About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Monday, 7 August 2023

திவ்ய ப்ரபந்தம் - பொது தனியன் 1

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

பொது தனியன் 1

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)

ஸ்ரீ ஸை²லேஸ² த³யாபாத்ரம்* 
தீ⁴ப⁴க்த்யாதி³ கு³ணார்ணவம்*
யதீந்த்³ர ப்ரவணம் வந்தே³* 
ரம்ய ஜாமாதரம் முநிம்||

  • ஸ்ரீ ஸை²லேஸ² - ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப் பிள்ளை என்று அழைக்கப்படும் ஆசாரியரின் எல்லையற்ற
  • த³யா பாத்ரம் - கருணைக்கு இருப்பிடமானவரை / அருள் பாத்திரமாய் விளங்குபவரை
  • தீ⁴ - சிறந்த ஞானம் (அறிவு)
  • ப⁴க்தி - இறைவனிடம் கொண்ட பக்தி.
  • ஆதி³ - முதலிய
  • கு³ணார்ணவம் - நற்குணங்களின் கடலாக விளங்குபவரை
  • யதீந்த்³ர - யதிகளின், துறவிகளின் தலைவரான ஸ்ரீ ராமானுஜரிடம்
  • ப்ரவணம் - மிகுந்த ஈடுபாடு, பக்தி கொண்டவரை
  • வந்தே³ - நான் வணங்குகிறேன், நமஸ்கரிக்கிறேன்
  • ரம்ய ஜாமாதரம் - அழகிய மணவாளன் என்னும் திருநாமம் கொண்ட
  • முநிம் - முனிவரை, மணவாள மாமுனிகளை 

ஸ்ரீ சைலேசர் என்ற திருவாய்மொழிப்பிள்ளை, ஆசார்யரின் எல்லையற்ற கருணைக்குப் பாத்திரமானவரும், பக்தி, ஞானம், வைராக்ய குணங்கள் நிறைந்த சமுத்திரம் போன்று இருப்பவரும், யதிராஜரான ராமானுஜர் மீது அளவு கடந்த பக்தி நிறைந்தவருமான அழகிய மணவாள மாமுனிகளை அடியேன் வணங்குகிறேன். 

தனியனைப் பாடியவர்: ரங்கநாயகம் என்னும் சிறுவன் வடிவில் வந்த, சாட்சாத் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளே.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - அறிமுகம் - 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தையின் அத்யாயம் சிறிய விளக்கம் 2

பத்தாவது அத்யாயம் - விபூதி யோகம்
அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது. இயற்கையில் உள்ள இறைவனின் அவதாரங்களை பற்றி விவரிப்பது.

பதினொன்றாவது அத்யாயம் - விஷ்வரூப தர்ஷந யோகம்
ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது. அர்ஜுனன் கண்ணால் பார்த்த முதலும் முடிவும் இல்லா இறைவனின் தோற்றத்தை விவரிப்பது.

பன்னிரண்டாவது அத்யாயம் - பக்தி யோகம் 
துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது. இறைவனிடம் பக்தி செலுத்தும் முறைகளையும், இறைவனுக்குப் பிரியமானவர்களை பற்றி விவரிப்பது.

பதின்மூன்றாவது அத்யாயம் - க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல். இயற்கையின் அங்கங்கள் அதன் தன்மைகள் இயக்கத்தின் கர்த்தா பற்றி விளக்குவது

பதினான்காவது அத்யாயம் - குணத்ரய விபாக யோகம்
பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே. சத்வ ரஜோ தமஸ் மூன்று குணங்களை பற்றி விளக்குவது.

பதினைந்தாவது அத்யாயம் - புருஷோத்தம யோகம்
தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது. பரமாத்மா ஜீவாத்மா பற்றி விளக்குவது.

பதினாறாவது அத்யாயம் - தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்
இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது. அசுர குணங்களை பற்றி விளக்குவது.

பதினேழாவது அத்யாயம் - ஷ்ரத்தாத்ரய விபாக யோகம்
சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது. மூன்று குணங்களால் மாறும் ஈடுப்பாட்டை விளக்குவது.

பதினெட்டாவது அத்யாயம் - மோட்ச சன்யாஸ யோகம்
யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது. மூன்று குணங்களால் மாறும் அறிவு, செயல், செய்பவன், புத்தி, சுகம் பற்றி விவரிப்பது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பாகவதம் – அறிமுகம் 4

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
 ||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

ஒரு மரத்தின் சிறப்பு அதன் பழத்தின் ருசியில் தெரியும் வரும். அந்த பழம் ஒரு கிளியின் அலகினால் கொத்தப்பட்டிருந்தால் அது மிகவும் தித்திப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.  ஸ்ரீமத் பாகவதம், வேத சாஸ்திரங்கள் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகும். முக்தியடைந்த ஆத்மாக்கள் உட்பட அனைவராலும் சுவைக்கப்படுவதற்கு உகந்த நிலையில் இருந்த இதன் அமிர்த ரஸம், சுக பிரம்ம ரிஷியின் (’சுக என்றால் ’கிளி’ என்று பொருள்) உதடுகளிலிருந்து வெளிப்பட்டதால், மேலும் அதிகமான சுவையுடன் திகழ்கின்றது என்பது பொருள். வியாசர் தன் மகன் சுகருக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசித்தார். ஸ்ரீமத் பாகவதம் 12 ஸ்கந்தங்களும், 36,000 பாடல்களும் கொண்டது. இதில் 25 கீதைகளும், பல அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுஷ்டுப் சந்தத்தில் அமைந்துள்ளன பாடல்கள். இதில் ஒவ்வொரு அத்யாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடல் உள்ளது. ஸ்ரீமத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல கேட்ட மாத்திரத்தில் நான்கு புருஷார்த்தங்களையுமே அளிக்க வல்லது. வேத அத்யயனம் செய்வது போல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி அர்த்தத்தோடு உள்வாங்கிக் கொண்டார் சுகர். பின்னர் சுகமுனிவர் பரீட்சித்து மன்னனுக்குச் சொன்னார். 

ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்தால் ஸம்ஸ்க்ருதம் புரியா விட்டாலும், அர்த்தம் தெரியாவிட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கே பாகவத சப்தம் மகிழ்ச்சி தருகிறதென்றால், ப்ரும்ம ஸ்வரூபாக விளங்கும் ஸ்ரீ சுகருக்கு எப்படி இருந்திருக்கும்? பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தவித்தார். ஏழு நாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி காட்ட மாட்டார்களா என்று வருந்திக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும் கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.

பாகவதத்தில் கூறப்பட்டுள்ளவை: 

சிருஷ்டியின் தொடக்கம், அண்டச்சராசரங்களும், பஞ்ச பூதங்களும், உலகம் தோன்றியதும் அனைத்தும் பாகவதத்தில் உள்ளது. இதில் சொல்லப்படாத வேத வேதாந்த கருத்துக்களே இல்லை. பகவத் அவதாரங்கள், பகவானின் லீலைகள், புராண கதைகள் அனைத்தும் நடந்ததை நடந்த படி சொல்லி நமக்கு உள்ளங்கை நெல்லிக் கனியாக சனாதன தர்மத்தையும், பக்தியையும், பகவானை அடையும் மார்கத்தையும் போதிக்கிறது. பதினெட்டாயிரம் ஸ்லோகங்களில் சொல்லப்பட்டு இருப்பவை ஏராளம். அந்த ரசானுபாவத்தில் மூழ்கி முழு பாகவதத்தையும் படித்தும் கேட்டும் அனுபவிக்க ஸ்ரீ கிருஷ்ண பகவான் அருள் புரிவான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 3

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய|| 
||ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்||

||வியாஸர் வணக்கம்||

வ்யாஸம் வஸிஷ்ட² நப்தாரம் 
ஸ²க்தே: பௌத்ரம் அகல் மஷம்|
பராஸ²ராத் மஜம் வந்தே³ 
ஸு²க தாதம் தபோ நிதி⁴ம்||

  • வ்யாஸம் - வியாசரை
  • வஸிஷ்ட² - வசிஷ்டருடைய
  • நப்தாரம் - பேரனாகியவரை
  • ஸ²க்தேஃ - சக்தி முனிவருடைய
  • பௌத்ரம் - பேரனாகியவரை
  • அகல் மஷம் - களங்கமற்றவரை
  • பராஸ²ராத் - பராசர முனிவருடைய
  • மஜம் - மகனாகியவரை
  • வந்தே³ - வணங்குகிறேன்
  • ஸு²க - சுகதேவருடைய
  • தாதம் - தந்தையாகியவரை
  • தபோ நிதி⁴ம் - தவத்தின் திருவுருவாக இருப்பவரை, தவத்தின் செல்வமாக இருப்பவரை

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தைத் தொகுத்து அளித்தவர் வியாஸ பகவான். அவரை முதலில் வணங்குவோம். 

ஸ்ரீ இராமாயணத்தில் மிகவும் சிறந்து விளங்குபவர் வஸிஷ்டர். வஸிஷ்டரின் குமாரர் ஸக்தி. ஸக்தியின் குமாரர் பராஸரர். பராஸரரின் குமாரர் வியாஸர். வியாஸரின் குமாரர் ஸுகப் பிரம்மம். இவ்வாறு திருமாலின் தமராகப் பல தலைமுறைகளாக இருந்து வரும் நல்ல மரபில் குற்றமற்ற தவச் செல்வராக விளங்குபவர் வியாஸ பகவான். இத்தகைய பெருமைக்குரிய வியாஸ பகவானை முதலில் வணங்குவோம்.

(வசிஷ்டரின் பேரனும், சக்தி முனிவரின் பேரனும், பராசர முனிவரின் மகனும், சுகதேவரின் தந்தையும், தவத்தின் திருவுருவமாக விளங்குபவருமான வியாசரை நான் வணங்குகிறேன்.)

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்