு சமைத்து பக்குவப் படுத்தினான். கண்டா கர்ணன், கிருஷ்ண அவதாரக் காலத்தில் வாழ்ந்ததால், துவாரகைக்கு செல்ல கிளம்பினான். பகவானை நேரில் சந்தித்து தான் கொண்டு வந்ததை நிவேதனம் செய்தான். "இதை தேவரீர் போஜனம் பண்ணி உபகாரமாக கொள்ள வேண்டும்" என்று பெருமானிடம் கூறினான். அதையும் பெருமான் ஸ்வீகரித்துக் கொண்டார். அந்த இடத்தில் அவன் என்ன கொண்டு வந்தான் என்று பார்க்கவில்லை பெருமான். அவனுடைய நோக்கத்தையும், பக்தியையும், நம்பிக்கையையும் பார்த்தார். அதனால் அதை ஏற்றுக் கொண்டு அவனுக்கு முக்தி கொடுத்தார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை இதை ஸ்வாமி ராமானுஜரிடம் தெரிவித்து, “எது கொடுத்தாலும் அவன் ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லையே! அனைவரையும் ஒரே மாதிரியாக தான் பெருமான் பார்க்கிறான் என்ற ஞானம் எனக்கில்லையே! சிவ பக்தனாக இருந்தாலும் அந்த ஞானம் இருந்து பெருமானுக்கு கொண்டு போய் சமர்ப்பித்தானே! அப்படி எனக்கு தோன்றவில்லையே! ஆகையால் திருக்கோளூரில் இருக்க எனக்கு என்ன யோகியதை இருக்கு? நான் ஏன் இந்த ஊரில் இருக்க வேண்டும்? அதனால் நான் புறப்டுகிறேன்” என்றாள்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்