About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 19 November 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.10

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.10

ந யத்³வசஸ்² சித்ர பத³ம் ஹரேர் யஸோ²
ஜக³த் பவித்ரம் ப்ரக்³ருணீத கர்ஹிசித்|
தத்³வாயஸம் தீர்த² முஸ²ந்தி மாநஸா
ந யத்ர ஹம்ஸா நிரமந்த்யு ஸி²க்க்ஷயா:||

  • சித்ர பத³ம் - அழகான பதங்களோடு கூடியதான
  • யத்³ வசஸ்² - எந்த வாக்கானது
  • ஜக³த் பவித்ரம் - உலகை பரிசுத்தமாக்கக் கூடிய
  • ஹரேர் யஸோ² - ஸ்ரீ வாஸுதேவனது கீர்த்தியை
  • கர்ஹிசித் - ஓர் இடத்திலும்
  • ந  ப்ரக்³ருணீத - சொல்லவில்லையோ
  • தத்³ - அப்படிப்பட்ட வாக்கை
  • வாயஸம் தீர்த²ம் - எச்சில் குழியாகவே
  • உஸ²ந்தி - எண்ணுகிறார்கள்
  • மாநஸா -  ஏனென்றால் ஸத்வ குண பூயிஷ்டமான மனத்தை உடையவர்களும் 
  • உஸி²க்க்ஷயாஹ - அழகான பரப்பிரும்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களுமான
  • ஹம்ஸா - பரம ஹம்ச பரிவ் ராஜகர்களான ஸன்யாஸிகள்
  • யத்ர - அந்த வாக்கில்
  • ந நிரமந்த்யு - சந்தோஷம் அடைவதில்லை

எச்சிலைத் தின்னும் காக்கைகள் இருக்குமிடத்திற்கு, மானஸஸரஸ்ஸில் விளையாடும் அன்னப் பறவைகள் வருமா? அது போல, அழகான வர்ணனைகள் இருந்தும் அனைத்து உலகையும் பரிசுத்தமாக்கும் வாசுதேவனின் பெருமை கூறப்படாத நூலை, பகவானது திருவடித் தாமரையில் பக்தி பூண்ட, சத்துவ குணம் படைத்த பெரியோர்கள் ஒருக்காலும் கேட்க மாட்டார்களே?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment