About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 10 August 2023

108 திவ்ய தேசங்கள் - 001 - திருவரங்கம் 6

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||001. திருவரங்கம்|| 
||ஸ்ரீரங்கம் - திருச்சி|| 
||முதலாவது திவ்ய க்ஷேத்ரம்||

இந்த திவ்ய தேசத்திற்கான பாசுரங்கள் - 247 - 2

பெரியாழ்வார்
015. திவ்ய ப்ரபந்தம் - 412 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.1
மரவடியைத் தம்பிக்கு* வான் பணையம் வைத்துப் போய்* 
வானோர் வாழ* செருரு உடைய திசைக் கருமம்* 
திருத்தி வந்து உலகாண்ட* திருமால் கோயில்*
திருவடி தன் திரு உருவும்* திருமங்கை மலர்க் கண்ணும் காட்டி நின்று* 
உரு உடைய மலர் நீலம் காற்று ஆட்ட* ஒலி சலிக்கும் ஒளி அரங்கமே| (2)

016. திவ்ய ப்ரபந்தம் - 413 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.2
தன் அடியார் திறத்தகத்துத்* தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்கு மேல்* 
என் அடியார் அது செய்யார்* செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும்* 
மன் உடைய விபீடணற்கா* 
மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க் கண் வைத்த* 
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும்* மற்று ஒருவர்க்கு ஆள் ஆவரே? (2)

017. திவ்ய ப்ரபந்தம் - 414 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.3      
கருள் உடைய பொழில் மருதும்* கதக் களிறும் பிலம்பனையும் கடிய மாவும்* 
உருள் உடைய சகடரையும் மல்லரையும்* உடைய விட்டு ஓசை கேட்டான்* 
இருள் அகற்றும் எறி கதிரோன்* மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி* 
அருள் கொடுத்திட்டு அடியவரை* 
ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே|

018. திவ்ய ப்ரபந்தம் - 415 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.4
பதினாறாம் ஆயிரவர்* தேவிமார் பணி செய்யத்* 
துவரை என்னும்* அதில் நாயகராகி வீற்றிருந்த* 
மணவாளர் மன்னு கோயில்* புது நான் மலர்க் கமலம்* 
எம்பெருமான் பொன் வயிற்றில் பூவே போல்வான்* 
பொது நாயகம் பாவித்து* இறுமாந்து பொன் சாய்க்கும் புனல் அரங்கமே|

019. திவ்ய ப்ரபந்தம் - 416 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.5
ஆமையாய்க் கங்கையாய்* ஆழ் கடலாய் அவனியாய் அரு வரைகளாய்* 
நான்முகனாய் நான்மறையாய்* 
வேள்வியாய்த் தக்கணையாய்த் தானும் ஆனான்* சேமம் உடை நாரதனார்* 
சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்* 
பூ மருவிப் புள் இனங்கள்* புள் அரையன் புகழ் குழறும் புனல் அரங்கமே|

020. திவ்ய ப்ரபந்தம் - 417 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.6
மைத்துனன்மார் காதலியை* மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னர் ஆக்கி* 
உத்தரைதன் சிறுவனையும் உய்யக் கொண்ட* உயிராளன் உறையும் கோயில்* 
பத்தர்களும் பகவர்களும்* பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும்* 
சித்தர்களும் தொழுது இறைஞ்சத்* திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே|

021. திவ்ய ப்ரபந்தம் - 418 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.7
குறள் பிரமசாரியாய்* மாவலியைக் குறும்பு அதக்கி அரசு வாங்கி* 
இறைப் பொழுதில் பாதாளம் கலவிருக்கை* 
கொடுத்து உகந்த எம்மான் கோயில்* 
எறிப்பு உடைய மணிவரை மேல்* 
இளஞாயிறு எழுந்தாற் போல் அரவணையின் வாய்* 
சிறப்பு உடைய பணங்கள் மிசைச்* 
செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே|

022. திவ்ய ப்ரபந்தம் - 419 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.8
உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றி * 
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க* வாய் அலறத் தெழித்தான் கோயில்*
உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட* 
வரம்பு உற்ற கதிர்ச் செந்நெல்* 
தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே|

023. திவ்ய ப்ரபந்தம் - 420 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.9
தேவு உடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்* 
மூவுருவில் இராமனாய்க்* கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்* 
சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப்* 
பூ அணை மேல் துதைந்து எழு* 
செம்பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே|

024. திவ்ய ப்ரபந்தம் - 421 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.10
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன்* செருச் செய்யும் நாந்தகம் என்னும்* 
ஒரு வாளன் மறையாளன் ஓடாத படையாளன்* விழுக்கை யாளன்* 
இரவு ஆளன் பகலாளன் எனையாளன்* ஏழு உகப் பெரும் புரவாளன்* 
திருவாளன் இனிதாகத்* திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே|

025. திவ்ய ப்ரபந்தம் - 422 - பெரியாழ்வார் திருமொழி - 4.9.11
கைந்நாகத்து இடர் கடிந்த* கனல் ஆழிப் படை உடையான் கருதும் கோயில்* 
தென்நாடும் வடநாடும் தொழ நின்ற* திருவரங்கத் திருப்பதியின் மேல்* 
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டு சித்தன்* விரித்த தமிழ் உரைக்க வல்லார்* 
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக் கீழ்* 
இணை பிரியாது இருப்பர் தாமே| (2)

026. திவ்ய ப்ரபந்தம் - 423 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.1
துப்புடையாரை அடைவது எல்லாம்* சோர்விடத்துத் துணை ஆவர் என்றே* 
ஒப்பிலேன் ஆகிலும் நின் அடைந்தேன்* ஆனைக்கு நீ அருள் செய்தமையால்* 
எய்ப்பு என்னை வந்து நலியும் போது* 
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்* 
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்* 
அரங்கத்து அரவணைப் பள்ளியானே| (2)

027. திவ்ய ப்ரபந்தம் - 424 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.2
சாம் இடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்* 
சங்கொடு சக்கரம் ஏந்தினானே!* 
நா மடித்து என்னை அனேக தண்டம்* செய்வதா நிற்பர் நமன் தமர்கள்* 
போம் இடத்து உன் திறத்து எத்தனையும்* 
புகா வண்ணம் நிற்பதோர் மாயை வல்லை* 
ஆம் இடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்* 
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|

028. திவ்ய ப்ரபந்தம் - 425 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.3
எல்லையில் வாசல் குறுகச் சென்றால்* எற்றி நமன் தமர் பற்றும் போது* 
நில்லு மின் என்னும் உபாயம் இல்லை* நேமியும் சங்கமும் ஏந்தினானே!
சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம்* 
சொல்லினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும்* 
அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|

029. திவ்ய ப்ரபந்தம் - 426 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.4
ஒற்றை விடையனும் நான்முகனும்* உன்னை அறியாப் பெருமையோனே!* 
முற்ற உலகு எல்லாம் நீயே ஆகி* மூன்று எழுத்து ஆய முதல்வனே!ஓ!*
அற்றது வாழ்நாள் இவற்கு என்று எண்ணி* அஞ்ச நமன் தமர் பற்றல் உற்ற* 
அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|

030. திவ்ய ப்ரபந்தம் - 427 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.5
பை அரவின் அணைப் பாற்கடலுள்* பள்ளி கொள்கின்ற பரம முர்த்தி!* 
உய்ய உலகு படைக்க வேண்டி* உந்தியிற் தோற்றினாய் நான்முகனை* 
வைய மனிசரைப் பொய் என்று எண்ணிக்* காலனையும் உடனே படைத்தாய்* 
ஐய! இனி என்னைக் காக்க வேண்டும்* அரங்கத்து அரவணைப் பள்ளியானே|

031. திவ்ய ப்ரபந்தம் - 428 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.6
தண்ணனவு இல்லை நமன் தமர்கள்* சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர்* 
மண்ணொடு நீரும் எரியும் காலும்* மற்றும் ஆகாசமும் ஆகி நின்றாய்!*
எண்ணலாம் போதே உன் நாமம் எல்லாம்* 
எண்ணினேன், என்னைக் குறிக் கொண்டு என்றும்* 
அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப் பள்ளியானே|

032. திவ்ய ப்ரபந்தம் - 429 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.7
செஞ்சொல் மறைப் பொருள் ஆகி நின்ற* தேவர்கள் நாயகனே! எம்மானே!* 
எஞ்சலில் என்னுடை இன் அமுதே!* ஏழ் உலகும் உடையாய்! என் அப்பா!*
வஞ்ச உருவின் நமன் தமர்கள்* வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது* 
அஞ்சலம் என்று என்னைக் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப்  பள்ளியானே|

033. திவ்ய ப்ரபந்தம் - 430 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.8
நான் ஏதும் உன் மாயம் ஒன்று அறியேன்* நமன் தமர் பற்றி நலிந்திட்டு* 
இந்த ஊனே புகே என்று மோதும் போது* 
அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்* 
வான் ஏய் வானவர் தங்கள் ஈசா!* மதுரைப் பிறந்த மாமாயனே!* 
என் ஆனாய்! நீ என்னைக் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப்  பள்ளியானே|

034. திவ்ய ப்ரபந்தம் - 431 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.9
குன்று எடுத்து ஆநிரை காத்த ஆயா!* கோ நிரை மேய்த்தவனே! எம்மானே!* 
அன்று முதல் இன்று அறுதியாக* ஆதியஞ் சோதி மறந்து அறியேன்* 
நன்றும் கொடிய நமன் தமர்கள்* நலிந்து வலிந்து என்னைப் பற்றும் போது* 
அன்று அங்கு நீ என்னைக் காக்க வேண்டும்* 
அரங்கத்து அரவணைப்  பள்ளியானே|

035. திவ்ய ப்ரபந்தம் - 432 - பெரியாழ்வார் திருமொழி - 4.10.10
மாயவனை மதுசூதனனை* மாதவனை மறையோர்கள் ஏத்தும்* 
ஆயர்கள் ஏற்றினை அச்சுதனை* அரங்கத்து அரவணைப் பள்ளியானை*
வேயர் புகழ் வில்லிபுத்தூர் மன்* விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்* 
தூய மனத்தனர் ஆகி வல்லார்* தூமணி வண்ணனுக்கு ஆளர் தாமே| (2)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

திவ்ய ப்ரபந்தம் - திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி தனியன் 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

தனியன் 3

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை 
(இரு விகற்ப நேரிசை வெண்பா)

பாண்டியன் கொண்டாடப்* பட்டர்பிரான் வந்தானென்று* 
ஈண்டிய சங்கம் எடுத்து ஊத* 
வேண்டிய வேதங்கள் ஓதி* விரைந்து கிழி அறுத்தான்* 
பாதங்கள் யாமுடைய பற்று|

  • பாண்டியன் - ஸ்ரீ வல்லப தேவன் எனகிற பாண்டிய ராஜன்
  • கொண்டாட - மேன்மேல் ஏத்த
  • பட்டர்பிரான் - ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு தலைவன்
  • வந்தான் என்று - எழுந்து அருளினான் என்று
  • ஈண்டிய - கூடின அநேகமான
  • சங்கம் எடுத்து - சங்குகளைக் கொண்டு
  • ஊத - அநேகர் சப்திக்க
  • வேண்டிய - அக்காலத்துக்கு ஆவஸ்யகமாகிய
  • வேதங்கள் - வேதார்தங்களை
  • ஓதி - தெரியச் சொல்லி
  • விரைந்து- தாமசியாமல்
  • கிழி - வித்யா சுல்கமாகிய பொருள் முடிப்பை
  • யறுத்தான் - அறுத்தவனுடைய
  • பாதங்கள் - திருவடிகளே
  • யாமுடைய - நாங்கள் ஆஸ்ரயமாக உடைய

பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் “நமக்குப் பரதத்வ நிர்ணயம் பண்ணிக் கொடுக்க பட்டர்பிரான் வந்தார்” என்று கொண்டாட, அங்கிருந்தவர்கள் சங்கங்களை முழங்கி வெற்றி கோஷமிடும்படி, வேதத்தில் தேவையான ப்ரமாணங்களை எடுத்து விளக்கி ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டி, பொற்கிழி அறுந்து விழும்படி செய்த பெரியாழ்வாரின் திருவடிகளே நமக்குத் தஞ்சம்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - த்யான ஸ்லோகம் 8

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

த்⁴யான ஸ்லோகம் - 8

மூகம் கரோதி வாசாலம் 
பங்கு³ம் லங்க⁴யதே கி³ரிம்|
யத் க்ருபா தமஹம் வந்தே³ 
பரமானந்த³ மாத⁴வம்||

  • மூகம் - வாய் பேசாதவரை
  • கரோதி  - செய்கிறது, மாற்றுகிறது
  • வாசாலம்  - சரளமாகப் பேசும் ஆற்றல் கொண்டவராக
  • பங்கு³ம் - நடக்க முடியாதவரை 
  • லங்க⁴யதே - கடக்க வைக்கிறது, தாண்ட வைக்கிறது
  • கி³ரிம்  - மலையை
  • யத் க்ருபா - யாருடைய கருணையானது, அருளானது 
  • தம் அஹம் - அவரை நான் 
  • வந்தே³  - வணங்குகிறேன், போற்றுகிறேன்
  • பரமானந்த³ - எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும்
  • மாத⁴வம் - அந்த மாதவனை, ஸ்ரீ கிருஷ்ணரை 

யாருடைய கருணையானது, வாய் பேச முடியாதவனையும் சரளமாகப் பேச வைக்கிறதோ; நடக்க முடியாதவனையும் உயர்ந்த மலையைக் கடக்க வைக்கிறதோ; அந்த எல்லையற்ற ஆனந்த வடிவமாக இருக்கும் மாதவனை (ஸ்ரீ கிருஷ்ணரை) நான் மனதார வணங்குகிறேன்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் - 1.1.5

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² ப்ரத²ம: அத்⁴யாய꞉||
||நைமிஷ க்ஷேத்ரே ஸ்ரீமத் பாகவத விஷயே  
ஸூதம், ப்ரதி ஸொ²னகாதி முனீநாம் ப்ரஸ்ந:||

||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்|| 
||முதல் ஸ்கந்தம்||
||முதல் அத்யாயம்|| 
||ஞானிகளின் கேள்விகள்||

ஸ்லோகம் - 1.1.5

த ஏகதா³ து முநய꞉ ப்ராதர் 
ஹுத ஹுதாக்³ நய꞉|
ஸத் க்ருதம் ஸூதமா ஸீநம் 
பப்ரச்சு²ரித³ மாத³ ராத்||

  • ஏகதா³ - ஓர் சமயம்
  • ப்ராதர் - ப்ராத காலத்தில்
  • த முநயஹ து - அந்த மகரிஷிகள் ஓ எனில்
  • ஹுத ஹுதாக்³ நயஹ - நித்ய நைமித்திக காரியங்களின் பொருட்டு ஹோமம் செய்யப்பட்ட அக்னியை உடையவர்களாய்
  • ஸத் க்ருதம் - நன்கு உபசரிக்கப்பட்டு
  • ஆஸீநம் - அமர்ந்திருப்பவரான
  • ஸூதம் - ஸூத மஹரிஷியை
  • ஆத³ராத் - அன்போடு கூட
  • இத³ம் - மேற்சொல்லப் போவதை
  • பப்ரச்சு²ர் - கேட்டனர்

ஒரு நாள் காலை, மரியாதை நிமித்தமாக முனிவர்கள் யாகத் தீயை எரித்துக் கொண்டு இருந்தனர். அங்கு அமர்ந்திருந்த ஸ்ரீல சுகதேவ கோ ஸ்வாமியிடம் இது குறித்து உரிய மரியாதையுடன் பின்வருமாறு வினவினார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்