About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 3 October 2025

ஸ்ரீமத் பாகவதம் - 1.5.7

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:|| 
||ஸ்ரீமத் வரவர முநயே நம:|| 

||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||

||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² பஞ்சமோ அத்⁴யாய꞉||
||நாரத வ்யாஸ ஸம்வாத: 
பகவத் குணகர்ம வர்ணனஸ்ய மஹத்வம் 
தேவர்ஷி நாரத கர்த்ருகம் ஸ்வகீய 
பூர்வ ஜன்ம வ்ருத்தாந்த கதனம் ச:||
 
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||ஐந்தாம் அத்யாயம்||
||வியாஸ தேவருக்கு ஸ்ரீமத் பாகவதம் பற்றிய 
நாரதரின் அறிவுரைகள்||

ஸ்லோகம் 1.5.7

த்வம் பர்யடந் அர்க இவ த்ரிலோகீம்
அந்தஸ்² சரோ வாயுரி வாத்ம ஸாக்ஷீ|
பராவரே ப்³ரஹ்மணி த⁴ர்மதோ வ்ரதை:
ஸ்நாதஸ்ய மே ந்யூநமலம் விசக்ஷ்வ||

  • த்வம் அர்க இவ - நீர் சூரிய பகவானை போன்று
  • த்ரிலோகீம் பர்யடந் - மூன்று உலகங்களையும் சுற்றுகிறவராயும் இருக்கின்றீர் 
  • வாயுரி இவ - வாயு பகவானை போன்று
  • அந்தஸ்²சரோ - உள்ளே சஞ்சரிக்கிறவராயும் இருக்கிறீர்
  • ஆத்ம ஸாக்ஷீ - அதனால் புத்தி விருத்தியை அறிந்தவராயும் இருக்கிறீர்
  • பராவரே - பரப் பிரம்மத்திலும்
  • ப்³ரஹ்மணி - வேதத்திலும்
  • த⁴ர்மதோ - முறையே யோகா அப்யாஸத்தாலும்
  • வ்ரதைஹி - ஸ்வாத்யாயம் முதலிய விருதாதிகளாலும்
  • ஸ்நாதஸ்ய - மிகவும் கரை கண்டவனான
  • மே ந்யூநம் - எனது ஐயத்தை
  • அலம் விசக்ஷ்வ - நன்றாக தெளிவாக்குவீராக

தாங்கள், கதிரவனைப் போன்று மூவுலகங்களிலும் சஞ்சரிக்கிறீர்கள். காற்றைப் போன்று உடலுள்ளும் உலாவுகிறீர்கள். ஆகவே, அனைவரின் உள்ளக்கிடக்கையையும் அறிந்தவர். நானோ யோகாப்பியாஸத்தினால் பிரும்மத்தையும், ஸ்வாத்யாயம் முதலிய விரதங்களால் வேதத்தையும் ஓரளவு அறிந்துள்ளேன். அப்படிப்பட்ட எனக்கு எந்த விதத்திலாவது குறை என்கிற ஐயப்பாட்டைத் தெளிவாக்குவீரா?

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment