About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Saturday, 15 November 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.9

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.9

யதா² த⁴ர்மாத³யஸ்² சார்தா² 
முநிவர்யாநு கீர்திதா:|
ந ததா² வாஸுதே³வஸ்ய 
மஹிமாஹ்யநு வர்ணித:||

  • முநிவர்ய - ஏய் மகரிஷி ஸ்ரேஷ்டரே!
  • த⁴ர்மாத³யஸ்² - அறம் முதலான
  • அர்தா²ஸ் ச - புருஷார்த்தங்கள் 
  • யதா² அநு கீர்திதாஹா - எவ்வாறு தங்களால் வருணிக்கப் பட்டனவோ
  • ததா² - அவ்வாறு
  • வாஸுதே³வஸ்ய - வாஸுதேவனின்
  • மஹிமா - பெருமையானது
  • ந அநு வர்ணிதஹ ஹி - வர்ணிக்கப்படவில்லை அன்றோ?

முனிவரே! தர்மம் முதலிய புருஷார்த்தங்களை வர்ணித்தது போல, பகவானின் பெருமைகளைத் தாங்கள் விளக்கமாக வர்ணிக்கவில்லையே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.87

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.87

ப⁴ரத்³வாஜாஸ்²ரமம் கத்வா 
ராம: ஸத்ய பராக்ரம:|
ப⁴ரதஸ் யாந்திகே ராமோ 
ஹநுமந்தம் வ்யஸர்ஜயத்|| 

  • ஸத்ய பராக்ரமஹ - ஸத்ய பராக்ரமரான
  • ராமஸ் - ஸ்ரீராமர்
  • ப⁴ரத்³வாஜாஸ்²ரமம் - பரத்வாஜர் ஆசிரமத்தை
  • கத்வா - அடைந்து
  • ப⁴ரதஸ்ய - பரதருடைய
  • அந்திகே - ஸமீபத்திற்கு
  • ஹநுமந்தம் - ஹநுமாரை
  • ராமோ - ஸ்ரீராமர்
  • வ்யஸர்ஜயத் - அனுப்பி வைத்தார்

உண்மையான ஆற்றல் படைத்தவனான அந்த ஸ்ரீராமர், பரத்வாஜ ஆசிரமத்திற்குச் சென்று, நந்திக்கிராமத்தில் உள்ள பரதனிடம் ஹநுமாரை அனுப்பினார். 

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்   

திவ்ய ப்ரபந்தம் - பெரியாழ்வார் திருமொழி - 2 ம் பத்து - 2 ம் திருமொழி அறிமுகம்

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து - இரண்டாம் திருமொழி – 11 பாசுரங்கள்
திவ்ய ப்ரபந்தம் – 128 - 138

க்ரிஷ்ணனை தாய்ப்பால் பருக அழைத்தல்

குழந்தை கண்ணபிரானுக்கு எப்போதுமே விளையாட்டு, பசியும் தெரியவில்லை! பொழுது போவதும் தெரியவில்லை! விளையாடினான். உறங்கிவிட்டான். தாயிடம் பால் குடிப்பதையும் மறந்தான். அறியாமையினால் உறங்குவோரை எழுப்பும் பகவானுக்கும் உறக்கம்! குழந்தை பட்டினியாக உறங்கினால் தாய் எப்படித் தரித்திருப்பாள்? 


யசோதை கண்ணனைப் பால் குடிக்க எழுப்புகிறாள். ஆழ்வார் யசோதையாகவே இருந்து கண்ணனை அழைக்கிறார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

108 திவ்ய தேசங்கள் - 039 - திரு பார்த்தன்பள்ளி - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 10

திருமங்கையாழ்வார்
001. திவ்ய ப்ரபந்தம் - 1318 - பெரிய திருமொழி - 4.8.1
கவள யானைக் கொம்பு ஒசித்த* கண்ணன் என்றும் காமரு சீர்க்*
குவளை மேகம் அன்ன மேனி* கொண்ட கோன் என் ஆனை என்றும்*
தவள மாடம் நீடு நாங்கைத்* தாமரையாள் கேள்வன் என்றும்*
பவள வாயாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

002. திவ்ய ப்ரபந்தம் - 1319 - பெரிய திருமொழி - 4.8.2
கஞ்சன் விட்ட வெம் சினத்த* களிறு அடர்த்த காளை என்றும்*
வஞ்சம் மேவி வந்த பேயின்* உயிரை உண்ட மாயன் என்றும்*
செஞ்சொலாளர் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பஞ்சி அன்ன மெல் அடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

003. திவ்ய ப்ரபந்தம் - 1320 - பெரிய திருமொழி - 4.8.3
அண்டர் கோன் என் ஆனை என்றும்* 
ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் என்றும்* 
நான்மறைகள் தேடி ஓடும்* செல்வன் என்றும்* 
வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை* மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
பண்டு போல் அன்று என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

004. திவ்ய ப்ரபந்தம் - 1321 - பெரிய திருமொழி - 4.8.4
கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்* கோல் வளையார் தம் முகப்பே*
மல்லை முந்நீர் தட்டு இலங்கை* கட்டு அழித்த மாயன் என்றும்*
செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பல் வளையாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

005. திவ்ய ப்ரபந்தம் - 1322 - பெரிய திருமொழி - 4.8.5
அரக்கர் ஆவி மாள அன்று* ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற*
குரக்கரசன் என்றும்* கோல வில்லி என்றும்* 
மா மதியை நெருக்கும் மாடம் நீடு நாங்கை*
நின்மலன் தான் என்று என்று ஓதி*
பரக்கழிந்தாள் என் மடந்தை* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

006. திவ்ய ப்ரபந்தம் - 1323 - பெரிய திருமொழி - 4.8.6
ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த* நாதன் என்றும் நானிலம் சூழ்*
வேலை அன்ன கோல மேனி* வண்ணன் என்றும்* 
மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்* 
தேவ தேவன் என்று என்று ஓதி*
பாலின் நல்ல மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

007. திவ்ய ப்ரபந்தம் - 1324 - பெரிய திருமொழி - 4.8.7
நாடி என் தன் உள்ளம் கொண்ட* நாதன் என்றும்* 
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச்*
செல்வன் என்றும்* சிறை கொள் வண்டு சேடு உலவு* 
பொழில் கொள் நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பாடகம் சேர் மெல்லடியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

008. திவ்ய ப்ரபந்தம் - 1325 - பெரிய திருமொழி - 4.8.8
உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்* ஒண் சுடரோடு உம்பர் எய்தா*
நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்* 
தென் திசைக்குத் திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*
தேவ தேவன் என்று என்று ஓதி* பலரும் ஏச என் மடந்தை*
பார்த்தன் பள்ளி பாடுவாளே|

009. திவ்ய ப்ரபந்தம் - 1326 - பெரிய திருமொழி - 4.8.9
கண்ணன் என்றும் வானவர்கள்* காதலித்து மலர்கள் தூவும்*
எண்ணன் என்றும் இன்பன் என்றும்* ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*
திண்ண மாடம் நீடு நாங்கைத்* தேவ தேவன் என்று என்று ஓதி*
பண்ணின் அன்ன மென் மொழியாள்* பார்த்தன் பள்ளி பாடுவாளே|

010. திவ்ய ப்ரபந்தம் - 1327 - பெரிய திருமொழி - 4.8.10
பாருள் நல்ல மறையோர் நாங்கைப்* பார்த்தன் பள்ளிச் செங்கண் மாலை*
வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்* தாய் மொழிந்த மாற்றம்*
கூர் கொள் நல்ல வேல் கலியன்* கூறு தமிழ் பத்தும் வல்லார்*
ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்* இன்பம் நாளும் எய்துவாரே|

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்