About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 19 November 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 153

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 153

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 15

||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி

ஸ ஸுராஸுர க³ந்த⁴ர்வம்‌
ஸயக்ஷோரக³ ராக்ஷஸம்‌|
ஜக³த்வஸே² வர்த்ததேத³ம்‌
க்ருஷ்ணஸ்ய ஸ சராசரம்||

  • ஸ - அந்த
  • ஸுர அஸுர - தேவர்கள் மற்றும் அசுரர்களுடனும்
  • க³ந்த⁴ர்வம் - கந்தர்வர்களுடனும்
  • ஸ யக்ஷ உரக³ - யக்ஷர்கள், நாகர்களுடனும், பாம்புகளுடனும்
  • ராகஷஸம் - ராட்சசர்களுடனும்
  • ஜக³த் - இந்த உலகம், பிரபஞ்சம்
  • வஸே² - கட்டுப்பாட்டில், வசத்தில்
  • வர்த்ததே - இருக்கிறது
  • இத³ம் - இந்த 
  • க்ருஷ்ணஸ்ய - கிருஷ்ணனுடைய
  • ஸ சராசரம் - அசையும் மற்றும் அசையாத அனைத்துப் பொருட்களுடனும், உயிரினங்களுடனும்

தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடனும், அசையும் மற்றும் அசையாதவற்றுடனும் கூடிய மொத்த அண்டமும் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழே இருக்கிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment