About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 13 August 2026

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம், 
ஹார நூபுர ஸோ²பிதம்|  
ரத்ன கங்கண கேயூரம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • அதஸீ புஷ்ப – காயாம்பூ
  • ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
  • ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
  • நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
  • ஸோ²பிதம்  – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
  • ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
  • கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
  • கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 2

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

2. வசனம் மது⁴ரம் சரிதம் மது⁴ரம்
வஸனம் மது⁴ரம் வலிதம் மது⁴ரம்|
சலிதம் மது⁴ரம் ப்⁴ரமிதம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்|| 

  • வசனம் – அவருடைய பேச்சும், வார்த்தைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • சரிதம் – அவருடைய கதைகளும், செயல்களும், குணமும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • வஸனம் – அவருடைய ஆடைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • வலிதம் – அவருடைய அழகான உடல் வளைவுகளும், அசைவுகளும் 
  • மது⁴ரம் – இனிமையானது
  • சலிதம் – அவருடைய நடையும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • ப்⁴ரமிதம் – அவர் சுற்றித் திரிதலும், உலகை மயக்கும் லீலைகளும்
  • மது⁴ரம் – இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதேர் – மதுரையின் அரசனும், இனிமையின் அதிபதியுமாகிய கண்ணனுடைய
  • அகி²லம் – அனைத்தும்
  • மது⁴ரம் – இனிமையானது

உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ க்ருஷ்ணா அஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு – கிருஷ்ணாஷ்டகம். 

1. வஸுதே³வ ஸுதம் தே³வம் 
கம்ஸ சாணூர மர்த³னம்|
தே³வகீ பரமானந்த³ம் 
க்ருஷ்ணம் வந்தே³ ஜக³த்³ கு³ரும்||

  • வஸுதே³வ ஸுதம் – வஸுதேவரின் குமாரனும், மகனும் 
  • தே³வம்  – ஒளிமயமான இறைவனும்
  • கம்ஸ சாணூர மர்த³னம் – கம்சன், சாணூரன் ஆகிய அரக்கர்களை அழித்தவரும்
  • தே³வகீ பரமானந்த³ம் – தாய் தேவகிக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருபவரும்
  • க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாகிய
  • வந்தே³ - நான் வணங்குகிறேன்
  • ஜக³த்³ - உலகத்திற்கே
  • கு³ரும் - குருவாக இருப்பவரை

வசுதேவரின் குமாரன்; கம்சன், சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ மதுராஷ்டகம் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

1. அத⁴ரம் மது⁴ரம் வத³னம் மது⁴ரம்
நயனம் மது⁴ரம் ஹஸிதம் மது⁴ரம்|
ஹ்ருத³யம் மது⁴ரம் க³மனம் மது⁴ரம்
மது⁴ராதி⁴பதேரகி²லம் மது⁴ரம்||

  • அத⁴ரம் - உதடு
  • மது⁴ரம் - இனிமையானது
  • வத³னம் - முகம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • நயனம் - கண்கள்
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹஸிதம் - சிரிப்பு, புன்னகை
  • மது⁴ரம் - இனிமையானது
  • ஹ்ருத³யம் - இதயம்
  • மது⁴ரம் - இனிமையானது
  • க³மனம் - நடை, அசைவு
  • மது⁴ரம் - இனிமையானது
  • மது⁴ரா அதி⁴பதே - இனிமைக்கு அதிபதி, மதுராவின் அரசன்
  • அகி²லம் - அனைத்தும், முழுமையும்
  • மது⁴ரம் - இனிமையானது 

மதுராவில் அவதரித்த மாயவனே! உனது இதழ்கள் அழகானவை. முகம் வசீகரமானது. கண்கள் வனப்பானவை. உனது புன்முறுவல் அழகு. இதயம் அழகு, தளிர்நடை அழகு, மதுராதிபனே நீ நிறைந்திருப்பதால் அகிலமே அழகானது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்|| 

தொடரும்