About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 3 October 2025

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 150

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் - 150

ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய 
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 12

||உத்தர பீடி²கா||
||உத்தர பாகம்||
பலஸ்²ருதி

இமம்‌ ஸ்தவம தீ⁴யாந:
ஸ்²ரத்³தா⁴ ப⁴க்தி ஸமந்வித:|
யுஜ்யேதாத்மா ஸுக² க்ஷாந்தி
ஸ்ரீரீத்⁴ருதி: ஸ்ம்ருதி கீர்த்திபி⁴:||

  • இமம் – இந்த
  • ஸ்தவம் –  ஸ்தோத்திரத்தை
  • அதீ⁴யாநஸ் – படிப்பவர், பாராயணம் செய்பவர்
  • ஸ்²ரத்³தா⁴ – நம்பிக்கையுடனும்
  • ப⁴க்தி – பக்தியுடனும்
  • ஸமந்விதஹ – கூடியவராய்
  • யுஜ்யேத – அடைகிறார்
  • ஆத்மா – அந்த மனிதன், ஜீவன்
  • ஸுக²  – இன்பம்
  • க்ஷாந்தி – பொறுமை
  • ஸ்ரீ – செல்வம்
  • த்⁴ருதிஸ் – தைரியம், மன உறுதி
  • ஸ்ம்ருதி – நல்ல புத்தி, நினைவாற்றல்
  • கீர்த்திபி⁴ஹி – புகழ் ஆகியவற்றை

யார் ஒருவர் வாசுதேவனின் ஆயிரம் பெயர்கள் அடங்கிய இந்தப் பாடலை, முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பாராயணம் செய்கிறாரோ, அவர் இன்பம், பொறுமை, செல்வம், மன உறுதி, நல்ல நினைவாற்றல் மற்றும் நற்புகழ் ஆகிய அனைத்தையும் அடைவார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

ஸ்ரீமத் பகவத் கீதை - 3.14

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||

ஸ்லோகம் - 3.14 

அந்நாத்³ ப⁴வந்தி பூ⁴தாநி 
பர்ஜந் யாத³ந்ந ஸம்ப⁴வ:|
யஜ்ஞாத்³ ப⁴வதி பர்ஜந்யோ 
யஜ்ஞ: கர்ம ஸமுத்³ப⁴வ:||

  • அந்நாத்³ - தானியங்களிலிருந்து  
  • ப⁴வந்தி - வளர்கின்றன 
  • பூ⁴தாநி - பௌதிக உடல்கள் 
  • பர்ஜந்யாத் - மழையிலிருந்து 
  • அந்ந - உணவுத் தானியங்கள் 
  • ஸம்ப⁴வஹ - உண்டாக்கப்படுகின்றன 
  • யஜ்ஞாத்³ - யாகங்களைச் செய்வதிலிருந்து  
  • ப⁴வதி - சாத்தியமாகிறது 
  • பர்ஜந்யோ - மழை 
  • யஜ்ஞஹ் - யாகங்கள் 
  • கர்ம - விதிக்கப்பட்ட கடமைகள் 
  • ஸமுத்³ப⁴வஹ - பிறந்த

மழையிலிருந்து உணவு தானியங்கள் உண்டாக்கப்படுகின்றன. தானியங்களிலிருந்து பௌதிக உடல்கள் வளர்கின்றன. யாகங்களை செய்வதிலிருந்து மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகங்கள் பிறக்கவும் சாத்தியமாகிறது.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.7

த்வம் பர்யடந் அர்க இவ த்ரிலோகீம்
அந்தஸ்² சரோ வாயுரி வாத்ம ஸாக்ஷீ|
பராவரே ப்³ரஹ்மணி த⁴ர்மதோ வ்ரதை:
ஸ்நாதஸ்ய மே ந்யூநமலம் விசக்ஷ்வ||

  • த்வம் அர்க இவ - நீர் சூரிய பகவானை போன்று
  • த்ரிலோகீம் பர்யடந் - மூன்று உலகங்களையும் சுற்றுகிறவராயும் இருக்கின்றீர் 
  • வாயுரி இவ - வாயு பகவானை போன்று
  • அந்தஸ்²சரோ - உள்ளே சஞ்சரிக்கிறவராயும் இருக்கிறீர்
  • ஆத்ம ஸாக்ஷீ - அதனால் புத்தி விருத்தியை அறிந்தவராயும் இருக்கிறீர்
  • பராவரே - பரப் பிரம்மத்திலும்
  • ப்³ரஹ்மணி - வேதத்திலும்
  • த⁴ர்மதோ - முறையே யோகா அப்யாஸத்தாலும்
  • வ்ரதைஹி - ஸ்வாத்யாயம் முதலிய விருதாதிகளாலும்
  • ஸ்நாதஸ்ய - மிகவும் கரை கண்டவனான
  • மே ந்யூநம் - எனது ஐயத்தை
  • அலம் விசக்ஷ்வ - நன்றாக தெளிவாக்குவீராக

தாங்கள், கதிரவனைப் போன்று மூவுலகங்களிலும் சஞ்சரிக்கிறீர்கள். காற்றைப் போன்று உடலுள்ளும் உலாவுகிறீர்கள். ஆகவே, அனைவரின் உள்ளக்கிடக்கையையும் அறிந்தவர். நானோ யோகாப்பியாஸத்தினால் பிரும்மத்தையும், ஸ்வாத்யாயம் முதலிய விரதங்களால் வேதத்தையும் ஓரளவு அறிந்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு எந்த விதத்திலாவது குறை என்கிற ஐயப்பாட்டைத் தெளிவாக்குவீரா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் - 1.1.85

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||

||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்|| 
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||

உலகின் உன்னத மனிதனைக் குறித்து 
நாரதரிடம் கேட்ட வால்மீகி 
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்

ஸ்லோகம் - 1.1.85

அபி⁴ஷிச்ய ச லங்காயாம் 
ராக்ஷ ஸேந்த்³ரம் விபீ⁴ஷணம்|
க்ருதக்ருத் யஸ் ததா³ ராமோ 
விஜ்வர: ப்ரமு மோத³ ஹ|| 

  • ததா³ - அப்பொழுது
  • ராமோ -  ஸ்ரீராமர்
  • விபீ⁴ஷணம் - விபீஷணரையே
  • லங்காயாம் -  இலங்கையில்
  • ராக்ஷ ஸேந்த்³ரம் - இராக்ஷச மன்னராக
  • அபி⁴ஷிச்ய ச - பட்டாபிஷேகம் செய்து
  • க்ருத க்ருத் யஸ் - எடுத்த காரியத்தை முற்றும் முடித்தவராய்
  • விஜ்வர: -  கவலை நீங்கியவராய்
  • ப்ரமு மோத³ - சந்தோஷித்தார்
  • ஹ - ஆச்சர்யம்

ஸ்ரீராமர், லங்கையில் விபீஷணனை, ராட்சசர்களின் இந்திரன்/மன்னனாக நியமித்ததால், கவலையில் இருந்து விடுபட்டு, உண்மையில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்