||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||039 - திரு பார்த்தன்பள்ளி||
||திருநாங்கூர்||
||முப்பத்தி ஒண்பதாவது திவ்ய க்ஷேத்ரம்||
||ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள் திருக்கோயில்||
||ஸ்ரீ தாமரை நாயகி தாயார் ஸமேத ஸ்ரீ தாமரையாள் கேள்வன் பெருமாள்||
||திருவடிகளே சரணம்||
- பெருமாள் மூலவர் - தாமரையாள் கேள்வன்
- பெருமாள் உற்சவர் - பார்த்தசாரதி
- தாயார் மூலவர் - தாமரை நாயகி
- திருமுக மண்டலம் திசை - மேற்கு
- திருக்கோலம் - நின்ற
- புஷ்கரிணி/தீர்த்தம் - கட்க, ஸங்கர ஸரஸ் (கங்கா)
- விமானம் - நாராயண
- ஸ்தல விருக்ஷம் - மூங்கில், நாகலிங்க
- ப்ரத்யக்ஷம் - பார்த்தன், 11 ருத்திரர்கள், இந்திரன்
- ஸம்ப்ரதாயம் - தென் கலை
- மங்களாஸாஸநம் - 1 ஆழ்வார்
- பாசுரங்கள் - 10
--------------------
ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி
ஸ்தல புராணம்
உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் கையில் கத்தி இருக்கும். அருகே கோலவல்லி ராமர் கையில் வில்லுடன் அருள் பாலிக்கிறார்.
தசரதர் குழந்தை பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அப்போது நாராயணன் ராமனாக தனக்கு குழந்தையாக அவதரிக்க போகிறார் என்பது இவருக்கு தெரிந்தது. தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள நாராயணனை அவர் வேண்டினார். அப்போது யாக குண்டத்திலிருந்து நாராயணன் தன் இரு தேவியருடன் தோன்றி, தான் எப்படி இருப்பேன் என்பதை தசரதருக்கு காட்டினார். இரு தேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழ முடியாது என்பதால், தங்கள் கண் குளிர ராமனை தரிசித்தனர். இந்தக் காட்சி சிலையாக வடிக்கப்பட்டு இத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ராமர் யாக குண்டத்திலிருந்து காலைத் தூக்கி எழுந்து வருவது போல இரு தேவியருடன் காட்சி தருவது அதிசயத்திலும் அதிசயம். அர்ஜுனனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண் திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக் குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், "அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,' என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன், "கிருஷ்ணா! கிருஷ்ணா!' என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து, "இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,' என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்


No comments:
Post a Comment